தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு கையெழுத்து இயக்கம்

”தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” சார்பாக நடைபெறும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம் 27.08.2016 அன்று மாலை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் துவங்கியது..

இந்திய அரசு, இந்தியாவில் உள்ள தமிழீழ ஏதிலியருக்கு இடைக்கால குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.

தோழர் கோவை இராமகிருட்டிணன்,தோழர் வன்னியரசு, ஓவியர் தோழர் வீரசந்தானம்,தோழர் செந்தில்,தோழர் அருணபாரதி,தோழர் களஞ்சியம்,தோழர் பாரதி மற்றும் இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் , கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

பொது மக்களும் ஏராளமானவர்கள் முன்வந்து கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.

IMG_6695 IMG_6698 IMG_6705 IMG_6706 IMG_6712 IMG_6714 IMG_6718 IMG_6721 IMG_6722 IMG_6724 IMG_6725 IMG_6735 IMG_6737 IMG_6740 IMG_6746 IMG_6752 IMG_6758 IMG_6759

You may also like...