Tagged: சுதன்வனன்

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

பவுத்தத் துறவிகளின் மாநாட்டுப் பந்தலுக்கு தீயிட்ட பார்ப்பனர்கள் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (10.12.2015 இதழ் தொடர்ச்சி) 8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்) 9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான...