ஈரோடு-சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்
ஈரோட்டில் : ஈரோட்டில் செப்.15 அன்று மாலை 5 மணி யளவில் விநாயகன் சிலை அரசியல் ஊர்வலத்தில் நடக்கும் ஒழுங்கு மீறல்களைக் கண்டித்து காளை மாடு சிலை அருகிலிருந்து பெரியார் கைத்தடி ஊர்வலம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் புறப்பட்டது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடங்கி வைத்தார். கழகத் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, இரவு 8 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அமைப்புச் செய லாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட 100 தோழர்கள் கைதானார்கள். ஆதித் தமிழர் பேரவை நாகராஜன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் அக்கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் : மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 16.09.2018 அன்று மாலை 4 மணிக்கு ஐஸ் அவுஸ் மசூதி அருகில் நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் பெரியாரின் கைத்தடி, பெரியார் மூகமூடி அணிந்து விநாயகர் ஊர்வலத்தில் மதவதத்தை திணிப்பதை கண்டித்தும், பிள்ளையார் சிலையில் இரசாயன பூச்சுகளை பயன்படுத்தி கடலில் கரைப்பதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். ஊர்வலத்தில் பங்கேற்ற 72 தோழர் களும் கைது செய்யப்பட்டு ஆர்.எம். எஸ் மிசாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் முழக்கம் 20092018 இதழ்