நேபாளத்தை இந்து நாடாகவே நீடிக்க சங்பரிவாரங்களின் திரைமறைவு சதிகள்
நேபாளம், ‘இந்து’ அடையாளத்தை ஒழிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, மோடி ஆட்சி, ‘இந்து’ நாடாகவே நீடிக்க திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது. இது பற்றி ஏற்கெனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கம் தீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் சில செய்திகள்: நேபாள அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட் டிருப்பதை வரவேற்பதில் இந்தியா முதலாவதாக இருந்திருக்க வேண்டும். மாறாக, மோடி அரசாங்கம் ஓர் எதிர்மறை அணுகுமுறையை பின்பற்றி இருக் கிறது. ஒரு தேவையற்ற தலையீடும் நிலைப்பாட்டை யும் எடுத்திருக்கிறது. அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, இரு நாட்களுக்குப்பின் மோடி அரசாங்கம் தன் அயல்துறை செயலாளர் ஜெய்சங்கரை, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, அரசமைப்புச் சட்டம் முறையாகப் பிரகடனம் செய்ய நிச்சயிக்கப் பட்டிருக்கிற செப்டம்பர் 20 அன்று அவ்வாறு நடைபெறாமல் நிறுத்துவதற்காக காத்மண்டுக்கு அனுப்பியது. நேபாளத்தின் இறையாண்மை விஷயங்களில் மிகவும் கேடுகெட்ட முறையில் தலையிடுவதற்கு...