ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. (5) இராஜாஜி குறித்து ம.பொ.சி. கூறிய பொய்! வாலாசா வல்லவன்
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) ம.பொ.சி. அப்போது சட்ட மேலவையில் உறுப் பினராக இருந்தார். அப்போது அவர் பேசியதாவது – “மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் இந்தக் கவுன்சிலின் முன்பு வைத்துள்ள ஆந்திர ராஜ்ய அமைப்பு மசோதாவை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்… இந்த எல்லைப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் ஒரு நியாயம் நடந்திருக்கவேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள பிரதேசமாக இருப்பதால் அதை எஞ்சிய சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருக்க வேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள ஜில்லா என்று முத்திரைப்போட்டு எஞ்சிய சென்னை ராஜ்ஜியத்தில் தான் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியில்லாமல் மொழியின் அடிப்படையிலே அமைக்கப்படுகிற ஆந்திர ராஜ்ஜியத்தில் தகராறுள்ள இந்தச் சித்தூர் ஜில்லாவை சேர்த்திருக்கக்கூடாது. எஞ்சிய சென்னை ராஜ்ஜியத் தில் சேர்க்காமல்,...