10 வருஷ உத்தியோக வேட்டை

 

பார்ப்பனரல்லாத மந்திரிகளும், பார்ப்பனரல்லாத இயக்கமும் இந்தப் பத்து வருஷ காலத்தில் பார்ப்பனர்களிடத்திலும், அவர்கள் மாய்கையில் சிக்குண்ட பாமர மக்களிடத்திலும் மற்றும் பொறுப்பும் கவலையுமற்ற சுயநல பார்ப்பனரல்லாத மக்கள் சிலரிடத்திலும், எவ்வளவோ கெட்ட பெயரும் பழிகளும் பெற்றும் உத்தியோக விஷயத்தில் பார்ப்பனர் களுக்கு என்ன கெடுதி செய்திருக்கிறார்கள்? பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வளவு தான் நன்மை செய்ய முடிந்திருக்கிறது? என்கின்ற விபரத்தைப் புள்ளி விபரங்களைக் கொண்டு பார்ப்போமேயானால் இந்த 10 வருஷ காலத்தில் அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்ற கூச்சல் பலமாய் கிளம்பி அந்தப்படி கொடுக்க வேண்டுமென்ற முறை கையாளப்பட்டு வந்த காலம் முதற் கொண்டு நாளது வரையிலும், அதைக் கையாண்டு வந்த முறையினால் எவ்வளவு உத்தியோகங்கள் பார்ப்பனர்களுக்கு முன்னிருந்ததைவிட குறைந்துபோய் விட்டது என்பதும், இதனால் பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வளவு உத்தியோகங்கள் அதிகமாய்க் கொடுக்கப்பட்டுவிட்டதென்பதும் நன்றாய் விளங்கும்.

மற்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைக்குப் பொது ஜனங்களுடையவும், சர்க்காருடையவும் ஆதரவு எவ்வளவோ இருந்தும், வெகு சிறிய சமூகத்தாரான பார்ப்பனர்கள் அதற்கு முட்டுக்கட்டையாயிருந்து தேசீயத்தின் பேராலும், திறமையின் பேராலும், தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து பார்ப்பனரல்லாதாரிலேயே சில கூலிகளையும், சுயநலத் துரோகிகளையும் கொண்டு விஷமப் பிரசாரஞ் செய்து அவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை எவ்வளவு தூரம் பயன் பெற முடியாமல் செய்திருக்கிறார்கள் என்பதும் விளங்கும்.

அதற்காகவே இதனடியில் சில புள்ளி விபரங்களைத் தருகிறோம்.

அவற்றில் முறையே ஜுடிஷியல் இலாக்காவென்னும் நீதி இலாக்காவிலும், ரெவினியூ இலாக்காவென்னும் நிர்வாக இலாக்காவிலும், கல்வி இலாக்காவிலும், போலீஸ் இலாக்காவென்னும் நிர்வாக இலாக்காவிலும், வைத்திய இலாக்காவிலும், விவசாய கால்நடை இலாக்கா விலும், இஞ்சினியரிங் இலாக்காவிலும், லோக்கல் பண்டு ஆடிட் இலாக்காவிலும், 1924ல் எவ்வளவு பார்ப்பன உத்தியோகஸ்தர்களிருந்தார்கள்? 1934ல் எவ்வளவு இருந்தார்கள்? மொத்தத்தில் எவ்வளவு குறைந்து போய் விட்டது? என்பவற்றைக் கீழ்க்கண்ட புள்ளி விபரங்கள் விளக்குவதாகும்.

ஜுடிஷியல்

இந்த இலாக்காவானது பொது மக்களில் எல்லா வகுப்பாரிடத்திலும் மிகவும் செல்வாக்குள்ளதாகும்.  இதை பெரும்பாலும் வெகு காலமாகவே எப்படியோ பார்ப்பனர்களே கைப்பற்றி அதன் மூலமே மற்ற சகலவிதமான ஆதிக்கங்களிலும் உத்தியோகங்களிலும் வக்கீல், டாக்டர் முதலிய தொழில்களிலும், சமூகத் துறையிலும், அரசியலிலும் செல்வாக்குப் பெற்று மக்களை அடக்கி அடிமைப்படுத்தி ஆண்டு வருகிறார்கள். மந்திரிகள் எவ்வளவு வேட்டை ஆடியும் இந்த நீதி இலாக்காத் துறையில் பார்ப்பன ரல்லாதார் முன்னேறுவதற்கில்லாமலே தடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

குறிப்பு@ கெஸட்டட் உத்தியோகமென்பது நிர்வாக அதிகாரங் கொண்டது. இது பெரும்பாலும் ரூ.300க்கு மேற்பட்டு ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளமுடையது.

