அருஞ்சொல் பொருள்
அந்தணாளன் பார்ப்பான்
அசார்சமாய் அசட்டையாய்
அரசிறை அரசாங்க வரி
அயனம் வரலாறு
ஆகுதி பலி (வேள்வித் தீயில் இடுதல்)
அந்தர்த்தானம் மறைவு, மறைகை
உச்சாஹம் உற்சாகம்
ஏதேஸ்டமாக விருப்பமாக
ஏகாலி வண்ணான்
கடாக்ஷம் கடைக்கண் பார்வை
கண்டனை கண்டனம்
காலாடிகள் தொழிலற்றுத் திரிவோர்கள்
கியாதி புகழ்
கிஸ்து நிலவரி
குதவைப்பத்திரம் அடமானப் பத்திரம்
குமரி இருட்டு விடியற்கு முன் உள்ள இருள்
கொடிவழிப்பட்டி வம்ச பரம்பரை விவரம்
சதிபதி கணவன் மனைவியர்
சமேதரன் கூடியிருப்பவன்
சரமக்கிரியை இறப்புச் சடங்கு
சலூன் வண்டி உயர்நிலையில் உள்ளவர்கள் பயணம் செய்வதற்கான தனி பெட்டி (தொடர் வண்டியில்)
சிங்காதனம் அரியணை
சிஷ்ட பரிபாலனம் நல்லவற்றைக் காப்பாற்றுதல்
சீஷர்கள் மாணவர்கள்
சுமரும்படி சுமக்கும்படி
சுவானம் நாய்
தவக்கம் தாமதம்
தனதானியாதி பணம் தானியம் போன்றவை
துஷ்ட நிக்கிரகம் தீயவற்றை அழித்தல்
தொண்ணை பாதுகாப்புக்கென வைத்திருக்கும் கனமான தடி; பெரிய தடி
நட்டத்தில் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆடையின்றி இருத்தல்
நாயாடி திருவிதாங்கூரில் உள்ள காட்டுச் சாதியார்
நிக்கிரம் அடக்குதல், தண்டனை
நிமித்திகர் கணியர், குறிசொல்லுபவர்
நிர்த்தாரணம் நிலையிடுகை
நிர்த்தாட்சண்யம் இரக்கமின்மை
நிவேதனத் தொகை கடவுளுக்குப் படைக்கும் அமுது
நிஷ்காரணம் காரணம் இன்றி
நிஷ்டூரம் வெறுப்பு, கொடுமை
பங்கா பட விசிறி (தலைக்கு மேலாக தொங்கும் நீண்ட துணியை ஒருவர் இருபுறமும் அசையு மாறு இழுத்து காற்றமைப்பை ஏற்படுத்தும் பொறியமைப்பு
பகுமானம் பாராட்டிப் போற்றல், கவுரவித்தல்
பச்சகானா சிறுபிள்ளைத்தனமானவர்
பத்ததி சொற்பொருள், வழிகாட்டும் நூல்
பரத்துவம் கடவுள் தன்மை
பத்துவாப்படி தீர்ப்புப்படி
பாதார விந்தம் திருவடித் தாமரை
புத்திர களத்திர மனைவி மக்கள்
புனருத்தாரணம் மறு சீரமைப்பு
பேதிப்பு பகை
பிண்டம் தந்தையார் பொருட்டு போடும் சோற்றுருண்டை
பிரக்யாதி புகழ்
மடிசஞ்சிகள் சனாதன பார்ப்பனர்கள்
மனவாள்லு எங்களவர்கள், நம்மவர்கள்
வஜா நிலவரி தள்ளுபடி
ரெய்ன்ஸ் கயிறு கடிவாளக் கயிறு
வாசா கைங்கரியம் வெறும் பேச்சு
வானர சைன்யம் குரங்குப்படை
ஜம்புலிங்கம் அந்த நாளில் வாழ்ந்த ஒரு கொள்ளைக்காரன்
ஜலதாரை நீரோட்டம், சாக்கடை
ஸ்தம்பம் நினைவுத்தூண்
யாக மெக்ஞாதிகள் யாகம், யக்கும் முதலியவை