செயற்கைக் கருத்தரிப்பிலும் ஜாதி வெறி
பண்டைய பீகார், கல்வியில் மிகவும் சிறந்து விளங்கியது. அங்கேதான் ‘நாளந்தா’, ‘விக்கிரமசீலா’ போன்ற பௌத்தப் பல்கலைக் கழகங்கள் இருந்தன. ஆனால் இன்று, கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது. வேலை கிடைக்காமல் பிழைப்பு தேடி, மாநிலம் விட்டு மாநிலம் அலையும் பீகாரிகளை எல்லா இரயில் நிலையங்களிலும் காண முடிகிறது. பீகாரிகளின் வாழ்க்கை அவலத்தை, சாதியக் கொடுமைகளைக் காண முடிகிறது. பௌத்த சமயம் வேர் ஊன்றிய பீகாரில் ஏன் இன்னும் சாதிப் பிரச்சினை அப்படியே இருக்கிறது? காரணம், நிலப்பிரபுத்துவம் அப்படியே இருக்கிறது. விவசாயக் கிராமங்களில் இன்றும் உயர்சாதியினரே தலைவர்களாக இருக்கிறார்கள். சாதிய ஒடுக்குமுறை வெளிப்படையாகவே நடைபெறுகிறது. பாட்னாவில் உள்ள விந்து வங்கிகளில் சாதிவாரியாக விந்து சேகரித்து வைக்கப்பட்டள்ளது. ‘செயற்கைக் கருத்தரிப்பில்கூட சாதிக் கலப்பு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்’ என்கிறார் மருத்துவர் சின்ஹா. இதை உறுதிப்படத்துவதுபோல ஒரு சம்பவம் கயா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செயற்கைக் கருத்தரிப்பு செய்து, கர்ப்பம் தரித்த மாலா என்கிற...