சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

கேரளாவின் மழை வெள்ளத்திற்காக நிவாரண நன்கொடைகளை மக்களிடம் பெறும்போது இரயில் நிலையத்தில் காவல்துறை அநாகரீகமான செயலை கண்டித்தற்காக தோழர்.வளர்மதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தோழர்.வளர்மதி 01.09.2018 காலை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்பை சார்ந்த தோழர்கள் அவரை வரவேற்றனர்.

தோழர்.வளர்மதி புழல் சிறை அருகே உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கும், இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

You may also like...