அகில கூட்டுறவாளர்கள் தினம்
ரஷ்யாவின் கூட்டுறவு வாழ்க்கை விபரங்கள்
ரஷியக் கூட்டுறவு முறை
தலைவரவர்களே! தோழர்களே!! எனக்கு இன்று பேச சந்தர்ப்பம் கொடுத்து எனது அபிப்பிராயங்களை எடுத்துச்சொல்ல அனுமதி கொடுத்த தோழர் கணபதி ஐயர் அவர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும் எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நான் கடைசியாக பேசவேண்டியவனாக இருக்குமென்று கருதினேன். ஆனால் நான் முதலி லேயே பேச ஏற்பட்டுவிட்டது. ஆனபோதிலும் எனது அபிப்பிராயங்களை சொல்லிவிடுகிறேன்.
நான் (கோவாப்ரேடிவ்) கூட்டுறவு சங்கங்கள் என்ற விஷயத்தில் ஆதியில் கொஞ்சம் அக்கரை கொண்டவனாய் இருந்தவன். முதல் முதலாக நம்முடைய சென்னை ரிஜி°ட்ரார் தோழர் ராமச்சந்திரராவும், அதுசமயம் டிப்டி கலைக்டராக இருந்த தோழர் நாராயணசாமி அவர்களும் இங்கு கோவாப்ரேடிவ் °தாபனம் ஏற்படுத்த முதல் முதல் என்னிடமே வந்தார் கள். எங்கள் வீட்டில்தான் கூட்டம் கூட்டப்பட்டது. பாங்கு பு°தகத்தைப் பார்த்தாலும் நான்தான் முதல் பங்குக்காரனாக இருப்பது தெரியவரும். அதற்காகப் பெரிதும் நானும் அந்தக் காலங்களில் உழைத்திருக்கிறேன். என்றாலும் இன்றைய நிலைமையானது நான் கோவாப்ரேடிவ் சொசைட்டி களிலிருந்து சிறிது விலகி அலக்ஷிய அபிப்பிராயமுடையவனாக இருக் கிறேன். ஏனெனில் எங்கு பார்த்தாலும் கக்ஷியும் சுயநலத்துக்கு °தாபனங் களை உபயோகித்துக்கொள்வதும் அதன் உத்தேசங்களுக்கு விறோதமாக பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதுமாய் இருந்துவருவதேயாகும். தோழர் கணபதி ஐயர் அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது நம்முடைய நிலைமையானது இப்படித்தான் இருக்க முடியுமென்று குறிப்பிட்டார். அதுமிக உண்மையேதான். ஏனெனில் நம் நாட்டில் நிலைபெற்றுள்ள பல்வேறுவிஷயங்களையும், முறைகளையும் அடி யோடு மாற்றாமல் நம்முடைய ஜனசமூகத்திற்கு நன்மையைக் கொண்டு வந்துவிடுவது என்பது கொஞ்சமும் முடியாத காரியமாகும்.
ரஷ்யா நாட்டின் கூட்டுறவு முறைகளைப்பற்றி பேசுபவன் என்று உங்களுக்கு தலைவர் எடுத்துச்சொன்னார். சர்வ விஷயத்திலும் ஐக்கிய பாவமான கூட்டுறவு முறையானது சாத்தியப்படுமா என்று ஒருகாலத்தில் கருதி இருந்தேன். ஆனால் எனது மேல்நாட்டு அனுபவங்களினால் அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் கூட்டுறவு முறைகளைக் கவனித்துப் பார்த்ததினால், கூட்டுறவு முறையைப் பற்றிய எனது எண்ணம் சாத்திய மாகக் கூடிய தென்பது மிக்க பலமாக உறுதிப்பட்டது.
என்னைப்பொருத்தவரையில் என்னைப்பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டிருந்தபோதிலும் எனது முடிவான லக்ஷ்யம் அதாவது எனது எண்ணம் ஈடேறுமானால் அது உச்ச°தானம் பெற்ற உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையாகத்தானிருக்கும் என்பதுதான் என் அபிப்பிராயம்.
கூட்டுறவு என்கிற உயரிய சரியான நிலையானது நம்முடைய நாட் டில் ஏற்பட்டுப்போனால் ஜனசமூகமானது கவலையற்று-சஞ்சலமற்று நாளைக்கு என் செய்வோம் என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலைமையற்று நிம்மதியாக-சவுக்கியமாக குதூகுலமாக வாழவழி ஏற்பட்டு விடும்.
