திவிக சென்னை மயிலை பகுதி தோழர்களின் களப்பணிகள் 21072017
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலாப்பூர் பகுதி தோழர்கள் இன்று காலை (21.07.2017) விசாலாட்சி தோட்டம், பல்லக்கு நகர் போன்ற பகுதிகளில் குடிதண்ணீர் வராத காரணத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.அந்த பகுதி மக்களின் பிரச்சனையை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் கையொப்பம் வாங்கி மயிலாப்பூர் பகுதி தலைவர் தோழர்.இராவணன் அவர்களின் தலைமையில் அந்த பகுதியின் “சென்னை குடிநீர் வாரியம்” ஆய்வாளரை சந்தித்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டி தோழர்கள் எடுத்துரைத்து மனுவை அளித்தனர்.
அதை தொடர்ந்து, மயிலாப்பூர் பகுதியில் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பெற வரும் பொதுமக்களிடம் இடைதரகர்கள் பணம் பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பொது மக்களுக்கு இடையூறான வேலையில் ஈடுபடும் நபர்களை தடுக்க கோரியும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அரசு அலுவலர்களே முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாவட்ட துணை தாசில்தாரை சந்தித்து தோழர்கள் தங்களது மனுவை கொடுத்தனர்.
அதன் பின்பு, மந்தைவெளி முதல் பட்டினம்பாக்கம் வழியாக பிராட்வே செல்லும் மாநகர பேருந்து (21N) சமீபகாலமாக இயங்கவில்லை. அந்த வரிசை கொண்ட மாநகர பேருந்து மீண்டும் இயக்க கோரி மந்தவெளி பணிமனையில் தோழர்கள் மனுவை கொடுத்து தக்க நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.
திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363