6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கல்வி உரிமை பரப்புரைப் பயணம் ஆகஸ்டு 20இல் தொடங்கி ஆக. 26இல் முடிவடைகிறது. சென்னை, குடியாத்தம், சங்கரன் கோயில், மேட்டூர், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 6 ஊர்களிலிருந்து பயணக் குழுக்கள் தனித் தனியாகப் புறப்பட்டு பெரம்பூர் வந்து சேருகின்றன. பெரம் பூரில் பயண நிறைவு விழா மாநாடாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட் டோருக்கான கல்வி வேலை வாய்ப்பு எனும் சமூக நீதித் திட்டங்கள் தமிழகத்தை இந்தியா விலேயே முதன்மை மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகக் கல்வி உரிமையில் நடுவண் கட்சியின் குறுக்கீடுகள் தமிழகம் கட்டி எழுப்பிய சமூக நீதிக் கட்டமைப்பைக் குலைத்து வருவ தோடு வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவரைக் குவித்து வருகிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உருவாக்குவதே இப் பயணத்தின் நோக்கம். மொத்தம் 140 ஊர்களில் பரப்புரை நடக்கிறது. தோழர்கள் பயணத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

பயணக் குழுவின் – பயணத் திட்டம் கீழ்க்கண்டவாறு வகுக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் குழு

21.08.2018 – காலை துவக்கம் குடியாத்தம் –  கே.வி. குப்பம்,  லத்தேரி,  காட்பாடி,  சேன்பாக்கம் (வேலூர்)  – இரவு தங்கல்

22.08.2018 – பூட்டுத்தாக்கு,  மேல் விசாரம்,  மாம்பாக்கம்,  திமிரி,  அகரம்,  கலவை –  இரவு தங்கல்

23.08.2018 – அணைக்கட்டு,  தேவிசெட்டிகுப்பம்,  ஒடுக்கத்தூர் (திருப்பத்தூர்) – இரவு தங்கல்

24.08.2018 – ஊத்தங்கரை,  மத்தூர்,  கிருட்டிணகிரி,  காவேரிப்பட்டிணம்,  பையூர்,  காரியமங்கலம் – இரவு தங்கல்

25.08.2018- தருமபுரி,  மூக்கனூர்,  கடத்தூர்,  பொம்மிடி,  பாப்பிரெட்டி பட்டி,  வலசையூர்,  காரியப்பட்டி,  ஆத்தூர் – இரவு தங்கல்

26.08.2018 – தலைவாசல்,  இலுப்ப நத்தம்,  வீரகனூர்,  எசனை,  வடகுமரி,  பெரம்பலூர் பயண நிறைவு.

ஒருங்கிணைப்பாளர்கள்: குடியாத்தம் சிவா, மேட்டூர் பரத்

சங்கரன் கோயில் குழு

21.08.2018 – காலை துவக்கம் – சங்கரன் கோயில்,  இராஜபாளையம்,  திருவில்லிப்புத்தூர்,  சிவகாசி,  விருதுநகர்  – இரவு தங்கல்

22.08.2018 – கள்ளிக்குடி,  சிவரக் கோட்டை,  திருமங்கலம்,  திருப்பரங் குன்றம்,  புதூர்,  மதுரை – இரவு தங்கல்

23.08.2018 – மேலூர்,  மேலவளவு,  ளு.ளு. கோட்டை,  சிவகங்கை,  நாட்டரசன் கோட்டை,  காளையார் கோயில் – இரவு தங்கல்

24.08.2018 – கள்ளல்,  காரைக்குடி – இரவு தங்கல்

25.08.2018 – கண்டனூர்,  புதுவயல்,  திருமயம்,  நமணசமுத்திரம்,  கறம்பக் குடி – இரவு தங்கல்

26.08.2018 – கீரனூர்,  குண்டூர்,  திருச்சி,  பெரம்பலூர் – பயண நிறைவு

ஒருங்கிணைப்பாளர்கள் : பால் வண்ணன், நாத்திக ஜோதி, பவானி வேணுகோபால்

மேட்டூர் குழு

20.08.2018 – காலை 9-00 மணி – மேச்சேரி,  11  மணி – மல்லிகுந்தம்,  12 மணி – பொட்டனேரி,  மாலை 7 மணி -கொளத்தூர் பொதுக்கூட்டம்

21.08.2018 – காலை 10 மணி- இராமன் நகர்,  11.30 மணி- புதுச்சாம்பள்ளி,  மாலை 4.30 மணி – தங்கமாபுரி பட்டிணம்,  இரவு – 7 மணி – மேட்டூர் ஆர்.எஸ்  பொதுக்கூட்டம்

22.08.2018 – காலை 9 மணி – பூலாம்பட்டி,  11 மணி – சித்தூர்,  மதியம் 1 மணி – எடப்பாடி,  மாலை 4 மணி – தேவூர்,  மாலை 7 மணி – குமாரபாளையம் – இரவு தங்கல்

23.08.2018 – காலை 9 மணி – குமாரபாளையம்,  காலை 10.30 – காளிங்கண்நாயன்பாளையம்,  மாலை 4 மணி – கிருஷ்ணம்பாளையம்,  மாலை 7 மணி – பள்ளிபாளையம் – பொதுக்கூட்டம்

24.08.2018 – காலை 9 மணி – வெப் படை,  காலை 11 மணி – தேவனாங் குறிச்சி,  மாலை – திருச்செங்கோடு – இரவு தங்கல்

