உள்ளத்தை உலுக்கும் இசைப்பிரியா இறுதி நாள் காட்சிகள்: இலங்கைக்கு கடும் நெருக்கடி
விடுதலைப் புலிகள் தொலைக்காட்சியின் செய்தி அறிவிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் நிராயுதபாணியாக பிடித்து, சித்திரவதை செய்து, பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்தக் காட்சிகளை லண்டனிலுள்ள ‘சேனல்-4’ தொலைக்காட்சி வெளியிட்டவுடன், வழக்கம்போல, ‘போலி காட்சிகள்’ என்று இலங்கை அரசு மறுத்துள்ளது. இசைப் பிரியா – போரின்போதுதான் கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு சாதித்தது. இலங்கை பாதுகாப்புத் துறை வெளியிட்ட போரில் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் இசைப் பிரியா பெயரும் இடம் பெற்றிருந்தது. ‘சேனல் 4’ தொலைக்காட்சிக்காக ‘ஸ்ரீலங்கா: கொலைக் களம்’ என்ற படத்தைத் தயாரித்த லண்டன் பத்திரிகையாளரும், படத் தயாரிப்பாளருமான கல்லம் மக்ரே, இதை மறுத்துள்ளார். ‘டைம்° ஆப் இந்தியா’ நாளேடு (நவ. 2) அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பது இலங்கை அரசுக்கே தெரியும். இன்னும் இதுபோல் பல காட்சிகள் வெளிவர இருக் கின்றன என்று அவர் கூறியுள்ளார். இதைப் படம் பிடித்தவர்களே இலங்கை இராணுவத்தினர் தான். அவைகளை...