நான் கெஸட்டட் முதல் வகுப்பு என்பது மேற்படி நிர்வாக அதிகாரி களுக்கு மந்திரிகளாயிருந்து காரியாலய நிர்வாகம் பார்ப்பது. இதற்கு மாதம் ரூ.100க்கு மேற்பட்டு ரூ.500 வரையிலும் சம்பளமுண்டு.

நான் கெஸட்டட் இரண்டாந்தர வகுப்பென்பது ரூ.35க்கு மேற்பட்டு ரூ.100 வரையில் சம்பளமுடையது.

  1. ஜுடிஷியல்

ஹைக்கோர்ட்டு கெஸட்டட் உத்தியோகம்

வருஷம்                         பார்ப்பனர்

1924ல் ஆக்டிங் உள்பட       180

1934ல்                                 ”              175

நான் கெஸட்டட் உத்தியோகம் முதல் தர வகுப்பு

வருஷம்                         உத்தியோகம்                            பார்ப்பனர்

1924                       157க்கு                                                106

1934                       130க்கு                                                  95

நான் கெஸட்டட் இரண்டாந்தர வகுப்பு

1924ல்                   82 பேர்

1934ல்                   92 பேர்

ஜில்லா கோர்ட்டு உத்தியோகங்கள்

நான் கெஸட்டட் முதல் தரம்

1924ல்                   97 பேர்

1934ல்                 108    ”

இவர்களெல்லாம் சிரஸ்தார்களும், ஹெட் கிளார்க்குகளுமாவார்கள். இவர்கள் பேனா முனையில் தான் அமீனாக்கள், சேவகர்கள், குமாஸ்தாக்கள் இருந்து வருகின்றனர்.

ஜில்லாக்கள் தோறும் நான் கெஸட்டட் ஆபீசர்கள் முதல் தர உத்தியோகத்தில்

பார்ப்பனர்

திருச்சியில் 1924ல் 3              ”

”              1934ல் 5              ”

திருநெல்வேலி       1924ல் 1              ”

”              1934ல் 4              ”

மேல் தஞ்சை            1924ல் 4              ”

”              1934ல் 5              ”

கிழக்கு கோதாவரி                1924ல் 2              ”

”              1934ல் 8              ”

மேல் கோதாவரி    1924ல் 4              ”

”              1934ல் 6              ”

குண்டூர்           1924ல் 6              ”

”              1934ல் 6              ”

கிருஷ்ணா    1924ல் 7              ”

”              1934ல் 6              ”

மதுரை             1924ல் 5              ”

”              1934ல் 5              ”

கடப்பை          1924ல் 3              ”

”              1934ல் 4              ”

பல்லாரி          1924ல் 2              ”

”              1934ல் 3              ”

சேலம்

இராமநாதபுரம்         1924ல் 16           ”

வட கனரா

”              1934ல் 16           ”

இப்படிப்பட்ட உத்தியோகங்கள், அதாவது சிறு உத்தியோகஸ்தர் மீதில் ஆதிக்கஞ் செலுத்தும் உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பனர் கையிலேயே இருந்திருக்குமேயானால் பார்ப்பனரல்லாத சிறு உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு பாடுபடுவார்களென்பதையும், அவர்கள் எப்படி அடிக்கடி குற்றவாளி களாக்கப்பட்டு ஒழிக்கப்படுவார்களென்பதையும் நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

ரூ.35 முதல் ரூ.100 சம்பளமுள்ள 2ந்தர உத்தியோகங்கள்

சென்னை மாகாணத்தில்

1924ல்                 1912       பார்ப்பனர்

1934ல்                 1780              ”

10 வருஷ காலத்தில் சின்ன உத்தியோகங்களில் 132 உத்தியோகங்கள் தான் (அதுவும் குமாஸ்தாக்கள் உத்தியோகங்கள்தான் பார்ப்பனர்களிடமிருந்து வருஷத்துக்கு 10 வீதம்) வேட்டை ஆடப்பட்டு வந்திருக்கிறது.

