மோடியின் வரலாற்று உளறல்கள்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக வலம் வரும் மோடி – அவ்வப்போது கூட்டங்களில் உதிர்த்து வரும் வரலாற்று உளறல்கள் பற்றிய ஒரு தொகுப்பு: தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, இங்கே வேதாரண்யத்தில் வ.உ.சி. தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. – திருச்சிக் கூட்டத்தில் மோடி வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு தலைமை தாங்கியது வ.உ.சி. அல்ல; இராஜ கோபாலாச்சாரி. குப்தர் வம்சம் பற்றி நாம் நினைக்கும்போது உடனடியாக சந்திரகுப்தரின் ராஜநீதிதான் நினைவுக்கு வருகிறது. – பாட்னா கூட்டத்தில் மோடி சந்திரகுப்தர், குப்த வம்சத்தைச் சார்ந்தவர் அல்ல; அவர் மவுரிய வம்சத்தைச் சார்ந்தவர். மாவீரன் அலெக்சாண்டர் இராணுவம், உலகத்தையே படையெடுத்து வெற்றிக் கண்டது. ஆனால், பீகார் தக்சசீலாவில் பீகாரி களால் அதே இராணுவம் தோல்வி அடைந்து ஓடியது. அதுதான் பீகாரிகள் வலிமை. – மோடி பாட்னா பேச்சு அலெக்சாண்டர் இராணுவம் கங்கையைக் கடந்து வரவே இல்லை. பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. தக்சசீலாவும் பீகாரில் இல்லை; அது...