25.08.2018 – காலை 9 மணி – கோழிக்கால் நத்தம்,  காலை 11 மணி – காளிப்பட்டி,  மதியம் 12 – ஆட்டை யாம்பட்டி,  மாலை – இராசிபுரம் – இரவு தங்கல்

26.08.2018 – காலை 9 மணி – நாமகிரிப்பேட்டை,  காலை 11 மணி – தம்மம்பட்டி,  மதியம் 12.30 – கங்க வள்ளி,  மாலை 4 மணி – வீரகனூர்,  பெரம்பலூர் – பயண நிறைவு

ஒருங்கிணைப்பாளர்கள் : சி. கோவிந்தராஜ், மேட்டூர் சக்திவேலு

மயிலாடுதுறை குழு

20.08.2018 – காலை துவக்கம் – மயி லாடுதுறை, மணல்மேடு,  குத்தாலம்,  மயிலாடுதுறை – இரவு தங்கல்

21.08.2018 – செம்பனார் கோயில்,  காரைக்கால்,  நாகப்பட்டினம்,  திருவாரூர் – இரவு தங்கல்

22.08.2018 – திருவாரூர்,  லெட்சு மாங்குடி,  மன்னார்குடி,  மன்னார்குடி – இரவு தங்கல்

23.08.2018 – நீடாமங்கலம்,  நாச்சி யார் கோயில்,  கும்பகோணம் – இரவு தங்கல்

24.08.2018 – பாபநாசம்,  அய்யம் பேட்டை,  தஞ்சாவூர் – இரவு தங்கல்

25.08.2018 – திருவையாறு,  திருகாட்டுப்பள்ளி,  காட்டூர்,  திருச்சி – இரவு தங்கல்

26.08.2018 – சமயபுரம்,  பாடாலூர்,  பெரம்பலூர் – பயண நிறைவு

ஒருங்கிணைப்பாளர்கள் : நா. இளைய ராசா, மகேஷ்

சென்னை குழு

20.08.2018 – காலை துவக்கம் – நங்கை நல்லூர்,  மடிப்பாக்கம்,  கோவிலம் பாக்கம்,  சேலையூர் – இரவு தங்கல்

21.08.2018 – கண்டிகை,  கூடுவாஞ் சேரி,  மறைமலைநகர்,  செங்கற்பட்டு – இரவு தங்கல்

22.08.2018 – மதுராந்தகம்,  கீழ் கொடுங்காலூர்,  திண்டிவனம்,  நாட்டார்மங்கலம் – இரவு தங்கல்

23.08.2018 – செஞ்சி,  நேம்பூர்,  கஞ்சனூர்,  விழுப்புரம் – இரவு தங்கல்

24.08.2018 – உளுந்தூர்பேட்டை,  மங்களம்பேட்டை,  விருதாச்சலம்,  கருவேப்பளங்குறிச்சி – இரவு தங்கல்

25.08.2018 – பெண்ணாடம்,  திட்டக்குடி,  தொழுதூர்,  லப்பக்குடி காடு – இரவு தங்கல்

26.08.2018 – மங்களமேடு,  வாலி கண்டபுரம்,  பெரம்பலூர் கூட்டுச் சாலை,  பெரம்பலூர் – பயண நிறைவு

ஒருங்கிணைப்பாளர்கள் :  இரா. உமாபதி, ந. அய்யனார்

திருப்பூர்  குழு

21.08.2018 – காலை 19-00 மணி – திருப்பூர் பெரியார் சிலை – 11 மணி – அவினாசி, 12 30 மணி – கருவலூர், மாலை 3 மணி – அன்னூர், மாலை 5 மணி – மேட்டுப்பாளையம், இரவு தங்கல்

22.08.2018 – காலை10.30மணி – சிறுமுகை, 12.30மணி – இரும்பொறை, மாலை 3.45 மணி     -திருமலை கவுண்டம் பாளையம், மாலை 5.15 மணி – சேவூர், மாலை 6.45 மணி – 15 வேலம்பாளையம், மாலை 8 -அனுப்பர் பாளையம் – இரவு தங்கல்

23.08.2018 – காலை 10 மணி – திருப்பூர் புதிய பேருந்து நிலையம், காலை 11.30 – நல்லூர், மதியம் 12.45 – செட்டிப்பாளையம், மதியம் 01.45 – வீரபாண்டி, மாலை 3.30 மணி – பல்லடம், மாலை 5.30 – குடிமங்கலம், இரவு 8 மணி – உடுமலை.

24.08.2018 – காலை 9 மணி – கடத்தூர், காலை 10.15 மணி கணியூர் – பேருந்து நிறுத்தம், காலை 11.45 – மடத்துக்குளம், மாலை 3.30 – குமரலிங்கம், மாலை 5.15    – பாப்பம்பட்டி, மாலை 6.30 – நெய்க் காரம்பட்டி, இரவு   8 – பழனி பெரியார் சிலை

25.08.2018 – காலை 9 மணி – ஆயக்குடி, காலை 10.30 – ஒட்டன் சத்திரம், மதியம் 1 – திண்டுக்கல், மாலை 3.30 – திண்டுக்கல் பேருந்து நிலையம், மாலை 7.15 – வையம்பட்டி, இரவு 8.30  – மணப்பாறை

26.08.2018 – காலை 10 மணி – தோக மலை, காலை 11மணி-குளித்தலை,  மதியம் 12.30 – முசிறி –  பெரம்பலூர் – பயண நிறைவு.

ஒருங்கிணைப்பாளர்கள்  : சூலூர் பன்னீர்செல்வம், கோவை நிர்மல் குமார்

– தலைமைக் கழகம்

பெரியார் முழக்கம் 02082018 இதழ்

You may also like...