உரிமை முழக்க ஊர்திப் பேரணி வெற்றிக்கு உழைத்த தோழர்கள்
ஊர்திப் பயணத் தில் முழுமையாகப் பங்கேற்றத் தோழர்கள் : இரண்யா, கனலி, பரத், விஜி, மாரி அண்ணன், கொளத்தூர் குமார், புகழேந்தி, பாலு துரை, சரஸ்வதி, சுதா, கிருஷ் ணன், பிரபாகரன், கனல் மதி, சாமிநாதன், சங்கர், செல்வேந்திரன், இராசேந்திரன், தம்பி துரை, பிரதாப், பென்னட், அண்ணா துரை, சிவகாமி, முத்துக் குமார், செல்வம், அம்ஜத் கான், மலர், சங்கீதா, யாழிசை, யாழினி, மீனா, முத்துப்பாண்டி, சஜினா, சௌந்தர், சுசீந்திரன், திலீபன், ஜென்னி, மதிவதனி, கதிரவன், இளமதி, யாழினி, சூலூர் பன்னீர் செல்வம், ஜோதி, தமிழ்ச் செல்வன், அறிவுமதி, இராமச்சந்திரன், யுவராஜ், சத்தியராஜ், வேணுகோபால், கதிர்வேல், இரத்தினசாமி, விக்னேஷ், குமரேசன், பால் பிரபாகரன், துரைசாமி, கண்ணன், அய்யப் பன், சக்திவேல், கார்த்திக், சந்திரசேகர், தினேஷ், விஜயகுமார், கோபி, கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், .
- பறைக்குழுத் தோழர்கள் (மேட்டூர் காவேரிகிராஸ் பகுதி) : சக்திவேல், கார்த்திக், சந்துரு, விக்னேஷ், ஆர்.எஸ். விவேக், அண்ணாதுரை, இரண்யா, குமரேசன், கொளத்தூர் பரத்.
- பயணக் குழு செலவுக்காக தொடக்கம் முதல் நிதியை முன்னின்று திரட்டிக் கொடுத்த தோழர்கள் கொளத்தூர் பரத், நங்கவள்ளி கிருஷ்ணன், மேட்டூர் ஆர்.எஸ். பகுதி சுசீந்திரன், இரண்யா, குமரேசன் ஆகியோர். ஊர்திப் பேரணி வெற்றிக்கும் இவர்கள் முக்கிய காரணமானவர்கள்.
- உண்டியல் வசூல் மூலம் வந்த தொகை: 9.5.2018இல் – ரூ.3,488; 10.5.2018இல் – ரூ.11,219; 11.5.2018இல் – ரூ.9,050; 12.5.2018இல் – ரூ.2,580.
- ஊர்திப் பேரணிக்காக இரத வாகனத்தை ஈரோடு இரத்தின சாமி மேற்பார்வையில் நாத்திகசோதி, குமார், பவானி வேணுகோபால் ஆகியோர் வடிவமைத்தனர்.
- பயணக் குழு செல்வதற்காக முன்னேற்பாடுகளை – தோழர்கள் தங்குவதற்கு, உணவு போன்ற ஏற்பாடுகளைச் செய்வதற்கு அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து ஏற்பாடுகளை மாநில பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், ஈரோடு இரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்), திருப்பூர் துரைசாமி (பொரு ளாளர்), சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தனர்.
- குறிப்பாக இந்த பரப்புரை ஊர்திப் பேரணி குழுவில் இருந்த தோழர்களே வாகன ஓட்டுனர்களாகவும், வீதி நாடக கலைஞர்களாகவும், பன்முகத் திறன் கொண்ட தோழர்களாக செயலாற்றினர். இந்த ஊர்திப் பேரணி வெற்றியடைய இதுவும் ஒரு காரணம்.
பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி, சேலம் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்த தோழர்களால் முதலில் திட்டமிடப்பட்டது. பின்பு கழகத் தலைவரின் ஆலோசனை பேரில் இதை மாநிலம் தழுவிய நிகழ்ச்சியாக மாற்றி விரிவுபடுத்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பயணக் குழு தோழர்களுக்கான சீருடைகளை காவை ஈசுவரன் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
- உரிமை முழக்க ஊர்திப் பேரணி தொடக்கம் முதல் முடியும் வரையிலான அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பான முழு விவரங்களையும் குறிப் பெடுத்து வந்தார் மேட்டூர் அண்ணாதுரை.
- ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி முடிந்து இரவு உணவு வேளை முடிந்த பின்பு அடுத்த நாள் நிகழ்ச்சிக்கான தோழர்களின் பயணக் குழு பணிகள், நிகழ்ச்சி குறைபாடுகள் போன்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டன. இதுவும் பயணக் குழு வெற்றிக்கு காரணமாகும்.
- நிகழ்ச்சிகளை புகைப்படக் குழு தோழர்கள் கொளத்தூர் விஜி, விக்னேஷ் ஆகியோர் படமெடுத்தனர்.
- பயணக் குழு வாகன ஓட்டுனர்கள்: ஆனைமலை கதிர்வேலு (மாவட்ட அமைப்பாளர்), பரத், பாலு துரை, குமரேசன், அம்ஜத்கான், ராஜா.
தொகுப்பு : மேட்டூர் அண்ணாதுரை
பெரியார் முழக்கம் 24052018 இதழ்