நம்முடைய நாட்டில் ஏதாவது ஒருசங்கம் ஏற்பட்டால் அதைப்பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்களென்றால் அதில் தங்களுக்கு எவ் வளவு தூரம் லாபமிருக்கிறதென்றும் அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோஜனப்படுத்திக் கொள் ளலாமென்றும் தான் கருதிக்கொண்டு அதில் சம்மந்தம் வைத்துக் கொள்ளு கிறார்களே ஒழிய அதனால் உலக நன்மைக்கு-ஜன சமூக மேம்பாட்டிற்குப் பாடுபடவேண்டுமென்பதைப்பற்றிய கவலையை அறவே விட்டு விடு கின்றார்கள்.
அதுபோலவே நம்முடைய கோவாபரேடிவ் °தாபனங்களிலும் இருந்துவருகிறது. அந்த °தாபனத்திலுள்ள மக்களுக்குள்ளாகவே கூட்டுறவு உணர்ச்சி கூட கிடையாதென்றே உறுதியாகச் சொல்லலாம். ஆனால் ஏதோ சிலர் அவரவர்கள் தங்களுடைய நன்மைக்காகவும் பட்டம் பதவிகளுக்காகவும் கௌரவத்திற்காகவும் ஏதோ சம்பந்தம் வைத்திருப்ப தினால் மாத்திரம் என்ன பலன் ஏற்பட்டுவிடும்?
சாதாரணமாக இந்த ஊர் கூட்டுறவு °தாபனத்தை எடுத்துக்கொள் ளுங்கள். அதில் 2000, 3000 பேர்கள் வரை பங்குதார மெம்பர்களாக இருக் கின்றார்கள். ஆனால் இந்த °தாபனத்தினால் உருப்படியாக பொது மக்க ளுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடுகிறது? ஒருசில சொற்பபேர்கள், ஏதோ எப்படி கடன் பெறலாமென்று பெருத்த பிரயாசை எடுத்துக்கொள்பவர்களே சில அனுகூலங்கள் அடைகிறார்கள். இவர்களுக்கு •³ °தாபனத்தைப் பற்றிய கவலையே இல்லை. இன்றை உலக எல்லா வாழ்க்கையும் இப்படித் தான் இருக்கிறது. வெறும் குற்றத்தையே பேசுவதால் பயனில்லை. ஆனாலும் இவைகள் தக்க படிப்பினையாக இருக்க உதவ வேண்டும். கூட்டுறவு வாழ்க்கையென்றால் பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது எவ்வாறு உதவி செய்வது என்கிற விஷயங்களே நமது வாழ்க்கை யின் முக்கிய லக்ஷியமாய் இருக்கவேண்டும். என்பதாகும். இவைகளில் தனித்தனி மனிதனைப்பொறுத்த தத்துவம் என்பதே கூடாது.
சாதாரணமாக நாம் நம்மிடையே ஒருவரை புதிதாகக் கண்டால் அதாவது சந்தித்தால் அவருடைய நிலை என்னவென்றும், உத்தியோகம் என்னவென்றும் வினவஆசைப்படுகிறோம். அவர் ஒரு பெரிய உத்தியாக° தனாகவோ, பணக்காரனாகவோ இருந்தால் ஒரு தனி மதிப்பும், ஒரு குமா° தாவாக இருந்தால், கூலியாக இருந்தால், ஒரு தனிமதிப்பும் தான் கொடுக் கின்றோம். இது தான் நம்முடைய நாட்டில் ஒரு மனிதனை மதிப்பதைப் பற்றிய முறையாகும். ஆனால் ரஷ்யாவிலோ இங்குள்ள இதுபோன்ற கேள்விகளை அங்கு யாரும் கேட்பதில்லை. அங்கு ஒருவருடைய உத்தி யோகத்தைப் பற்றியோ, செல்வத்தைப் பற்றியோ சிறிதும் யோசிப்பதே இல்லை; விசாரிப்பதுமில்லை. ஒருவனைக் கண்டதும் அவன் (ளுடிஉயைடளநசஎiஉந) சமுதாயசேவை என்ன செய்திருக்கிறான் என்று மட்டுமேதான் பிரதானமாக கவனிப்பார்கள், அதைத்தான் கேட்பார்கள். ஒருவர் பிறருக்கு என்ன நன்மை புரிய ஏற்றுக்கொள்ளுகிறார் என்பது தான் மனிதனை அறிய முக்கிய தத்து வமாகும். அதுதான் அங்கு அவனுடைய பெருமையைக் காட்டுவதாகும். அங்கு உத்தியோகத்தைப் பற்றிய பேச்சோ, வருமானமோ, மேல்கீழ் வரும்படி என்பது போன்ற பேச்சோ, எங்கும் எவ்வித ரூபத்திலும் கிடை யாது. அங்கு எங்கும் யாவரும் சமுதாய வேலை செய்வோரேயாவார்.
