Tagged: பெரியார் முழக்கம் 15052014 இதழ்

அந்தோ! பெரியார் சாக்ரடீஸ் முடிவெய்தினாரே!

அந்தோ! பெரியார் சாக்ரடீஸ் முடிவெய்தினாரே!

சுயமரியாதை வீரர் காரைக்குடி என்.ஆர். சாமியின் பேரனும், தோழர் சாமி. திராவிட மணியால் கொள்கை ஊட்டி வளர்க்கப்பட்ட அன்பு மகனுமான பெரியார் சாக்ரடீஸ், சென்னையில் மே 3 ஆம் தேதி சாலை விபத்தில் தலையில் அடிபட்டு 12 ஆம் தேதி மரணமடைந்தார் என்ற செய்தி சொல்லொண்ணா வேதனையில் ஆழ்த்துகிறது. திராவிடர் கழகத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றிய துடிப்பான இளைஞர். தமிழ்நாடு அரசின் ‘தமிழரசு’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டு, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ பத்திரிகைகள் பொறுப்பையும் ஏற்றார். ‘உண்மை’ இதழை வெகு மக்கள் படிக்கும் வகையில் உள்ளடக்கத்தை மாற்றிக் காட்டியவர். கழகம் என்ற எல்லை கடந்து, பெரியாரியல்வாதிகளிடம் தோழமை பேணியவர். கலை-இலக்கியவாதி களிடம் தோழமை பேணி, திராவிடர் கழக மேடைக்குக் கொண்டு வந்த சிறந்த மக்கள் தொடர்பாளர். ‘மணிமகன்’ என்ற பெயரில் கட்டுரைகள் எழுதியவர். சுறுசுறுப்பும் துடிப்பும், பத்திரிகை அனுபவமும் நிறைந்த பெரியார் இயக்க இளைஞர் விடைபெற்றுக் கொண்டுவிட்டார். திராவிடர் விடுதலைக் கழகம், இந்த...

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

குஜராத்தில் ‘நவஸ்ராஜன்’ என்ற சமூகத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் மார்ட்டின் மக்வான். 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் அய்.நா.வின் இன வெறி எதிர்ப்பு மாநாடு நடந்தது. ஜாதிப் பாகுபாட்டையும் இனப் பாகுபாடாக அய்.நா. ஏற்கக் கோரி இந்தியாவிலிருந்து பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் வலியுறுத்தி, அதற்கு ஆதரவாக உலக நாடுகளில் கருத்துகளை உருவாக்கின. இந்தியாவிலிருந்து பங்கேற்கச் சென்ற மனித உரிமை அமைப்புகளின் கூட்டியக்கத்துக்கு தலை வராக செயல்பட்டவர் மார்ட்டின் மக்வான். குஜராத்தில் மனித மலத்தை கைகளாலேயே ‘தீண்டப் படாத’ மக்கள் துடைத்துக் கழுவும் அவலத்தை பட மாக்கி, அவர் சர்வதேச பிரதிநிதிகளிடம் போட்டுக் காட்டியபோது – அது அதிர்ச்சி அலைகளை உருவாக்கிற்று. கடந்த 2007 ஆம் ஆண்டு குஜராத்தில் நிலவும் மிக மோசமான தீண்டாமை கொடுமைகள் பற்றி விரிவான ஆய்வு ஒன்றை மக்வான் மேற் கொண்டார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய...