  1. ரெவின்யூ இலாக்கா

கெஸட்டட் ஆபீசர்கள்  ரெவின்யூ போர்டு, லார்டு ரெவின்யூ கலெக்டர், டிவிஷனல் ஆபீசர்கள்

வருஷம்         பார்ப்பனர்

1924 ல்                77

பிறகு இந்த இலாகாவில் மொத்தத்தில் 42 உத்தியோகங்குறைந்தும்

1934ல் 80           பார்ப்பனர்

நான் கெ.ஆ. முதல் தரம்

1924ல் 334         பார்ப்பனர்

1934ல் 482                         ”

நான்  கெ. ஆ. 2ந் தரம்

பார்ப்பனர்

1924ல் 3964 ”

1934ல் 3527 ”

10 வருட காலத்தில் 435 உத்தியோகங்கள் அதுவும் குமாஸ்தா வேலைகள் தான் வருஷத்திற்கு 40 அதாவது ஜில்லாவிற்கு ஒன்றரை வீதந்தான் கைப்பற்ற முடிந்திருக்கிறது.

ஜில்லா வாரியாக ரூ.100க்கு மேற்பட்ட சம்பளம்

பார்ப்பனர்

அனந்தப்பூர் 38க்கு 27            ”

வட ஆற்காடு             48  31     ”

செங்கற்பட்டு             37  25     ”

சென்னை      42  28     ”

குண்டூர்           35  23     ”

கோயம்புத்தூர்         35  20     ”

கடப்பை          38  26     ”

கஞ்சம்             37  27     ”

கீழ் கோதாவரி          39  21     ”

மேல் கோதாவரி    34  24     ”

மதுரை             38  23     ”

தஞ்சாவூர்     49  23     ”

ஜில்லா வாரியாக ரூ.35 முதல் 100 வரை சம்பளம் உள்ள இரண்டாந்தர வகுப்பு

பார்ப்பனர்

அனந்தப்பூர் 253க்கு 153        ”

வட ஆற்காடு             316  157                ”

தென்னாற்காடு        253  163                ”

குண்டூர்           199  101                ”

கோயம்புத்தூர்         304  204                ”

கடப்பை          241  133                ”

கஞ்சம்             274  162                ”

கீழ் கோதாவரி          316  153                ”

குண்டூர்           297  184                ”

தஞ்சை            355  205                ”

திருச்சி             269  155                ”

சேலம்              315  190                ”

  1. போலீஸ் இலாக்கா

சென்னை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேற்பார்வையில்

கெஸட்டர் ஆபீசர்

1924ல் 17 பார்ப்பனர்

1934ல் 20           ”

நான் கெஸட்டட் முதல் தரம்

1924ல் 722 பார்ப்பனர்

1934ல் 678         ”

ஜில்லா போலீஸ் இலாக்கா

கெஸட்டட் ஆபீசர்

1924ல் 33 பார்ப்பனர்

1934ல் 45           ”

ரூ.100க்கு மேல் சம்பளமுள்ள நான்கெஸட்டட் உத்தியோகங்களில்

அனந்தப்பூர், நெல்லூர், குண்டூர், இராமநாதபுரம், தென் கன்னடம், சேலம், கிருஷ்ணா, தஞ்சாவூர், மதுரை முதலிய ஜில்லாக்களில் எல்லோரும் பார்ப்பனர்களே.