நான் ரஷ்யாவில் இருந்த காலத்தில் ஒரு நியாய°தலத்தைப் பார்வை யிட அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஒரு குற்றவாளியை விசாரிக்கக் கண்டேன். அவன் ஒரு விசேஷ நாளில் குடித்து வெறியனாகி கலகம் செய்தான் என்பதான குற்றவாளி. இவனை அந்த விசாரனை °தலத்தில் என்ன கேள்வி கேட்டார்கள் என்றால் உன்னுடைய ளுடிஉயைட ளுநசஎiஉந றுடிசம (சமுதாய ஊழிய வேலை) என்ன என்பதேயாகும். அவன் அதற்கு எனக்கு ளுடிஉயைட ளுநசஎiஉந சமுதாய வேலை இல்லைஎன்றான். இதைக் கேட்டதும் நியா யாதி பதியும் ஜூரியான ஒருபெண்ணும் ‘உனக்குசமுதாய வேலையில் லாமல் போய் விட்டது என்கிறாயே வெட்கமில்லையா? என்னை உலகுக்கு உப யோகப்படுத்திக் கொள்ள வகையற்றவனாக இருக்கிறேன் என்று சொல் லுவது அவமானகரமானதாகத் தோன்றவில்லையா?” என்று கடிந்தார். அதற்கு அவன் எல்லா சோஷியல் சர்வீசையும் சிறு பிள்ளைகளாகிய கம்சமால் கூட்டத்தார் எடுத்துக்கொள்ளுகிறார்கள், நான் என்ன செய்வது என்றான். அந்தம்மாள் வெட்கம், வெட்கம், என்றாள். இவைகளைக் கேட்ட பிறகு தான் சோஷியல் சர்வி° (ளுடிஉயைட ளுநசஎiஉந) என்பவைகளைப்பற்றி அதிகம் அறிய விசாரணை செய்தேன். சமூக ஊழியம்செய்வது தான் தங்கள் வாழ்க்கையின் கௌரவம் என்பதை முதலாகவும் அடுத்தபடி கூட்டுறவு வாழ்க்கையே மேலானதாகவும் அவர்கள் கருதி நடக்கிறார்கள்.
ரஷ்யர்களுடைய வாழ்க்கையானது உற்சாகமாகவும் சந்தோஷ மாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ளுடிஉயைட ளுநசஎiஉந சும் கூட்டுறவு வாழ்க்கையை நடத்த முனைந்து நிற்பதேயாகும். அவர்கள் வாழ்க்கையில் மேற்போட்டுக்கொள்ளும் இந்த வேலையானது மனிதனுடைய கவலை துன்பம், மனச்சோர்வு என்பவைகளே இல்லாமல் செய்து விடுகிறது. அங் குள்ள சர்வ ஜனங்களுடைய எண்ணமெல்லாம் பிறருக்கு எவ்வளவு தூரம் நன்மைசெய்யவேண்டும்? என்றே குடிகொண்டிருக்கிறது. இந்த நோக்க மில்லாத மனிதனை மனிதனல்ல என்று வன்மையாக அவர்கள் உணர்ந் திருக்கிறார்கள்.
நம்முடைய நாட்டில் உத்தியோகத்தின் பேராலும் மற்ற பதவிகளின் பேராலும் 1000, 2000, 5000, 7000 ரூபாய்கள் கொள்ளை கொள்வது போன்ற கொடுமைகள் ரஷ்யாவில் கிடையாது. அங்கு உள்ளவர்களுக்கு தனக்கு வேண்டிய அளவுக்கு மேல் வரும்படி-லஞ்சம்-லாவணம் என்பன போன்றவைகளே அடியோடு கிடையாது. அங்கு ரூபாய் 10,20 கூட கடன் கொடுக்கும் முறையோ,கடன்படும் முறையோ கிடையாது. அதுகுற்றமாகும்.
