கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022

#அணுசக்தி_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு_ஆலோசனைக்_கூட்டம்_11_01_2022 இணையவழியில் ஒருங்கிணைப்பாளர்
தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

2012 முதல் தோழர்கள் கொளத்தூர் மணி,
கண.குறிஞ்சி, மீ.த.பாண்டியன், அரங்க. குணசேகரன், திருநாவுக்கரசு, பானுமதி, செந்தில்  ஆகியோர் ஒருங்கிணைக்கும் செயற்குழுவாக இயங்கி வந்தோம்.

தோழர்கள் சுப.உதயகுமார், தியாகு, கு.இராமகிருஷ்ணன், நெல்லை முபாரக், அப்துல்சமது, திருமுருகன், சுந்தர்ராஜன் ஆகிய தோழர்களையும் இணைத்து விரிவாக்கப்படுகிறது என்பது கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது.

பங்கேற்றவர்கள்:
மதிமுக – மல்லை சத்தியா
பச்சைத்தமிழகம் – சுப.உதயகுமார்
தபெதிக – கு.இராமகிருஷ்ணன்
சிபிஐ (எம்_எல்) – என்.கே.நடராசன், இரமேஷ்.
தமஜக – கே.எம்.சரீப்
எஸ்.டி.பி.ஐ – அப்துல் ஹமீது
பியூசிஎல் – கண.குறிஞ்சி
ததேமமு – மீ.த.பாண்டியன்
மே 17 – திருமுருகன்
இளந்தமிழகம் – செந்தில்
தமிழர் பாசறை – எழிலரசு
உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

#கூடங்குளம்_அணுஉலைக்_கழிவுகளை_தமிழ்நாட்டில்_புதைக்காதே! என இந்திய ஒன்றிய அரசை எச்சரித்து 31-01-2022 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எச்ரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 

இந்திய ஒன்றிய அரசே!

> அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டிலேயே புதைக்கும் முடிவைத் திரும்பப் பெறு!

> கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா என விரிவாக்கும் திட்டத்தைக் கைவிடு!

தமிழ்நாடு அரசே!

> அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரத்து செய்க!

 

தோழர்களே!
31-01-2022 மாவட்டங்களில் பொறுப்பெடுத்து ஏனைய அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்புத் தோழர்கள் தொடர்பு கொள்ளவும்…

தோழமையுடன்,
கொளத்தூர் மணி
ஒருங்கிணைப்பாளர்
அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு – புதுச்சேரி

தொடர்புக்கு:
94433 59666, 94431 84051
98656 83735,94433 07681
90475 21117,

You may also like...