தங்கப் புதையல்: சில கேள்விகள்
உ.பி. மாநிலம் உள்ளாவ் பகுதியில் 1857 இல் சிற்றரசர் ராஜாராவ் ராம் பச்சன் – 1000 டன் தங்கத்தைப் “புதைத்த”போது 31 கிராம் தங்கத்தின் விலை 20 டாலர். ரூபாய்க்கும் அதே மதிப்புதான். ஒரு குறுநிலப் பகுதியின் சிற்றரசர் இந்த விலையில் ஆயிரம் டன் தங்கத்தை எப்படி வைத்திருந்தார்? அப்படியே வைத்திருந்தாலும் அவ்வளவு பெரும் தொகை அவரிடம் இருந்திருக்குமா? அப்படியே நிதி வசதி இருந்தாலும் அவ்வளவு பெரிய அளவில் தங்கத்தை அவரால் எங்கிருந்து பெற முடிந்தது? நாட்டின் வரலாற்று தொன்மங்களை தேடிக் கண்டுபிடித்து ஆய்வு நடத்த வேண்டிய தொல்பொருள் துறை, மூடநம்பிக்கைகளுக்கு துணை போகலாமா? பெரியார் முழக்கம் 23102013 இதழ்