ஆனால் அந்தமுறைகள் எல்லாம் நம்முடைய நாட்டின் இன்றைய நிலைமைக்கு சாத்தியமில்லை என்று சொன்னாலும் நம் நாட்டு நிலைமை களை எல்லாம் அடியோடு மாற்றி அமைத்துத்தான் ஆகவேண்டும். இக் கருத்தைத்தான் நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். இது சிறிது சிறிதாய் கோவாப்பரேட்டிவ் °தாபனங்களின் மூலம்செய்யலாம். நம்முடைய நாட்டில் அளவுக்கு மீறிய செல்வச் செருக்கு கொண்டவர்களையும்-கல் நெஞ்சம் படைத்த கணத்த முதலாளிமார்களையும் ஒரு பக்கத்தில் வெகு பந்தோப°தாய் வைத்துக் கொண்டிருக்கின்றோம். மற்றொரு பக்கத்தில் வேலையில்லாத்திண்டாட்டக்காரர்களையும் பிச்சைக்காரர்களையும் வைத் துக் கொண்டிருக்கிறோம். இவைகளெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது? இது போன்ற நிலைமை ரஷ்யாவில் இல்லையே! ஆதிக்கக்காரனுக்கும்-ஆதிக் கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிறவரையிலும் தொல்லைப்படுகிறவர் களும்- தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்யும்.
இன்று காலை முதல் மாலை வரையிலும் என்னிடம் வந்து 5, 6 பேர்கள் வரைவந்து “வேலைகொடு-வேலைகொடு” என்று வருந்தினார்கள். ஒருவருக்கு கலைக்டருக்கு சிபார்சு கடிதம், தாசில்தாருக்கு சிபார்சு கடிதமும் எழுதித்தர வேண்டுமாம். ஒருவர் தனது குழந்தைகளுக்கு அம்மை போட்டிருக்கிறது, சம்சாரத்திற்கும் உடல்நோவு, நான் என்னசெய்வேன். 4 மாதமாக வேலையில்லையே காப்பாற்றுவாறில்லையே என்று கதறினான். நான் அவருக்கு 2 படி புழுங்கல் அரிசி கொடுக்கும்படி வீட்டிற்கு சீட்டு கொடுத்தேன். இதுபோன்ற கொடுமைகளின் தன்மையை இன்று என்னுடன் தங்கியிருந்த நண்பரும் நன்கறிவர். எங்கும் வேலை இல்லை என்ற கூக்குரல் அதிகரித்து விட்டது. ஏன் வேலை இல்லாமல் போய் விட்டது? வேலை இல்லாமை எப்படி ஏற்படும்? என்று யோசித்துப்பார்த்தீர்களா? ஒரு வேலைக்காரன் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை வேலை செய்கின் றான். ஒரு தையல்காரன் 3-மிஷின்களை வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு 5ரூ. 10ரூ. சம்பாதிக்கின்றான் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருவன் அதிக நேரம் வேலைசெய்து அதிகப்பணம் ஒருவனே சம்பாதிப்பது எதற்கு? இவை களையெல்லாம் கணக்குப்போட்டு ஒரு ஒழுங்குமுறைப் படுத்தி ஒரு கூட்டுறவு முறையில் அமைத்தால் அவனவனுக்கு தேவை யான அளவுக்கு ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக போதியபலன் கிடைக்கும்.
நம்முடைய நாட்டில் அடிப்படையான மாறுதல் செய்யாவிட்டால் கூடிய சீக்கிரத்தில் நாம் என்ன கதிக்கு ஆளாகவேண்டிவரும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண்செலவு செய்துவருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தி னால் இன்றைய நமது செலவில் எட்டில் ஒருபாகம் தான் செலவு ஏற்படும் பாக்கி இன்னும் 8-பேருக்கு உதவும்.