நாகம்மையார் மறைவும் பெரியார் நடத்திய தடையை மீறிய திருமணமும்

நாகம்மையார் மறைவும் பெரியார் நடத்திய தடையை மீறிய திருமணமும்

பெரியரின் வாழ்க்கைத் துணையாகவும் அவரது காங்கிரஸ் கால போராட்டங்களான கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம் ஆகியவற்றில் ஏராளமான பெண்களையும் உடன் இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி ஆவேசமாகப் போராடிய கொள்கைத் துணையாகவும் விளங்கியவர் நாகம்மையார். பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தி லும் சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு உணவும், உபசரிப்பும் கொடுத்துப் பேணிய தாயாகவும், பல சுயமரியாதை, சாதிமறுப்பு, மறுமணங்களை முன்னின் றும், தலைமையேற்றும் நடத்தியும் பெரியாருக்கு கொள்கைத் துணைவராக விளங்கியவர் அவர். அவர் 11-5-1933 அன்று இறந்து போனார். அதற்கு அடுத்த நாளே திருச்சிக்கு புறப்பட்டுப் போய், 144 தடை உத்திரவையும் மீறி, கிருத்துவர்களின் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார். அதற்காக கைது செய்யப்பட்டாலும், இரவு 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார் என்று பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள் நமக்கு கூறுகின்றன. அவ்வாறு பெரியார் தலைமையில் மணம் முடித்துக் கொண்ட அந்த கிருத்துவ இளைஞர் எம்.ஏ.சவுந்திர ராஜன். 46 ஆண்டுகள் கழித்து 27-5-1979...

வெளிநாடுகளுக்கு ஓடும் பார்ப்பன அதிகார வர்க்கம்!

வெளிநாடுகளுக்கு ஓடும் பார்ப்பன அதிகார வர்க்கம்!

டெல்லியில் அதிகார மய்யங்களில் அதிகார சக்திகளாக செயல்பட்ட பார்ப்பன உயர்ஜாதி அதிகாரக் கும்பல், ஆட்சி மாற்றம் வரப் போவதை உணர்ந்து, உலக வங்கி, சர்வதேச நிதியம், வெளிநாட்டுத் தூதரகங்களில் தங்கள் பதவியை உறுதி செய்து கொண்டுள்ளன. அதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டார்கள். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மே 9, 2014) வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அமைச்சகங்கள் இப்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்கள், கூடு தாவும் பறவைகளாகி விட்டனர். உதாரணமாக, பிரதமரின் தனிச் செயலாளராக இருந்த இந்து சேகர் சதுர்வேதி, இப்போது வாஷிங்டனில் அய்.எம்.எப். எனும் சர்வதேச நிதியத்தில் ஆலோசகர் பதவிக்குப் போய்விட்டார். அன்னிய முதலீட்டு ஆலோசனை துறையின் கூடுதல் செயலாளராக இருந்த அஞ்சலி பிரசாத், ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக நிறுவனத்தின் தூதர் பதவிக்குப் போய்விட்டார். அரசாங்கத்தின் தலைமைச் செய்தி தொடர்பாளராக இருந்த நீலம் கபூர், லண்டனில் உள்ள நேரு மய்யத்தில் முக்கிய...

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

கருந்திணை தயாரிப்பில் தோழர் பூங்குழலி இயக்கத்தில் உருவான “தீவரைவு” ஆவணப் படத்தின் திரையிடல் கடந்த 9-05-2014, வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடைபெற்றது. நமது பண்பாட்டில் உறவுகளை நிலை நிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்கு வதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக் கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலைநிறுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல் ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கி வருகிறது. தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்று வரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம். கருந்திணையும் பனுவலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடல் நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், இந்த...

