Tagged: அகமண முறை

அறிவியல் காரணங்களை விளக்கி கழகத்தின் பரப்புரைப் பயணம்: ஒரே ஜாதிக்குள் திருமணம் வேண்டாம்

அறிவியல் காரணங்களை விளக்கி கழகத்தின் பரப்புரைப் பயணம்: ஒரே ஜாதிக்குள் திருமணம் வேண்டாம்

ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் – உடல்நலம், மனநலம் பாதிக்கப்படுவதை அறிவியலோடு விளக்கி, கழகத்தின் பரப்புரைப் பயணம் வெற்றி நடை போடுகிறது. சங்க இலக்கியக் காலம் தொடங்கி இன்று வரை  ஒரே ஜாதிக்குள் தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக நாம் செய்து வரும் திருமணங்களால், நமது எதிர்காலத் தலைமுறையின் மனநலமும், உடல் நலமும் மிகவும் கேடான நிலைக்குப் போய்விட்டது. அறிவியலுக்கும், பரிணாம வளர்ச்சிக்கும், உயிரியல் இயற்கைக்கும் எதிரான அகமண முறை என்னும் ஒரே ஜாதிக்குள் நடைபெறும் திருமணங்களைப்பற்றிய அதிர்ச்சியான அறிவியல் உண்மைகளை விளக்கும் நோக்கிலும் –  மருத்துவ உலகமும், ஆராய்ச்சியாளர் களும் தமக்குள் மட்டுமே அறிந்து வைத்திருந்த  இந்தக் கருத்துக்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று ஒரே ஜாதிக்குள் செய்து வரும் திருமணங்களால் விளைந்துள்ள மருத்துவ பாதிப்புகள் பற்றி விளக்கும் நோக்கிலும் –  ஜாதி, மத, தேசிய இன,  நாட்டு மறுப்புத்திருமணங்களால் விளையும் நன்மைகளைப் பற்றி விளக்கும் நோக்கிலும் –...

உறவுக்குள் திருமணம்: ஊனமாகும் குழந்தைகள்: பெண்களை நெகிழ வைத்த பரப்புரை

உறவுக்குள் திருமணம்: ஊனமாகும் குழந்தைகள்: பெண்களை நெகிழ வைத்த பரப்புரை

அகமண முறைக்கு எதிராக கழகம் நடத்திய பரப்புரை இயக்கத்தின் பதிவுகள். கடந்த இதழின் தொடர்ச்சி. பிப்.18 காலை 10 மணிக்கு கருந்திணை இல்லத்தில் பயணக் குழுவில் உள்ள தோழர்களுக்கு பணியிடைப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அகமண முறையின் ஆபத்துகளையும், ஜாதி மறுப்புத் திருமணங்களின் அவசியத்தையும் விரிவாக விளக்கி தோழர் பூங்குழலி வகுப்பு நடத்தினார். இரண்டு நாள்களாக பயணக் குழுவிடம் பொது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான பதில்களை அறிந்துகொள்ளும் வகையில் வகுப்பு நடந்தது. கேள்வி-பதில் முறையில் பயிற்சிக் கையேடும் வழங்கப்பட்டது. அந்தக் கையேட்டின் செய்திகளை அடிப்படையாக வைத்து பரப்புரைக் குழுவினர் வீதி நாடகங்களையும், சொற்பொழிவுகளையும் திட்ட மிட்டனர். அத்தகைய வீதி நாடகங்களைப் பார்த்து, அதன் உண்மைகளைப் புரிந்த கிராமத்துப் பெண்கள் நமது தோழர்களிடம், ‘எங்கள் ஊரில், எங்கள் வாழ்க்கை யில் நடப்பதை நாடகமாக நடத்துள்ளீர்கள். இனி ஒரு ஜாதிக்குள் திருமணம் செய்யவே மாட்டோம்’ என கண்ணீருடன் உறுதியளித்த நெகிழ்வான நிகழ்வு களோடு...

ஈரோட்டில் எழுச்சியுடன் தொடங்கியது: ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம்

ஈரோட்டில் எழுச்சியுடன் தொடங்கியது: ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம் “ தொடக்க விழா ஈரோடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ரீஜென்சி ஹோட்டலில், 11.5.2014 காலை 11 மணிக்கு நடைபெற்றது ஜாதி, மத மறுப்பு இணையருக்கு சட்டரீதியானப் பாதுகாப்பு வழங்குவது ஜாதி, மத மறுப்புத் திருமண இணையரின் திருமணத்தைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய் யும்போது, ஏற்படும் இடர்ப்பாடு களைக் களைய உதவுவது ஜாதி, மதமறுப்புத் திருமண இணையருக்கு வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வழிகாட்டுவது ஜாதி, மத மறுப்பு இணையரின் வாரிசுகளுக்கு “ஜாதியற்றோர்” என்ற பிரிவில் தனி இடஒதுக்கீடு வழங்கக் கேட்டு அரசை வலியுறுத்துவது மத மறுப்புத் திருமணங்களைப் பதிவு செய்ய, விண்ணப்பித்த 30 நாட்கள் கழித்தே பதிவு செய்யப் படும் என்ற விதி இருப்பதால், பதிவுக்குள் இணையருக்கு உறவினர்களிடமிருந்து பாதிப்பு ஏற்படுவற்கு உள்ள வாய்ப்பைத் தடுக்க, மதத்துக்குள் நடக்கும் திருமணங்களைப் போல உடனே...

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வரை பாராட்டுகிறோம் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிய தமிழக முதல்வரை பாராட்டுவதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர் களிடம் கூறியது: சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 92 ஆவது அரசாணையின்படி பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க சட்ட வரையறை உள்ளது. ஆனால், இவற்றை கல்வி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. மேலும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவற்றை உரிய திருத்தங்களோடு செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை...

செயலவை நிகழ்வுகள்

செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 21.6.2014 சனிக் கிழமை 11 மணியளவில் கோவை அண்ணாமலை ஓட்டல் அரங்கில் கூடியது. செயலவைத் தலைவர் துரைசாமி தலைமையேற்றார். கோவை கழகத் தோழியர் ராஜாமணி, கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூற, மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் நேருதா° வரவேற்புரையாற்றிட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். மாறி வரும் அரசியல் சூழலில் பெரியாரியலை முன்னெடுப்பதில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளை விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். கழகத்தின் நிதிநிலை மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி விரிவாக விளக்கினார். உரையாற்றிய தோழர்கள்: மண்டல செய லாளர்கள் சேலம்-சக்தி வேலு, மதுரை-இராவணன், நெல்லை-குமார், தஞ்சை-இளையராசா, கோவை-விஜியன், ஈரோடு-இராம இளங்கோவன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்து உரை யாற்றினார். 2 மணி வரை கூட்டம் நீடித்தது. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 3 மணிக்கு...