உதாரணமாக ரஷ்யர்களின் சாப்பாட்டு முறையைக் கவனியுங்கள். அங்கு சாப்பாடும் கூட்டுறவு முறைதான். அங்கு ஒரு இடத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவேளைக்கு நாற்பதினாயிரம் பேர்கள் சாப்பிடுமிடத்தைக் கண்ணுற்றேன். ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? ஒரு வீட்டில் சமையல் செய்வதென்றால் தேவைக்கு மேல் அதிகமாய்த்தான் போட்டுச் சமைக்கிறார் கள்-4,5 பேர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண் கண்டிப்பாக சமையலுக் கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குடும்ப சமையலுக்கு என்றும் ஒரு தனி அரை. பாக்கி வசதிகளுக்கென்று கொள்ளை கொள்ளை யான இடமும் ஒதுக்கிவைத்துக்கொண்டு என்ன அக்கிரமமான தீங்குகளை வசதியற்ற எளியவர்களுக்கு உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ரஷ்யாவிலுள்ள மேல் சொன்ன பொது சமையல் சாலையில் (ழுநநேசயட முவைஉhநn) 970 பேர்கள் தான் வேலையிலீடுபட்டிருக்கிறார்கள் என்று நான் கணக்குக்கேட்டுத் தெரிந்தேன். நம்முடைய நாட்டில் 4-பேர் களுக்கு ஒரு பெண்வீதம் சமையலுக்கு ஒதுக்கி வைத்துக்கொண்டிருக்கிற கணக்குப்படி 40000 பேர்களுக்கும் எத்தனைப் பெண்களை ஒதுக்கித் தள்ளி கொடுமைக் காளாக்குவது? என்றுதான் யோசித்துப் பார்க்கும்படி கோறுகிறேன். நம் முடைய சமையலைப்பற்றி ஏதாவது பந்தோப°து உண்டா? சமைய லரையையும் சாப்பாட்டுச் சாமான்களையும் சமைத்தபிறகும் அங்கு தினம் டாக்டர் சரியான பரிசோதனை செய்கிறார். ஒரு பெரிய எம்.டி.டாக்டர் அதற்கென்றே ஒவ்வொரு கூட்டுறவு சமயலுக்கு உண்டு. இங்கு நாம் என்ன செய்கிறோம்? சல்லீசான சரக்குகளை வாங்கிப்போட்டு வெந்தும் வேகாமல் அவித்துத் தின்று, சாப்பாட்டின் காரணமாகவே பெரும்பாலும்நோய் அடை கின்றோம். மேல் நாட்டின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டக்குறைவு, அனு கூலம், மிச்சம், சுகாதாரம், சௌக்கியம் ஆகியவைகள் கவனிக்கப் படுகிற தென்பதையோசியுங்கள். அங்கு ஒரு ரொட்டிக்கிடங்கில் (க்ஷயமநசல) நாள் ஒன்றுக்கு 250 டன் ரொட்டிகள் ஒரேசமயத்தில் செய்யப்படுவதைப் பார்த் தேன். கூட்டுறவு முறையினால் ஒருநாள் ஒன்றுக்கு ஒரு இடத்தில் இருபதி னாயிரம் முப்பதுஆயிரம் வீதம் ஷர்ட்டுகள் டிரௌசர்கள், ஜாக்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு அத்தனைபேரும் வேலையிலேயே ஈடுபட்டி ருக்கின்றனர். அங்கு மிகக்குறைந்த சிலவு தான்.
இங்கு நாம் துணி வாங்கிக் கொடுத்தால் காலே அரைக்கால் பாகம் திருட்டும் சேதமாகிறதென்றும் சொல்லலாம். அங்கு அப்படியில்லை. துணியை அப்படியே 200, 300 வீதம் மடிப்பு மடித்து முதலிலேயே சின்ன சின்ன வேலைக்கானவைகளுக்கு அதாவதுபாக்கெட், கழுத்துப்பட்டை கைப்பட்டை முதலானவைகளுக்கு ரம்பத்தில் அறுப்பது போன்ற மிஷினில் அருத்து எடுத்துக்கொண்டு பாக்கியை அப்படியே சேதாரம் இல்லாமல் முழுதும் உபயோகப்படுத்திவிடுகிறார்கள்.
