திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சி : திருச்சி மாவட்டக் கழக சார்பில் வைக்கம் நூற்றாண்டு மற்றும் எது திராவிடம்? எது சனாதனம்? என்ற தலைப்பில்  3.2.2024 அன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் கைலாஷ் நகர், காட்டூர் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தை குணராஜ் தொடங்கி வைத்தார். டார்வின் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன், மந்திரமில்லை! தந்திரமே!  பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா கருத்துரையாற்றினார். நிறைவாக குமரேசன் நன்றி கூறினார். நிகழ்வில் மணிகண்டன், சர்மிளா, ஜெய சீனிவாசன், அசோக், ஆறுமுகம், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 15.02.2024

You may also like...