நான் கெஸட்டட் 2ந் தரம்

1924ல் 283 பார்ப்பனர்

1934ல் 264         ”

செக்ரட்டிரியேட்

கெஜட்டட் உத்தியோகம்

1924ல் 6 பார்ப்பனர்

1934ல் 8         ”

நான் கெஜட்டட்  முதல் தரம்

1924ல் 70 பார்ப்பனர்

1934ல் 79           ”

இரண்டாந்தர வகுப்பு

1924ல் 40 பார்ப்பனர்

1934ல் 46           ”

ஜெயில் இலாக்கா

கெஜட்டட் ஆபீசர்

1924ல் 1 பார்ப்பனர்

1934ல் 2              ”

நான் கெஜட்டட் ஆபீசர்

முதல் தரம்

1924ல் 22 பார்ப்பனர்

1934ல் 24           ”

2ந் தர வகுப்பு

1924ல் 37 பார்ப்பனர்

1934ல் 44           ”

எக்ஸைஸ் சுங்க இலாக்கா

கெஜட்டட் ஆபீஸர்

1924ல் 29 பார்ப்பனர்

1934ல் 24           ”

நான் கெஜட்டட் ஆபீஸர்

ரூ.100க்கு மேல் சம்பளம்

1924ல் 17 பார்ப்பனர்

1934ல் 30           ”

நான் கெஜட்டட்

ரூ.35  100 வரை சம்பளமுள்ள உத்தியோகங்கள்

1924ல் 456 பார்ப்பனர்

1934ல் 426         ”

10 வருஷங்களில் 30 தான் குறைந்திருக்கிறது.

  1. கல்வி இலாக்கா

கல்வி டைரக்டர் ஆதிக்கத்தின் கீழுள்ள கெஜட்டட் ஆபீஸர்கள்

1924ல் 41 பார்ப்பனர்

1934ல் 48           ”

ரூ.100க்கு மேற்பட்ட

நான் கெஜட்டட் முதல்தர வகுப்பு ஆபீஸர்கள்

1924ல் 433 பார்ப்பனர்

1934ல் 459         ”

2ந் தர வகுப்பு

1924ல்   57 பார்ப்பனர்

1934ல் 118         ”

கல்வி இலாக்காவில் ஜில்லா அதிகாரிகள் அதிகாரத்திலுள்ள உத்தியோகங்கள்

சம்பளம் ரூ.35100

1924ல்                 629 பார்ப்பனர்

1934ல் 798         ”

ஆக 169 பேர் அதிகம்.

  1. வைத்திய இலாக்கா

கெஜட்டட் உத்தியோகஸ்தர்கள்

1924ல்   95 பார்ப்பனர்

1934ல் 137         ”

நான் கெஸட்டட் ஆபிஸர்கள்

1924ல் 360 பார்ப்பனர்

1934ல் 262         ”

ஜில்லா உத்தியோகஸ்தர் ஆதிக்கத்தில் ரூ.100க்கு மேல் சம்பளமுள்ள நான் கெஜட்டட் ஆபீஸர்கள்

1924ல் 17 பார்ப்பனர்

1934ல் 24           ”

நான் கெஜட்டட் உத்தியோகஸ்தர்கள் சம்பளம் ரூ.35100

1924ல்   78 பார்ப்பனர்

1934ல் 140           ”

பொதுஜன சுகாதார இலாக்கா கெஜட்டட் ஆபீஸர்கள்

1924ல்   2 பார்ப்பனர்

1934ல் 17           ”

நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகஸ்தர்

சம்பளம் ரூ.100க்கு மேல்

1924ல் 196 பார்ப்பனர்

1934ல் 187           ”

நான் கெஜட்டட் 2ம் வகுப்பு

1924ல் 12 பார்ப்பனர்

1934ல் 26           ”

  1. விவசாய இலாக்கா

கெஜட்டட் உத்தியோகம்

ஏப்ரல்                1924ல் 10 பார்ப்பனர்

”           1934ல் 21           ”

நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகம்

1924ல் 68 பார்ப்பனர்

1934ல் 174         ”

நான் கெஜட்டட் இரண்டாம் வகுப்பு உத்தியோகம்

1924ல் 128 பார்ப்பனர்

1934ல் 148         ”

  1. கால்நடை இலாக்கா

கெஜட்டட் உத்தியோகம்

1924ல் 3 பார்ப்பனர்

1934ல் 8              ”

நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகம்

1924ல் 107 பார்ப்பனர்

1934ல் 130 பார்ப்பனர்

நான் ஜெகட்டட் இரண்டாம் வகுப்பு உத்தியோகம்

1924ல் 11 பார்ப்பனர்

1934ல் 32           ”

  1. இன்ஜினியரிங் இலாக்கா

கெஜட்டட் உத்தியோகம்

1924ல்   72 பார்ப்பனர்

1934ல் 105         ”

நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகம்

சம்பளம் ரூ.100க்கு மேல்

1924ல் 315 பார்ப்பனர்

1934ல் 510         ”

நான் கெஜட்டட் இரண்டாம் வகுப்பு உத்தியோகம்

1924ல் 457 பார்ப்பனர்

1934ல் 459         ”

  1. லோக்கல் பண்டு ஆடிட் இலாக்கா

கெஜட்டட் உத்தியோகம்

1924ல் 4க்கு    3 பார்ப்பனர்

1934ல் 3க்கு    2        ”

ரூ.100க்கு மேற்பட்ட நான் கெஜட்டட் உத்தியோகம்

1924ல் 148க்கு 48 பார்ப்பனர்

1934ல் 120க்கு 93          ”

10.மொத்தத்தில் சென்னை கவர்ன்மெண்டில் உள்ள                  உத்தியோகங்களின் எண்ணிக்கை விவரம்

சாஸ்வதமான கெஜட்டட் உத்தியோகம்

1924ல் 566 பார்ப்பனர்

1934ல் 647           ”

10 வருஷத்தில் 81 பேர் அதிகப்பட்டிருக்கின்றனர்.

நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகம்

சம்பளம் 100க்கு மேல்

1924ல் 3648 பார்ப்பனர்

1934ல் 3965            ”

10 வருஷத்தில் 317 பேர் அதிகம்.

நான் கெஜட்டட் 2வது வகுப்பு உத்தியோகம் ரூ.35100

1924ல் 10,342 பார்ப்பனர்

1934ல்    9828            ”

10 வருஷத்தில் குமாஸ்தாக்கள் உத்தியோகங்களில் மாத்திரம் 514 ஸ்தானம் குறைக்க முடிந்திருக்கிறது.

எல்லா இலாக்காக்களிலும் 35 ரூபாய் சம்பளத்துக்கு மேல் ரூ.100க்குள்பட்ட உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்களின் எண்ணிக்கை.

பார்ப்பனர்

1924ல் 14,516  ”

1934ல் 14,440  ”

10 வருஷத்தில் 70 பேர்களே தான் குறைவுபட்டிருக்கிறார்கள். வருஷா வருஷம் பர்மனன்ட் உத்தியோகங்களில் இருந்து பார்ப்பனர் குறைந்து கொண்டு வருகிறார்களென சிலர் நினைக்கக் கூடும். அப்படி எண்ணுவது சரியல்ல. ஏனெனில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படுவதற்கு முன்னமேயே அவர்கள் பர்மனன்ட்டானவர்கள்.

கெஜட்டட் ஆக்டிங் உத்தியோகங்கள்

1934ல்  பார்ப்பனர் மட்டும் 186.

1934ல் பார்ப்பனரல்லாதார்,

தாழ்த்தப்பட்டவர், முஸ்லீம், இந்து, கிறிஸ்துவர் மற்றுமுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து 191.

ஆகவே பார்ப்பனர்கள் தென்னிந்தியாவில் மற்ற எல்லா சமூகத்தார் களையும்விட 5 பேர்தான் எண்ணிக்கையில் குறைந்து இருக்கிறார்கள். பரிதாபம்!

நான் கெஜட்டட் உத்தியோகம் ஆக்டிங் டெம்பரரி உத்தியோகம் சம்பளம் ரூ.100க்கு மேல்

பார்ப்பனர் மட்டும் 597,

இதர சமூகத்தினர் எல்லாரும் சேர்ந்து 690.

நான் கெஜட்டட் உத்தியோகம் சம்பளம் ரூ.35க்கு மேற்பட்டும், 100க்கு குறைவும்.