அங்கு ரஷ்யாவில் 2,000-3,000 ஜனங்கள் சந்தோஷமாக சௌக்கி யமாக போதிய சுகாதாரத்தோடு ஒரே கட்டிடத்தில் நிறம்பி வாழ்வதைப் பார்த்தேன். இங்கு நம்முடைய ஒருவீட்டை என்ன அனாவசியமாக 3, 4 அடுக்கு மெத்தைகளுடன் கட்டுகிறோம். அதில் பகுதி பாகம் நாம் உபயோகப்படுத்துவதுகூடஇல்லை. அப்படி உபயோகப்படுத்தும் பாகத்தில் சுத்தம் சுகாதாரம் இருப்பதில்லை. நம்முடைய வீட்டை நிரப்புவது ஒடிந்து போன மத்து கெட்டுப்போன நாற்காலி முரம் கூடை கிழிந்துபோன பாயும் அவிந்து போன தானிய குப்பைகளால்தான். இந்த முட்டாள் தனத்திற் காகவா நாம் பெரும்வீடு வைத்துக்கொண்டுவாழுகிறோம்? என்று யோசித் துப்பாருங்கள்.
அங்கு எப்படி வீட்டு வசதி முறை இருக்கின்றதென கேட்கலாம். சர்வாதிகாரியான °டாலினுக்கும் சாதாரண தொழிலாளிக்கும் சுமார் 10, 16 அடிக்கும் உள்ள ஓர் அளவு இடந்தான். அங்கு ஒரே மாதிரிசாதிக்காய் கட்டிலும், மேஜையும் சிறப்பாக இருக்கும். அங்கு ஒரு சிறு 4 – 4 உள்ள கக்கூசு நூற்றுக்கணக்கானவர்களுக்கு உபயோகப்படுகிறது. தோட்டியே கிடையாது. அது கக்கூஸா என்று நாம் சந்தேகப்பட்டே போய்விடுவோம். அவ்வளவு சுத்தம் அதில் எவ்விதவாடையும் இருக்காது அழகுஒழுங்கான முறை எல்லாம் சேர்ந்திருக்கிறது. இங்கு ஒருவீட்டுக்கு 5 பேருக்கு ஒரு கச்கூசாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு இடம்? அப்படியிருந்தும் என்ன சகிக்க முடியாத சுகாதாரக்குறைவு? இங்கு 300பேர்களுக்கு ஒருதோட்டிவீதம் இருப்பானென்று நம்புகிறேன். இந்த 30,000 பேர்கள் உள்ள ஈரோட்டில் எத்தனை தோட்டிகள்? எத்தனை வீடு, தெருக்கூட்டுகிறவர்கள்? எத்தனை வேலைக்காரர்கள்? இப்படியிருந்தும் இங்கு அசுத்தம் அசுத்தந்தானே என்றும் அதிஅக்கிறமமாக இருக்கிறது. அங்கு கக்கூசுக்கு பக்கதிலேயே படுக்கை அறை இருக்கும் அங்குள்ள முறை கஷ்டத்திற்கே இடமில்லை வழியுமில்லை.
ஒவ்வொருகூட்டுபண்ணையிருக்கும் இடத்திலும் ஒவ்வொரு தொழில் சாலைக்கும் ஒரு நல்ல ஞயசம பார்க் சினிமா, விளையாட்டு இடம், டிராமா சுகாதார வசதிசாலை எல்லாம் அமையப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு °தாபனத்திலும் உள்ள 5000 பேருக்கும் 1000 கூட்டு றவுபேருக்கும்முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுசம்பளம் ஒரே அளவு தான் கொடுக்கப்பட்டு வருகிறது. மேல்கெண்ட மீதியை அக்கூட்ட பொதுஜனங் களுடைய நன்மைக்கு உபயோகப்படுத்துகிறார்கள்.
கூட்டுறவு சிக்கனம்
இங்கு ஒரு மனிதனுக்கு ஒருவண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் அவன் எப்பொழுதும் போய்க்கொண்டிருக்கிறானா? 10மணி நேரத்திற்கும் வீணில் தீனிபோட்டு 8மணி நேரத்திற்கும் குறை வாகவே வேலை வாங்குகிறான். 3 மணிநேரத்திற்கு அனுபவிப்பதினால் பாக்கி 7 மணிநேரகூலியும் செலவும் வீணாகிறது. இப்படியேதான் தனிப் பட்டவர்கள் தன்மையால் உண்டாகும் நாசங்கள். அநேகம் நம்முடைய நாட்டில் தேச செழிப்பும் அனுபவப்பொருள்களுற்பத்தியும் ஒன்றுக்கு எட்டாக விளங்கு கிறதா இல்லையா? ஆனால் மக்களின் கஷ்டத்திற்குக் காரணம் என்ன? தனித்தனி என்னும்உணர்ச்சி ஒழிய வேண்டுமா-வேண் டாமா? கவலையற்று வாழ்வது தான் சிறந்தது அதற்கு கூட்டுறவு முறையே தான் பெரிதும் தேவையானது.
