கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

28.9.2019 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக் கோட்டையை அடுத்த சிகரபள்ளி குமார் தோட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி  முன்னிலையில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களை மாவட்டக் கழகச் செயலாளர் குமார் வர வேற்றுப் பேசினார். வாஞ்சிநாதன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர்

தொடர்ந்து அலேசீபம் பழனி, நீலகிரி கிருஷ்ணன், உத்தனப்பள்ளி முனிராஜ், தாசனபுரம் சுப்பு, யூபுரம் மல்லேஷ் ஆகியோர் தங்கள் கருத்துக்களையும், கழக செயல்பாட்டு திட்டங் களையும் குறித்து கருத்துக்களை முன் வைத்தனர்.

அவரைத் தொடர்ந்து கழக அமைப்புச் செய லாளர் ஈரோடு இரத்தினசாமி கழகத்தின் நிலைப் பாடுகள் குறித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எழுச்சியுடன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும், பெரியாரியல் கொள்கைகளை விளக்கியும் அவற்றை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளை எடுத்துக் கூறியும் உரையாற்றினார்

இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோது புதிய தோழர்களை அழைத்துக் கொண்டு வீச்சாக செயல்பட்ட பழனி செயல்பாடுகளை நினைவுகூர்ந்தும், அதற்கு இங்கு எழுந்த எதிர்ப்புகளைப் பற்றியும், அதைத் துணிவோடு எதிர்கொள்ள பழனிக்குத் துணை நின்ற தோழர்களின் பங்கினையும் நினைவு கூர்ந்தார்.  அதனைத்தொடர்ந்து நாம் இப்போது இருக்கிற சூழலில் தமிழினத்திற்கு ஆபத்தாக தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க பாஜக ஆட்சியின் முன்னெடுப்புகளை விளக்கியும், அதனை எதிர்ப்பதற்கு நாம் எடுக்க வேண்டிய செயல் திட்டங்களைப் பற்றி விளக்கியும், மக்களோடு நாம் மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறைகளைப் பற்றியும் விரிவாக உரையாற்றினார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செய்தி ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம், மாத ஏடான நிமிர்வோம் ஆகியவற்றுக்கு சந்தாக்களைத் திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது

புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை விளக்கி, அக்கொள்கை அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற  வலியுறுத்தியும் வருகிற அக்டோபர் இரண்டாம் நாள் கிருஷ்ணகிரியில் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டத்தை ஒத்த கருத்துள்ளவர்களை உடன்  இணைத்துக் கொண்டு  நடத்துவது என்றும்  முடிவு செய்யப்பட்டது.

கீழ்க்கண்டவாறு  பொறுப்பாளர்களைக் கழகத் தலைவர் அறிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டக் கழகம் : தலைவர் :.   ப. வாஞ்சிநாதன்; செயலாளர்:.       குமார், சிகர பள்ளி; அமைப்பாளர்:     கிருஷ்ணன், நீலகிரி; பொருளாளர்:      மைனர் என்கிற வெங்கடகிரியப்பா; துணைத் தலைவர்:    அலேசீபம் பழனி; துணைச் செயலாளர்:    சங்கர் நீலகிரி; துணை அமைப்பாளர்:   இரமேஷ் சிக்கே கவுண்டனூர்.

கெலமங்கலம் ஒன்றியம் : தலைவர்:    நாகமங்கலம் செந்தில், செயலாளர்: இருதாளம் கிரி, அமைப்பாளர்:  நாகமங்கலம் இரகு, பொருளாளர்: பழையூர் முனிராஜ், துணைத் தலைவர்:  நீலகிரி ஜெகதீஸ்.

சூளகிரி ஒன்றியம் : தலைவர்: லிங்கம்பட்டி ஐயப்பன், செயலாளர்:    உத்தனபள்ளி முனிராஜ், அமைப்பாளர்:     பாலேபுரம் சதீஷ், பொருளாளர்:     ஹரிஷ், அகரம், துணைத் தலைவர்: தேன்துர்க்கம் வெங்கட்ராஜ், துணை செயலாளர்: கிருஷ்ணாபுரம்  சுரேஷ்.

ஓசூர் ஒன்றியம் :  தலைவர்: தாசனபுரம் மாதேஷ், செயலாளர்:   ஓசூர் இமு.

கிருஷ்ணகிரி ஒன்றியம் : தலைவர்: நதி வர்மன், செயலாளர்:  மணி அரசு, அமைப்பாளர்: வினோத்.

தளி ஒன்றியம் : தலைவர்: தாசனபுரம் சுப்பு செயலாளர்:  அனுமந்தபுரம் பிரபாகரன்

திருப்பூர்

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம் முத்துலட்சுமி வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிபாளையம் மாநாட்டு தீர்மானத்தின் படி புதிய கல்வி கொள்கை 2019 வரைவு அறிக்கை கிழித்தெறியும் போராட் டத்தை மாவட்ட தோழர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்துவது எனவும் பெரியாரின் 141ஆ வது பிறந்த நாள் விழாவை  நகரம் முழுவதும் கொடியேற்று விழாவாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் தோழர்கள் முத்துலட்சுமி, முத்து, நீதிராசன், முகில்ராசு, துரைசாமி, அகிலன், அய்யப்பன், தனபால், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்

பெரியார் முழக்கம் 03102019 இதழ்

You may also like...