சமதர்ம வெற்றி
நாம், சமதர்ம இயக்கத்திட்டம் அடி கோலி, சட்டசபைகளையும், °தல °தாபனங்களையும் கைப்பற்ற வேண்டும் என்றுதீர்மானித்தபொழுது நம் எதிரிகள் தம் பத்திரிகைகளில் “இந்த நா°திக சு.ம.காரர்களின் இத் திட்டத்தின் படி நமது நாட்டில் ஒரு சிறு °தானத்தையும், எந்த °தல °தாபனத்திலும் அடையமுடியாது என்பதையும் அப்படியடைய முயற்சிக் கும்படி நாம் பகிரங்கமாய் அறை கூவி அழைக்கின்றோம்” என்று எழுதின.
ஆனால் அதன் பின், நமது தோழர்களால் பல ஜில்லா போர்டு, தாலுக்காப்போர்டு, முனிசிபால்டி முதலியவைகளில் பல °தானங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சென்ற மாதம் நமது இயக்கப் பிரமுகர் தோழர் பி.சிதம்பரம் திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் அஸம்பிளிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பொழுது நமது இயக்கப்பிரமுகர்களில் ஒருவரும்புதுக்கோட்டை பெரும் கலகத்திற்கே காரண பூதரென்று சிலகாலம் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவரும் இளைஞரேறுமான தோழர் அட்வகேட் கே. முத்துசாமி வல்லதரசு பி.எ.பி.எல். மறுமுறையும் புதுக்கோட்டை சட்டசபைக்குஅபேட்ச கராக நின்று அதிகப்படியான ஓட்டுகளால் நமது மாற்றலர் தலைகவிழ வெற்றி பெற்றது கண்டு நாம் அடங்கா மகிழ்சியடைவதோடு நாட்டில் சமதர்ம இயக்கத்திற்கிருந்து வரும் செல்வாக்கைகண்டு நமது கொள்கையில் நாம் மேலும் மேலும் அதிக உருதியுடையவராகின்றோம்.
தோழர் வல்லத்தரசு வெற்றி பொதுவாய் நமது நாட்டு ஏழைத் தொழி லாளர்களுக்கும், சிறப்பாய் புதுக்கோட்டை சம°தான ஏழைத்தொழிலாள மக்களுக்கும் விசேஷ பயனளித்து புதுக்கோட்டை சம°தானம் சமதர்ம ஆட்சியாய் விளங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.09.1933
பட்டேல் ஞானோதயம்
தோழர் பட்டேல் அவர்கள் ஒரு பெரிய தியாகி என்றும், தேசபக்தர் என்றும், தேசீயவாதி என்றும் பலர் கருதிக்கொண்டிருப்பது நமக்குத் தெரியும். ஆனால் அவரைப்பற்றிய நமது அபிப்பிராயமெல்லாம் நமது தென்னாட்டில் தியாகி என்றும், தேச பக்தர் என்றும் தேசியவாதி என்றும், பெயர் வாங்கி இருக்கும் தோழர் சத்தியமூர்த்தி சா°திரியார் அவர்களைப் போல், படேல் அவர்கள் ஒரு ஆல் இந்தியா சத்தியமூர்த்தி என்பதேயாகும்.
