தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க...