Tagged: ஓம் சிவாய நம

ஓம் சிவாய நம!

ஓம் சிவாய நம!

அது, 15,000 விஞ்ஞானிகள் கூடியிருந்த மாநாடு. நடந்த இடம் மைசூரு பல்கலைக்கழகம். உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டு விஞ்ஞானிகளும் கூடியிருந்தார்கள். பல ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. அதிலே ஒன்று விஞ்ஞானிகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டது. சிரித்து சிரித்து வயிறு ‘புண்’பட்டு விட்டது என்றுகூட சொல்லலாம், போங்க! “உலகத்திலேயே தலைசிறந்த சுற்றுச்சூழல்வாதி யார் தெரியுமா? எங்கள் சிவபெருமான்தான்” – இப்படி ஒரு ‘ஆராய்ச்சி’யை அள்ளிவிட்டு அகிலத்தையே குலுங்க வைத்திருப்பவர் அகிலேஷ் பாண்டே என்ற பார்ப்பனர். மத்திய பிரதேசத்தில் பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியரான அவர் தனது கடுமையான ஆராய்ச்சியின் வழியாக கண்டறிந்த அரிய தகவல்கள் இதோ! “சிவபெருமான் தலையில் கங்கை இருக்கிறது; அந்த கங்கை நீரை சுத்தப்படுத்தும் வேலையை சிவபெருமானே செய்கிறார். சுத்தப்படுத்தியதோடு நிற்கவில்லை; அந்த நீரை மக்களுக்கும் உயிரினங்களுக்கும் விநியோகம் செய்தவரும் அவர்தான். இவரைவிட சிறந்த ஒரு சுற்றுச் சூழல்வாதி யார் இருக்க முடியும்?” 15,000 விஞ்ஞானிகள் நிறைந்த சபையில் இப்படியெல்...