நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்  தலைவிரி தாண்டவம்

 

மதுரை சேர்மென் திரு. ஆர். எஸ். நாயுடு அவர்கள் மதுரை முனிசிபல் கவுன்சிலில் ஏற்பட்ட கக்ஷி பிரதி கக்ஷியினால் தனது சேர்மென் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அப்படியிருந்தும் அதை லக்ஷியம் செய்யாமல் எதிர்கக்ஷி கவுன்சிலர்கள் 19 பேர் கூடியிருந்து ஏகமனதாக அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள். இவரின் கை மிகவும் சுத்தமானது என்றாலும் கக்ஷி பிரதிகக்ஷி அதை கவனிக்க முடி யாமல் செய்து விட்டது. இப்போது திரு. துளசிராம் பி.ஏ., பி.எல். அவர்கள் ஏக மனதாய் மதுரை முனிசிபல் சேர்மெனாக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு  µ 900 ரூபா சம்பளமும் 100 ரூ. அல்லவன்சும் உண்டு.

திண்டுக்கல் சேர்மென் திரு. சோலை நாடார் அவர்களும் கக்ஷி பிரதி கக்ஷி காரணமாக தனது சேர்மென் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவரும் மிக்க பரிசுத்தமும் நாணயமும் உடையவர். நம்பிக்கையில்லாத தீர்மானச் சட்டம் ஏற்பட்டு கொஞ்ச காலமே ஆனதால் அது இன்னமும் சரியானபடி பிரயோகிக்கப் படத்தக்க யோக்கியதை அடைய முடிய வில்லை. யோக்கியர்களும் கை பரிசுத்தமுள்ளவர் களும், அதற்கு பலியாகி வருகிறார்கள். இதற்கு காரணம் நம்பிக்கையில்லாத் தீர்மான சட்டமல்ல. மற்றென்னவென்றால் மந்திரி பதவிகளின் போட்டியால் ஏற்பட்ட பலன் களேயாகும்.

இருந்த போதிலும் புதுச் சட்டப்படி அமைக்கப்படப் போகும் ஸ்தல ஸ்தாபனங்களில் அது தகுந்தபடி பிரயோகிக்கப்படும் என்று கருதுகின்றோம். இப்பொழுது மந்திரி பதவி அடைய போட்டி போடும் பலராலும் நாமி னேஷன் கவுன்சிலர்களே பெரிதும் கவுன்சிலுக்குள்ள கலகத்திற்கு காரண மாயிருப்பதால் இன்றைய நாமினேஷன் முறை இருக்கும் காரணம் சரியாய் பயன்பட முடியாமல் இருக்கின்றது. ஆதலால் சீக்கிரம் புதிய சட்டப்படி முனிசிபாலிட்டியும், போர்டும் அமைக்கப்பட ஆசைப்படுகின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 21.12.1930

You may also like...