இந்த ஈரோடு முனிசிபாலிட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஒன்று சேர்க்கப்பட்டு பலருக்கும் வாழ்க்கை வசதிகளை பூர்த்தி செய்விக்கிற தென்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு பிரயோசனப்படும்? எவ்வளவு செலவு மிச்சமாகும்? எவ்வளவு அனுகூலம்? எவ்வளவு லாபம்? எல்லாவற்றிலும் நன்மையே தான் ஏற்படும். அப்படிக்கின்றி தனிப்பட்ட வர்கள் நன்மைக்கு மாத்திரம் ஏன் எதுவும் இருக்கவேண்டும்.
ஒரு ஹோட்டலை பொதுவாக பல குடும்பங்களுக்கு சேர்த்துவைத்து நடத்தினால் இரண்டணாவுக்கும் கீழாகவே நல்ல சாப்பாடுபோடலாம். அது சத்துள்ளதாகவும், சுகாதாரமுறைப்படியும் இருக்கும். நம்வீட்டில் சமையல் என்னும் பேரால் சரிபாக சாமான் வீணாய்போகிறது. நம்முடைய நாட்டில் என்ன பொதுப்பிரியம் இருக்கிறது? பொது அலுவல்களில் டாக்டர் பரீiக்ஷ செய்து என்ன சௌக்கியமாக எத்தனை காரியங்களைச் செய்யலாம். இது போலவே வியாபாரத்திலும் கடையில் பேரம் செய்யும்போது கிராமக் குடியானவனிடம் 9 சாக்குப்போட்டு விட்டு 10 சாக்கு என்று பித்தலாட்டம் செய்வது தெரியும். ஒன்றுக்கு ஒன்ரரையாய் எடுத்துக்கொள்வது தெரியும். இது நானும் செய்திருக்கிறேன். நம்மிடம் நிறைந்திருப்பது பொய், சரக்கோ கலப்படம், உபயோகிப்பதோ முக்கால் அளவுள்ளபடிதான். இவைகளினா லெல்லாம் எவ்வளவு நஷ்டம்? இவைகளை எல்லாம் கூட்டுறவு முறையில் லக்ஷியம்கொண்ட ஜனத் தலைவர்கள் என்பவர்கள் ஏன் ஊடிவேசடிட செய்து அடக்கித்தடுக்கக் கூடாது? ஒவ்வொரு தனிப்பட்டவனையும் ஒன்றுபடுத்தி நீயும் வா எல்லோரும் ஒரு காரியத்தை செய்வோம். எல்லோரும் லாபம் பெறுவோம். அதிக லாபமும் அதிக ஓய்வும் எடுத்துக்கொள்ளும் என்று ஏன் கூட்டுறவுத்தன்மையை பிரவேசிக்கக்கூடாது?
இம்முறைகள் என்றைக்காவது தலைதூக்கிதான் ஆகவேண்டும். இதற்காக பொதுவுடமை வேண்டுமா? பொதுவுடமை பேச்சே வேண்டிய தில்லை. ஆனால் இன்றே கூட்டுறவு தன்மையைக் கைப்பற்றுங்கள், வட்டி விஷயத்திலும் பாங்குகளில் ஏராளமான ரூபாய் தூங்குகிறது. இங்கு வட்டி 10க்கு மாதம் கால் ரூபாய் வாங்குகிறானே? என்ன கொடுமை? ரஷ்யாவில் லேவாதேவியும் செய்யக்கூடாது? ஒருவனுக்கு ஐந்து ரூபாய் கடன் கொடுத் தால் அது அங்கு திருட்டு ஆகிவிடுகிறது. ஆபத்தில் உதவுவதென்றால்- கஷ்டத்துக்காகயிருக்குமென்றால்-ஏன் ஆபத்தும், கஷ்டமுமான நிலைமை யும் ஏற்படும் என்பது தான் அங்கு கேட்கப்படும் கேள்வியாகும்.
