‘இந்து தர்மம்’ உருவாக்கிய ‘தேவதாசி’ முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்
இந்து மதம் உருவாக்கிய ‘தேவதாசி’ முறை தடைச் சட்டங்கள் வந்த பிறகும் ஒழியவில்லை; பசு மாட்டைக் காப்பாற்ற துடிக்கும் கூட்டம், பெண்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு பற்றி கவலைப்படுவதே இல்லை. பல நூற்றாண்டுகளாகக் கோயிலுக்குள்ளேயே வாழ்ந்து கோயில் திருப்பணி களை அர்ப்பணிப்போடு செய்து வந்தவர்கள் தேவதாசிகள். ஆனால் ‘இறைவனின் அடிமை’ என்கிற அர்த்தத்தில் சிறுமிகளைக் கோயில்களில் பொட்டுக்கட்டிவிட்டு, அவர்களைப் பாலியல் தொழிலாளியாக்கியது தேவதாசி முறை. அதிலும் கடந்த நூற்றாண்டில் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டுச் சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டுக் கீழ்த்தரமாக அவர்கள் நடத்தப்பட்டார்கள். முத்துலட்சுமி ரெட்டி, பெரியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்டோரின் மிக நீண்ட சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. “இந்த நாள்பட்ட கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது. ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகையால் இவ்வழக்கம் பெண்களின் கவுரவத்தைப் பெரிதும் பாதிக்கக்...