பார்ப்பனர் மட்டும் 2414

பார்ப்பனரல்லாதார்,

முஸ்லீம்,

தாழ்த்தப்பட்டோர்,

கிறிஸ்தவர் மற்றுமுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து  3682

இந்தப்படியான உத்தியோகங்களின் மொத்த சம்பளம் ரூ.332 லட்சத்தில் 100க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர் மாத்திரம் வருஷம் 159 லட்ச ரூபாய் அடைகிறார்கள். மற்ற வகுப்பார் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம், தாழ்த்தப்பட்டவர்கள் முதலிய எல்லோரும் சேர்ந்து 100க்கு 49 வீதம் உள்ள மக்கள் 163 லட்ச ரூபாயே பெறுகிறார்கள்.

இந்தப் புள்ளி விபரங்கள் சிறிதாவது தவறானதென்றோ அதிகப் படுத்திக் கூறுவதென்றோ யாரும் கருதிவிடக் கூடாது என்றும் சர்க்கார் கணக்கு புள்ளி விபரங்களையே பார்த்து அதிலுள்ளபடியே குறிப்பிடப் பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இன்று இந்நாட்டில் செல்வவானாய் இருந்தாலும், ஏழையாய் இருந்தாலும் ஜமீன்தாரராகவும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாகவோ, கூலிக்காரனாகவோ இருந்தாலும் ஒவ்வொருவனும் அவனுடைய வாழ்க்கைக்கு உத்தியோகத்தையே முதலில் எதிர்நோக்குகிறான் என்பதையும் அதை மனதில் வைத்தே அவனவன் பிள்ளையை படிக்க வைக்கிறான் என்பதையும், படித்தஉடன் அவன் படிப்புக்குத் தக்கபடியும், அதற்கு மேற்பட்டும் உத்தியோகத்தையே தேடித் திரிகிறான் என்பதையும் மக்கள் நிலையை அறிந்தவர் எவரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம்.

அப்படி இருக்கும் போது ஒரு தனி மனிதனோ ஒரு தனி வகுப்போ உத்தியோகத்தை தேடித் திரிவதையோ உத்தியோக வேட்டை ஆடுவதையோ, யாரும் தப்பு என்று சொல்லிவிட முடியாது என்பதே நமதபிப்பிராயமாகும்.

அதிலும் சர்க்கார் உத்தியோகம் என்பது பொது ஜனங்களுடைய பொது சொத்தாகும். பொது ஜன நன்மைக்கு என்று பொது ஜனங்களுடைய வரிப் பணத்தால் இவ்வுத்தியோகங்கள்  நடந்து வருகின்றனவே ஒழிய வேறில்லை. ஆகவே பொதுஜன நன்மையைக் கோருகின்றவர்கள் என்பவர்களும் வரி கொடுக்கும் ஒவ்வொருவரும் உத்தியோகங்களை அனுபவிக்கவும் ஆசைப்படவும் எப்படியாவது அதை அடைய முயற்சிக்கவும் அருகதை உடையவர்களேயாவார்கள்.

ஜனங்களுக்குப் போதிய அறிவில்லாதபோது இதைப் பற்றி யாரும் கவலைப்படாமல் இருந்தும் ஏதோ பிரைஸ் சீட்டு கிடைத்ததுபோல் அதுவும் சிலருக்கே கிடைக்கும்படி செய்து ஒரு வகுப்பாரே அனுபவித்து வந்ததைக் கண்டும் அதை யோகம் என்றும், பாக்கியம் என்றும், முன் ஜன்ம பூஜா பலன் என்றும் சொல்லப்படுவதை நம்பி, மக்கள் முட்டாள்தனமாய் அலக்ஷியமாய் இருந்து வந்தார்கள். அதனால் பார்ப்பனர்களே எல்லா பெரிய உத்தியோகங் களையும் கைப்பற்றி அதன் பயனை தங்கள் சமூகத்தாரே அடையும்படி செய்ய முடிந்தது.