ஜனசமூகம் கவலையற்று வாழஒழுங்கான முறை கூட்டுறவுத் தத்துவ வாழ்க்கை முறையேயாகும். நான் அதிகமாகச் சொல்லவரவில்லை. இவை களைத்தான் சொல்ல நினைத்தேன். இதற்கு மக்கள் தயாராகிவிடவேண்டும். சுயநலத்தை ஒதுக்கி வைத்துவிடவேண்டும்-பலருடைய நன்மைக்கும் என்று கருதி இரங்கவேண்டும். இவற்றைச் சர்க்கார்செய்யவேண்டியதா? பொது ஜனங்கள் செய்யவேண்டியதா? என்பது ஆ°திகர்கள் விதி பெரிதா? மதி பெரிதா? ஏன்று தர்க்கிப்பதை ஒத்ததாகும். இவ்விவகாரங்களில் வலுத்த வன், வாய்ப்பேச்சுக்காரன் தான் ஜெயமடைவான். சர்க்கார் தான் ஜனங்கள்; ஜனங்கள் தான் சர்க்கார் என்பதை உணருங்கள். நமது சரீரத்தில் கஷ்டம் ஏற்பட்டால் நமக்கென்னவென்று நாம் இருப்போமா? அதுபோல் நமது உணர்ச்சிகள் இருக்கவேண்டும். சிப்பியானது திறந்திருக்கும் பொழுது மழை ஜலம் விழும்போது தான் முத்தாகிறது. அதுபோல் தான் நமது உணர்ச்சிகள் பக்குவப் படுத்தி சரிப்படுத்தி வைத்துக்கொண்டு தயாராகவே இருக்க வேண்டும். அப்பொழுது கண்டிப்பாக பலன் ஏற்பட்டுவிடும். நம்முடைய அபிப்ராயந்தான் ஜனசமூக அபிப்பிராயம் என்று தன்நம்பிக்கையுடன் நாம் வேலை செய்யவேண்டும். நமது உடலில் பழைய தனித்தனித் தத்துவ இரத்தத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்ற இரத்தத்தைப் பாய்ச்ச (ஐதேநநவ) செய்யவேண்டும். இது நம்மால் முடியுமா? என்று இருக்கக்கூடாது. கண்டிப்பாய் இதுமுடியாமல் போய்விடாது.
நம்முடைய மக்கள் மடத்தனத்தில் இருக்கின்றார்கள். அதனால் முடியாது என்றோ அறியாமை அந்தகாரம் சூழ்ந்திருக்கிறது. அதனால் முடியாதென்றும் சொல்லி விடமுடியாது. 1914-18 வருஷத்தில் நடந்த கொடிய மகாயுத்தத்தைக்கூடக் கேள்விப்படாத ரஷ்யர்களே இருக்கிறார்கள். இப்பொழுதும் (ஊணயச) ஜார் அரசன் இருந்து அரசாளுகின்றான் என்றே கருதிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார் கள். இதனால்எல்லாம் அங்கு சகித்துக்கொண்டிருந்த கூட்டுறவு தன்மை ஏற்படாமல் போய்விட்டதா? எப்படிகாய்ந்த தீய்ந்த சருகில் அதி வேகமாய் நெருப்புத்தீ பற்றிக்கொள்ளுகிறதோ அப்படியேதான் அங்கு மதம் ஒழிந்து-கடவுள் மாய்ந்து-அரசர்கள் மண்ணாங்கட்டிகளாகி செல்வவான்கள் பனிக்கட்டிகளாகி மழை பெய்தாலும் வெய்யில் அடித்தாலும் கெடுவது போல்கெட்டு 16 கோடிஜனங்களும் கூட்டுறவு வாழ்க்கைக்காரராக்கிவிட்டது என்பதை நீங்கள் ஞாபகத்தில் நன்கு பதியவைத்துக்கொண்டு இந்நாட்டு கொடுமை ஒழிப்புக்கு தைரியங்கொண்டு திடங்கொண்டு போராடி உழையுங் கள். உங்கள் உணர்ச்சிகள் இவைகளுக்கு எப்பொழுதும் அனுகூலமாகவே இருக்கட்டும்.
குறிப்பு:- 04.11.1933 இல் ஈரோடு மகாஜன உயர்நிலைப்பள்ளி சரஸ்வதி அரங்கில் அகில கூட்டுறவாளர்கள்தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ரஷியாவில் உள்ள கூட்டுறவு முறையைப் பற்றி ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 12.11.1933