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

1814ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் பிறந்த இராபர்ட் கால்டுவெல், 200 ஆம் ஆண்டுகளில் நினைவு கூரப்படுகிறார். மதம் பரப்புவதற்குத்தான் அவர் இந்தியா வந்தார். ஆனால், அவரது தொண்டு திராவிட மொழிகளின் ஆய்வுகளை நோக்கித் திரும்பியது. ‘திராவிடம்’, ‘திராவிட இயல்’ என்ற கருத்தியலை தனது ஆய்வு மூலம் நிறுவிக் காட்டிய பெருமைக்குரியவர் கால்டுவெல்! கால்டுவெல்லுக்கு முன்பு பிரிட்டிஷ் புலமையாளர்கள் பலரும் ‘இந்தியா’ எனும் நிலப் பகுதி மக்கள், ‘இந்தோ-ஆரிய’ மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்தே உருவானவை என்றும் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். வில்லியம் ஜோன்ஸ், ஹீம் போல்ட் போன்ற “புலமையாளர்கள்” சமஸ்கிருதத்தையும், அதன் பார்ப்பன பண்பாட்டையும் உயர்த்திப் பிடித்தனர். ஆரியப் பார்ப்பனர்கள், அய்ரோப்பிய பண்பாட்டுடன் தங்களை இணைத்து பெருமை பாராட்டிய காலத்தில், கால்டுவெல் முன் வைத்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வு’ – ஆரிய மொழிக் குடும்பம் வேறு, திராவிட மொழிக் குடும்பம் வேறு...

வினா-விடை!

வினா-விடை!

சமூகத்தில் நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியி லிருந்து வந்தவன். இதன் காரணமாக எனது வார்த்தையை தரம் தாழ்ந்த அரசியல் என்று கூறுகிறார்கள்.      – மோடி ஆகவே, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதிகளை உருவாக்கிய இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கி மோடி தனது சுயமரி யாதையைக் காப்பாற்ற உறுதி ஏற்பாராக! உச்சநீதிமன்றம் ‘ஜல்லிக் கட்டு’ தடை செய் துள்ளது குறித்து – கருத்து கூற விரும்பவில்லை.                 – கி.வீரமணி நியாயமான பேச்சு. அது குறித்து காளைகள் தானே கருத்து கூற வேண்டும். அவைகளின் கருத்துரிமையை நாம் பறிப்பது நியாயம் அல்ல. உடுப்பி கிருஷ்ண மடத்தில் ‘பிராமணர்’களுக்கு தனி இடத்தில் சாப்பாடும் போடும் ‘பங்கி பேதா’ முறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.  – செய்தி ‘ஓசி’ சாப்பாடுன்னாலும் ‘ஆச்சாரத்தை’ விட்டுடப்படாது, ஓய்! புகாரி, அஞ்சப்பர், பொன்னுசாமி ஓட்டல்களிலும் ‘பிராமணர்’ களுக்கு தனி இடம் கேட்டு ‘குல தர்மத்தை’க் காப்பாத்துங்கோ! அண்ணா உயிரியல்...

ஈரோட்டில் எழுச்சியுடன் தொடங்கியது: ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம்

ஈரோட்டில் எழுச்சியுடன் தொடங்கியது: ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம் “ தொடக்க விழா ஈரோடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ரீஜென்சி ஹோட்டலில், 11.5.2014 காலை 11 மணிக்கு நடைபெற்றது ஜாதி, மத மறுப்பு இணையருக்கு சட்டரீதியானப் பாதுகாப்பு வழங்குவது ஜாதி, மத மறுப்புத் திருமண இணையரின் திருமணத்தைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய் யும்போது, ஏற்படும் இடர்ப்பாடு களைக் களைய உதவுவது ஜாதி, மதமறுப்புத் திருமண இணையருக்கு வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வழிகாட்டுவது ஜாதி, மத மறுப்பு இணையரின் வாரிசுகளுக்கு “ஜாதியற்றோர்” என்ற பிரிவில் தனி இடஒதுக்கீடு வழங்கக் கேட்டு அரசை வலியுறுத்துவது மத மறுப்புத் திருமணங்களைப் பதிவு செய்ய, விண்ணப்பித்த 30 நாட்கள் கழித்தே பதிவு செய்யப் படும் என்ற விதி இருப்பதால், பதிவுக்குள் இணையருக்கு உறவினர்களிடமிருந்து பாதிப்பு ஏற்படுவற்கு உள்ள வாய்ப்பைத் தடுக்க, மதத்துக்குள் நடக்கும் திருமணங்களைப் போல உடனே...