ஆனால் இப்போது ஜனங்கள் பல வழிகளிலும் கண் விழித்துக் கொண்டு வருகிறார்கள். வெள்ளைக்காரர்கள் அனுபவித்து வந்த உத்தியோகங்களை இந்தியர்கள் அனுபவிக்க வேண்டும் என்று கேட்பது எப்படி நியாயமாகவும் கண்விழிப்பதாகவும் ஆய்விட்டதோ, அது போலவே பார்ப்பனர்கள் என்கின்ற ஒரே ஜாதியார் அனுபவித்து வந்த உத்தியோகங்களை பார்ப்பனரல்லாதார் திராவிடர்கள் என்பவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதும் நியாயமாகவும் கண்விழிப்பாகவும் ஆகிவிட்டது.

அதனாலேயே இதுவரை உத்தியோகம் அனுபவிக்காதவர்களும் இனி அனுபவிக்க ஆசைப்படுபவர்களும் அதையே தங்கள் நோக்கமாக வைத்து ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்களின் தொல்லைக்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இதைச் சமாளிக்க எப்படிப்பட்ட “”பழிபாவங்கள்” சுமத்தப்பட்ட போதிலும் அந்தப் பழி பாவங்களுக்கு சிறிதும் அஞ்சாமல் நடந்து தீர வேண்டியதாய் இருக்கிறது.

இதை அவமானம் என்றோ, தேசத் துரோகம் என்றோ, குலாம்தன மென்றோ கருதுகிறவன் எவனானாலும் அவனை மூடன் என்றும், பொறுப்பை அறியாதவன் என்றும், கோழை என்றும்தான் சொல்லுவோம்.

இந்த உணர்ச்சியைக் கிளப்பிவிட்ட டாக்டர் நாயர் அவர்களையும் சர். தியாகராயர் அவர்களையும் இதே பார்ப்பனர்கள் எவ்வளவு பழித்து இழித்துக் கூறியும் உண்மையான பார்ப்பனரல்லாதார் ரத்தம் ஓடும் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் இன்று வீட்டில் அவர்களது படங்களை வைத்துக்கூட போற்றித்தான் வருகிறார்களே ஒழிய யாரும் அவர்களை தேசத் துரோகி என்றோ மானம் இழந்தவர்கள் என்றோ குலாம்கள் என்றோ கூறத் துணியவில்லை.

அவர்களுக்குப் பின் அவர்களைப் பின்பற்ற வந்தவர்களின் கவலை குறைவாலும், சுயநலத்தாலும் யோக்கியப் பொருப்பற்ற குணத்தாலும் மற்றும் நமது பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்களின் விஷமங்களாலும், சூழ்ச்சிகளாலும் அம்முயற்சி சரியான பலன் அளிக்காமல் போய்விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய, அதைத் தவறு என்று சொல்ல சிறிதும் நியாயமும், ஆதாரமும் இல்லை.

எது எப்படி இருந்தாலும் தேசத்தைப் பொருத்ததானாலும், சமூகத்தைப் பொறுத்ததானாலும் பொருள் இயலைப் பொறுத்ததானாலும் எந்தக் காரியம் செய்ய வேண்டியிருந்தாலும் பார்ப்பனர்கள் கையில் இந்தப்படி ஏகபோகமாய் இருந்து வரும் அதிகாரங்களை ஒழித்து அவர்களது விகிதாச்சாரத்துக்குமேல் அனுபவிக்க முடியாமல் செய்தாலொழிய சுலபத்தில் சாத்தியப்படக் கூடிய தல்ல என்பதை எவரும் ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கிறோம்.

ஆகவே பார்ப்பனரல்லாதாரின் இந்தப் பத்து வருஷ காலத்திய உழைப்பானது “”உத்தியோக வேட்டை”, “”உத்தியோக வேட்டை” என்று பெயர் வாங்கிக் கொள்ளத்தான் முடிந்திருக்கிறதே தவிர பார்ப்பனர்களின் வேட்டையை ஒரு சிறிதுகூட தடுக்க முடியவில்லை என்பதும், உத்தியோகத்தில் பார்ப்பன ஆதிக்கம் முன்னையவிட பலப்பட்டுக் கொண்டுதான் வருகிறது என்பதும் இப்புள்ளி விவரங்களில் இருந்து வாசகர்கள் உணருவார்கள் என்றே நம்புகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  09.06.1935

You may also like...