கிணத்துக்கடவில் தொடரும் சாதித் தீண்டாமைக் கொடுமைகள்
கோவை மாவட்டம், கிணத்துக் கடவு அருகே பத்தனம் என்கிற கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். இதையறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு படிக்கின்ற தலித் மாணவ, மாணவிகளையும் அவர்தம் பெற்றோர்களையும் அவர்களுடைய வீடுகளுக்கேச் சென்று சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். அதன்படி அவர்கள் சொன்னது, – அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளையும் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஈ°வரி என்பவர், தேநீர் வாங்க, பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய பெருக்க பயன்படுத்து வாராம். ஆனால், பள்ளிக் கழிப்பறையை மட்டும் கழுவி சுத்தம் செய்ய தலித் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்துவாராம். இது பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அது தற்போதுதான் வெளி வந்துள்ளது. அதாவது தற்போது அந்தப் பள்ளியில் படிக்கும் சுபாஷினி என்கிற மாணவி கழிப்பறை சுத்தம் செய்ய தண்ணீர் கொண்டு வராததால் அவரை ஆசிரியர் ஈ°வரி அடித்து...