Category: தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியாரின் 42வது நினைவு நாளில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி பொறுப்பாளர் சூரங்குடி பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் பால சுப்பிரமணியன், தோழர்கள் குமார், செல்லத்துரை, பிரபாகரன், சந்திரசேகர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 14012016 இதழ்

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

29-11-2015 அன்று தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சோமா விடுதியில் மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. இயக்க வளர்ச்சியைப் பற்றியும், அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தோழர்கள் தங்களது கருத்துகளை கூறினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழ் நாடெங்கும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை” 2016 ஜனவரி மாதத்தில் தூத்துக்குடியில் சிறப்பாக நடத்து வது. 2. தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக மாவட்ட தோழர்கள் அனைவரும் மாதம் ரூ.50ஐ சந்தாவாக கொடுப்பது. 3. புரட்சிப் பெரியார் முழக்க சந்தா வினை இந்த ஆண்டு (2016) அதிக அளவு உறுப்பினர்களை சேர்ப்பது.. 4. 2016ம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் சந்தாவினை விரைவாக கொடுப்பது. என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கலந்துரை யாடலில் மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட அமைப்பாளர்...

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ‘நாத்திகம்’ இதழ் நிறுவனர் மறைந்த நாத்திகம் பி. இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், ‘எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; எங்கள் இளைய சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமாக 24.9.2015 அன்று ஆழ்வை சீரணி அரங்கில் ஆழ்வை ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, செ. செல்லத்துரை, கோ.அ. குமார், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு மற்றும் ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் அருந்ததி அரசு ஆகியோர் உரைக்குப் பின், கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில் நாத்திகம் பி.இராமசாமியின் பணிகளை நினைவு கூர்ந்ததோடு, நாட்டில் நிலவும் கனிமவளக் கொள்ளை, சாதி ஆணவக்...

0

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

20-8-2015 அன்று மாலை 4-00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக தோழர் க.மதன் படத்திறப்பு விழா நடைபெற்றது. கழக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் மற்றும் இயக்க தோழர்கள் கழக பணிகளை மேற்கொண்டு செல்ல ஆலோசனை வழங்கினர்.