Tagged: கலித்தொகை

ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெற்று உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத போதும், அதை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் என்பது மிகக்குறைவே. தமிழக அரசியல் கட்சிகள், சில தேவர் சாதி அமைப்புகளைத் தவிர பெரிய அளவில் ஆதரவு இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு அதுவும் தமிழகம் முழுவதும் எப்படி இது போன்ற திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, இத்தனை ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது மோசடியானதாகவே தெரிகின்றது. குறிப்பாக சென்னையில் போராட்டத்தை Care and Welfere என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இது ஒரு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்புக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. அவர்களது...