பூஜைக்கு போகும் விண்வெளி ராக்கெட்டுகள்: ‘பாரத ரத்னா’ விஞ்ஞானி கண்டனம்
பாரத ரத்னா விருது பெற்றுள்ள விஞ்ஞானி சி.ன்.ஆர். ராவ், பெங்களூரில் நவம்பர் 24 அன்று பேட்டி அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் “இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்பும் முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன் மாதிரி வடிவத்தை வைத்து பூஜை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்றார். அதற்கு பதில் அளித்த விஞ்ஞானி சி.என்.ராவ், “அது மூட நம்பிக்கை. எனக்கு அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயத்தின் காரணமாக மனிதர்கள் பூஜைகள் செய்தால் தாம் செய்கின்ற பணி வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற நம்பிக்கைகள் எனக்கு இல்லை. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை. மேலும் நான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் என்ற கருத்தும் நிலவுகிறது. அதில் உண்மையில்லை. சீனாவில் அறிவியல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியர்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். அறிவியல்...