குடி அரசு  தேசத்திலும்  அடக்குமுறை

 

ஸ்பெயின்  தேசமானது,  குடி  அரசை  ஒழித்து  முடி  அரசு  ஆக்கிக்கொண்ட  நாடாகும்.  அங்கு  குடி  அரசு  இருந்தும்  அடக்குமுறை  தாண்டவமாடுகின்றது.  ஒரு  அரசியல்  குழப்பத்தின்போது  65  பேர்களை  குற்றம்  சுமற்றி  விசாரித்து  அதில்  4  பேருக்குத்  தூக்குத்தண்டனையும்,  36 பேருக்கு  ஜன்ம  தண்டனையும்,  7  பேருக்கு  12  வருஷத்  தண்டனையும்  விதித்து,  18  பேர்களை  விடுதலை  செய்து  விட்டார்களாம்.  அக்குழப்பத்தில்  3500  பேர்  மாண்டார்களாம்.  எனவே  அன்னிய  ஆட்சி  ஒழிந்து,  சுயராஜ்ஜியம்  வந்து  விட்டால்  தர்ம  ராஜ்ஜியம்  ஆகிவிடும்  என்று  கருதுவது  வடிகட்டின  அறியாமையே  ஆகும்.  அரசியல்  மாற்றத்திலோ,  கிளர்ச்சியிலோ  யோக்கியமானதொரு  கொள்கையை  விரும்புவது  தான்  அறிவுடைமையாகுமே  ஒழிய,  ஒரு  ஜாதியையோ,  ஒரு  தேசத்தையோ  விரும்புவதும்,  வெருப்பதும்  பழயகால  கையில்  வலுத்தவன்  கொள்ளை  அடிக்கப்  பார்க்கும்  சூட்சி  என்றுதான்  சொல்லவேண்டும்.

குடி அரசு  கட்டுரை  30.06.1935

You may also like...