இந்த கருத்து நாம் அவரை முதல் முதல் எப்போது சந்தித்தோமோ அப்போதே கொண்டதாகும். என்றாலும் தோழர் காந்தியவர்கள் தோழர் படேலின் வசவுக்கும், எதிர்ப்புக்கும், மார்பைக்காட்ட தைரியமில்லாமல் அவரை கைவசப்படுத்தக் கருதி ஒருகாலத்தில் “பட்டேலின் தொடையின் மீது நான் தலைவைத்துப் படுத்துக்கொண்டிருக்கும் போது எனது உயிர் போகுமானால் அதை ஒரு பாக்கியமாகக் கருதுவேன்” என்று சொல்லி தோழர் பட்டேலை தட்டிக்கொடுத்து தப்பி வந்தார். இதன் பயனாக தோழர் பட்டேல் அவர்களும் தீவிர ஒத்துழையாமை காலத்தில் இந்திய சட்டசபைத் தலைவர் பதவிபெற்று “பெரிய தியாகி” யாகி ஏராளமாய் பணம் சம்பாதித்து, உலக விளம்பரம் முதலிய பலன்களைப் பெற்றார். அவர் பார்ப்பனர்களுக்கு தாசராய் இருந்த காரணத்தால், வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவத்தை எதிர்த்த தால் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரை தோழர் சத்தியமூர்த்தியை விட பெரிய தேசபக்தராகவும், தியாகியாகவும் ஆக்கிவிட்டன.
மதத்தில் எப்படி பார்ப்பனர்களும், பார்ப்பனர் எழுதிவைத்த பு°தகங்களுமே பார்ப்பனரல்லாதார்களுக்கு குருவாகவும், வேதமாகவும் இருந்து வந்ததோ அது போல் அரசியலிலும் பார்ப்பனர்களே குருவாகவும், பார்ப்பனப் பத்திரிகைகளே வேதமாகவும் இருந்ததால் பார்ப்பனரல்லாத வாலிபர்கள் அப்படியே நம்பிவிட்டார்கள்.
அது எப்படியோ இருக்கட்டும் இப்போது சீர்திருத்தம் ஏற்பட்டு அது அமுலுக்கு அடுத்த வருஷக்கடைசியில் வரக்கூடும் என்று தெரிந்தவுடன், பழயவாடை அடிக்க ஆரம்பித்துபுதிய ஞானம் பெற்று இந்திய மக்களுக்கு புதிய ஞானோபதேசம் செய்ய வந்து இருக்கிறார்.
“அதாவது இங்கிலாந்து இருதயமற்றதென்பதே எனது அபிப்பிராயம். இந்தியாவினால் இங்கிலாந்து மகோன்னத நிலைய டைந்து விட்டது. இங்கிலாந்து இந்தியாவை உதறித்தள்ளி விட முடியாது. இங்கிலாந் துக்கு பலவந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டா லொழிய இந்தியாவைவிட்டு விடாது.
காந்தியாரின் உபதேசங்களெல்லாம் தவறு, என்று உணர்கி றேன். சமாதானம் செய்துகொள்வதற்கெல்லாம் போதிய காலங்கள் காந்தியாருக்கு அளிக்கப்பட்டு விட்டது. காந்தியாருக்குள்ள அவ் வளவு அதிக அதிகாரங்கள் வேறு எந்த தலைவருக்கும் இந்தியாவில் இல்லை. ஆனால் அவரால் ஏற்பட்ட முடிவான பலன்களெல்லாம் வெறும் பூஜ்யமேயாகும், காந்தீயத்தினால் நாங்களெல்லாம் வெற்றியே ஏற்படாதென்கிற துணிந்த முடிவுக்கு வந்து விட்டோம். நாங்கள் ஒரு புதிய வேலைத்திட்ட முறையை ஒரு புதிய தலைவ ரின் கீழ் நடத்த விரும்புகிறோம்.”
என்கின்ற குறிப்புகளைக்காட்டி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார் என்றாலும், இந்த செய்தி எதுவரையில் இருக்கும் என்பதுயாவரும் சந்தேகப்படக்கூடியது தான். ஏனெனில் தோழர் காந்தியாருக்கு ஏதாவது ஒரு விதத்தில் மறுபடியும் செல்வாக்கு வந்துவிடுமானால் “காந்தியின்றிக் கதி மோட்சமில்லை” என்கின்ற பல்லவியைப்பாட ஆரம்பித்துவிடுவார் என்பதில் யாவரும் சந்தேகப்படவேண்டியதில்லை.
குடி அரசு – கட்டுரை – 24.09.1933