Tagged: பெரியார் முழக்கம் 27032014 இதழ்

கழக வளர்ச்சி-கழக ஏடு குறித்து விவாதம்: கோவை மண்டல கழக கலந்துரையாடல் முடிவுகள்

கழக வளர்ச்சி-கழக ஏடு குறித்து விவாதம்: கோவை மண்டல கழக கலந்துரையாடல் முடிவுகள்

21-03-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 11-00 மணியளவில், பொள்ளாச்சி ‘பர்வானா இல்லத்”தில் (வங்கி பணியாளர்கள் சங்க கட்டிடம்) கோவை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன் தலைமையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் கடவுள் மறுப்பும், பொள்ளாச்சி விஜயராகவன் ஆத்மா மறுப்பும் கூற, கோவை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பொள்ளாச்சி மாவட்டம் என தனியாக பிரித்தல், மாவட்ட அமைப்புகளை புதுப்பித்தல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பல்லடம் விஜயன் உரையாற்றி துவக்கி வைத்தார். தலைமை சொல்லும் வேலைகளை மட்டும் செய்தால் போதாது; கிராமப்புற பிரச்சாரம் உள்ளிட்ட பல வேலைகளை நாமே முன்னெடுக்க வேண்டும் என்று செயலவைத் தலைவர் துரைசாமி வலியுறுத்தினார். உயர்கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகவும், ஜோதிடக் கல்விக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் குறித்து வழக்குரைஞர் பன்னீர்செல்வம் பேசினார். தலைமைக் கழகம் சொல்லும் அனைத்து பணிகளுக்கும் முழுமையான...

பார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை: பூங்குழலி

பார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை: பூங்குழலி

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் குறித்து இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும் இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆனால் பிற நாடுகளில் நடப்பதற்கும் இந்தியாவில் நடப்பதற்கும் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு உள்ளது. இன்று இந்தியாவெங்கும் முதன்முதலாக வன் புணர்வை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்கும் தில்லி கொடுமையையே எடுத்துக் கொள்வோம். அந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண் அழகாக இருந்தாள்; அவள் அழகில் தூண்டப்பட்டு அவளை வன்புணர்வு செய்தோம் என்று சொல்லவில்லை. அல்லது அவள் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்தாள்; அதனால் தூண்டப்பட்டோம் என்றுகூட சொல்லவில்லை. மணமாகாத அப்பெண் இரவு நேரத்தில் தனியாக ஒரு ஆணுடன் எப்படி நடமாடலாம்? அவளுக்கு பாடம் புகட்டவே அவளை வன்புணர்வு செய்தோம் என்று கூறினர். அண்மையில் சென்னையில் பலியான உமா மகேஸ்வரி விசயத்திலும் அதுவே நடந்துள்ளது. இரவில் தனியாக நடமாடினார்; கேலிசெய்யப்பட்ட போது, துணிச்சலுடன் அந்த ஆண்களை செருப்பால்...

திருச்சி மாவட்டக் கழகம் நடத்திய போராட்டம் வெற்றி

திருச்சி மாவட்டக் கழகம் நடத்திய போராட்டம் வெற்றி

திருச்சி மாவட்டம் 19 ஆவது வார்டு ஜெயில்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் 320 குடியிருப்புகள், கட்டிடப் பணிகள், அவர்கள் நிர்ணயித்த 12 மாதங்கள் முடிந்து, மேலும் 6 மாதகாலம் தாமதமாகி வருகிறது. இதனை கண்டித்தும், விரைந்து கட்டிடப் பணிகளை தரமாக முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தோழமை அமைப்புகளை இணைத்துக் கொண்டு கடந்த 21.2.13 அன்று நடைபெற்றது. கழகத்தின் ஆர்ப்பாட்டத்தினை கவனித்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் திருச்சி மாவட்ட தலைமை பொறியாளர் சுரேஷ், கழகத் தோழர் பொன்னுசாமியை அழைத்து, “போரட்டத்தினை கவனித்தோம்; இன்னும் 3 மாத காலங்களில் கட்டிப் பணியை விரைந்து முடித்து விடுவோம்” என உறுதி கூறினார். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் புதிதாக வரவழைக்கப்பட்டு, கட்டிடப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கட்டுமானத்துக்கு தடை கோரி, தனி நபர் ஒருவர் தொடர்ந்த...

மோடி ஆட்சியின் முறைகேடுகள், ஊழல்கள்

மோடி ஆட்சியின் முறைகேடுகள், ஊழல்கள்

  டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. இதனால் டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேட பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி / ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 காசுகளுக்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்ட விரோதமானது. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுர மீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரை வார்க்கப்பட்டது. பல்கலை...

மரணத்திலும் கொள்கை வழுவாத பெரியார் தொண்டர்

மரணத்திலும் கொள்கை வழுவாத பெரியார் தொண்டர்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் இராணுவ வீரரும், உறுதியான பெரியாரியல்வாதியுமான, தோழர் தம்புசாமி  8-3-2014 அன்று இயற்கை எய்தினார். பெரியார் பிறந்தநாள் அன்று ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வந்த அவர், தான் இறந்த பின்னர் எந்த விதமான மதச் சடங்குகள் செய்யக்கூடாது என்றும், தனது மனைவியின் பூ, பொட்டு, வளையல் முதலியவற்றை நீக்கும் எந்த விதமான முட்டாள்தனங்களையும் செய்யக்கூடாது என்றும், முடிந்த வரை நாத்திக தோழர்களால் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் நீண்ட ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு முடிவெய்தினார். தம்புசாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 19-03-2014 புதன்கிழமை அன்று தம்புசாமி இல்லம் அருகே நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, தம்புசாமியின் படத்தை திறந்து வைத்து, தோழரின் கடிதத்தை படித்துக் காட்டி இரங்கல் உரை ஆற்றினார். பெரியார் முழக்கம் 27032014 இதழ்

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி.   – காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன் நிச்சயமாக! தி.மு.க., அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் மிதக்கிறார்கள்! ஏப்.24 அன்று காலையில் குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு, நாடு நல்லா இருக்கணும் என்று நினைத்து, வாக்குச் சாவடிக்குப் போய் தாமரைச் சின்னத்துல ஒரு விரலால் ஒரு குத்து குத்துங்க.  – இல. கணேசன் பேச்சு அப்படியே செய்துடறோம்! ஓட்டுப் போட வரும்போது இதுக்கெல்லாம் தனித்தனியாக சான்றிதழ்களையும் கையோடு கொண்டுவரவேண்டுமா கணேசன் ‘ஜி’? பலரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய இல.கணேசனை இந்த முறை நாம் எல்லோரும் சேர்ந்து நாடாளு மன்றத்திற்கு அனுப்பியே ஆக வேண்டும்.  – தமிழிசை சவுந்தர்ராஜன் அது முடியாதுங்க மேடம்! மக்கள்தான் ஓட்டுப் போட்டு அனுப்பணும்! நரேந்திர மோடி இரயில் என்ஜின் மாதிரி. நம்முடைய கூட்டணி கட்சிகள் ரயில் பெட்டி; மோடி எனும் என்ஜின் இல்லாவிடில் பெட்டிகள் தானாக நகர முடியாது. – பா.ஜ.க. செயலாளர் வானதி இதை, மோடிகிட்ட...

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

அய்.நா.வின் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் பன்னாட்டு விசாரணையை உறுதிப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் இந்தியா தலையிட்டு துரோகம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். 24-03-2014 திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி, சேவ் தமிழ்ஸ் செந்தில், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட 18 இயக்கங்களை...