தோழர்கள் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் வீடு முற்றுகை சென்னை 17062017

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பாஜகவின் பினாமியான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17062017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழர் விரோத பாஜகவின் அடியாளாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA என அடக்குமுறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தோழர்கள் முழக்கமிட்டனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் அப்துல் சமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு, SDPI (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே.எம்.ஷெரீஃப், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர்கள் தோழர் அரங்க குணசேகரன், தோழர் பொழிலன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் தோழர் உதயகுமார், ஆதித் தமிழர் கட்சியின் தோழர் வென்மணி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, தமிழர் விடியல் கட்சித் தோழர் நவீன், தமிழர் தேசிய முன்னணியின் தோழர் இறைஎழிலன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசு, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன் தமிழ்த்தேச குடியரசு இயக்கத்தின் தோழர் செந்தமிழ்வாணன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், டிசம்பர் 3 இயக்கம், சிபிஎம்எல்(மக்கள் விடுதலை) கட்சியின் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர் பாவேந்தன், வழக்கறிஞர் ராமராஜ், நெடுவாசல் போராட்டக் குழு தோழர் திருமுருகன், குமுக விடுதலை இயக்கத்தின் தோழர் சேகர், சமூக நீதி மாணவர் இயக்கம், தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தோழர் சின்னப்பத் தமிழர், தோழர் கி.த.பச்சையப்பன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

19225447_1989385331281872_1278268254069630237_n 19148947_1989385244615214_7392770590246837441_n 19225862_1989385191281886_9198918329231086570_n 19145991_1989385164615222_5305404932217074082_n 19149000_758574164348181_1668419465005350852_n

You may also like...