Tagged: கல்பாத்தி

கல்பாத்தி : அன்றும் இன்றும்!

கல்பாத்தி : அன்றும் இன்றும்!

இன்றைய கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு, மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு முன்பு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதி. பாலக்காட்டுக்கு அருகே உள்ள கல்பாத்தி, பார்ப்பன வைதீகத் திமிரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. கல்பாத்தி, ‘அக்ரகாரங்களில்’ குடியிருந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், ஈழவர்கள் நடக்கவும், அவர்கள் ‘தேர் ரதம்’ வருவதற்கும் தடை விதித்திருந்தனர். இந்தத் தடை அரசாங்கத்தின் தடையாகவே இருந்தது என்பது இதில் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இந்தத் தடையைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வரதராஜூலு நாயுடு – அவர் ஆசிரியராக இருந்த ‘தமிழ்நாடு’ நாளேட்டில் தலையங்கம் தீட்டினார். அப்போது சென்னை மாகாணத்தை நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த சர். சி.பி. இராமசாமி அய்யர், இந்தத் தடையை நியாயப்படுத்தினார். தீண்டப்படாத சமூகத்தினரான ஈழவர்களும் அவர்களின் கோயில் தேரும் அக்ரகாரத்தில் வந்தால் கலவரம் வரும் என்றும், அதைத் தடுப்பதற்காகவே தடை போட்டுள்ளதாகவும் கூறினார். இதை எதிர்த்து அன்றைய சென்னை சட்டமன்றத்தில் நீதிக்கட்சி,...