பவானியில் எழுச்சியுடன் நடந்த ‘பெரியாரியல் பயிலரங்கம்’

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 2 நாள் பயிலரங்கம் பவானியில் தோப்பு துரைசாமி தோட்டத்தில் நடை பெற்றது. 17.04.2016 (ஞாயிறு) மற்றும் 18.04.2016 (திங்கள்) – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பயிலரங்கில் பல்வேறு தலைப்பு களில் தோழர்கள் வகுப்புகளை எடுத்தனர்.

முதல் நாள் நிகழ்வு 17.04.2016 அன்று காலை துவங்கியது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

காலையில் “பெரியாரியல் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மதியம் “இந்துத்துவா” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பெடுத்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்வு 18.04.2016 அன்று காலை துவங்கியது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி  தலைமை தாங்கினார். சாமிநாதன் நிகழ்வை ஒருங் கிணைத்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, “போக்குவரத்து விதிமுறைகள்” எனும் தலைப்பிலும், மதியம் “மூட நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் காவை. இளவரசு, “மந்திரமா தந்திரமா” நிகழ்ச்சியுடன் வகுப்புகளை எடுத்தனர்.

இரண்டு நாள் பயிலரங்கில் ஏராளமான தோழர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட தோழர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. இரண்டு நாள் பயிலரங்கு ஏற்பாடுகளை கழகத் தோழர்கள் நாத்திக ஜோதி, வேணுகோபால், காவலாண்டியூர் ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, சித்தோடு எழில் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பயிலரங்கு நடத்த தன் இடத்தை வழங் கிய தோப்பு துரைசாமி நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரையும் வழங்கினார்.

பெரியார் முழக்கம் 28042016 இதழ்

You may also like...