சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலா, பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம், மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மந்தைவெளியில் 27.12.2013 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜான், மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், வழக்கறிஞர் துரை, அருண், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர்.

கறுப்பர் இனத்தின் மீதான நிற ஒதுக்கல் என்ற அடிமைத்தனத்துக்கு எதிராக போராடி, 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு, உலக நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, விடுதலைப் பெற்று, வெள்ளை நிறவெறி அரசின் இனஒதுக்கல் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த மண்டேலா வின் போராட்ட வாழ்க்கையை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார் ரிவோலியா. நீதிமன்றத்தில் மண்டேலாவின் பிரகடனம், எந்த இனமும் மற்றொரு இனத்துக்கு அடிமையாவதை எதிர்த்தது. கறுப்பர், வெள்ளையர் என்ற இரு பிரிவினரும் சம உரிமைகளோடு வாழக்கூடிய ஒரு ஜனநாயக தாராள சுதந்திரக் கொள்கையையே அவர் வலியுறுத்தினார்.

வெள்ளை நிறவெறி ஆட்சி திணித்த இன ஒதுக்கல் கொள்கைகளை உலக நாடுகளும், அய்.நா.வும் நிராகரித்ததோடு, தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி ஆட்சியுடன் உறவுகளையும் துண்டித்துக் கொண்டன.  இந்தப் போராட்டத்தில் கறுப்பின மக்கள் மண்டேலாவை ஆதரித்தார்கள். சிறையிலிருந்து விடுதலையான மண்டேலா, 94 ஆம் ஆண்டிலிருந்து 99 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார். அதற்குப் பிறகு, அவர் அரசியலிலிருந்து விலகிக் கொண்டார்.

பெரியார், பார்ப்பனியம் உருவாக்கிய ஜாதி அமைப்புக்கு எதிராகப் போராடியபோது, ஜாதி யமைப்பில் பாதிக்கப்பட்ட மக்கள், கறுப்பர் இன மக்களைப்போல் பெரியாரை ஆதரிக்கவில்லை. மாறாக, பார்ப்பனியத்தில் மூழ்கிக் கிடந்த மக்கள், பெரியார் கருத்துகளுக்கு எதிராகவே இருந்தனர். எதிர்ப்புகளைப் புறந்தள்ளி, எதிர் நீச்சலில் கருத்துகளைப் பரப்பினார்  பெரியார். ‘இன ஒதுக்கல்’ என்ற கோட்பாட்டில் கறுப்பர்களுக்கு தனி பள்ளி, தனி வழிபாட்டு இடம், தனி வாழ்விடம் என்று முற்றாக வெள்ளையர்களிடமிருந்து நிறத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் கறுப்பர்கள், வெள்ளையர்களுக்கு ‘அடிமை சேவகம்’ செய்தாக வேண்டும். அதுவே தர்மம் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. அதற் கான ஆதாரங்கள், அவர்கள் மதநூல்களிலிருந்தும் எடுத்துக் காட்டப்படவில்லை. ஆனால், இங்கு பிறப்பின் அடிப்படையில் ஜாதியால் ஒதுக்கப் பட்ட மக்கள் பார்ப்பனர், உயர்ஜாதியினருக்கான சேவகர்களாக, அடிமைத் தொழில் செய்பவர் களாக கட்டாயப்படுத்தப்பட்டதோடு, மதம், கடவுள், நம்பிக்கை, சடங்கு, பழக்கம், சாஸ்திரம் என்பவற்றின் அடிப்படையில் நியாயப்படுத்தி, அதை சமுதாயத்தில் நிலைநிறுத்தினார்கள்.

இங்கே பெரியாரை, தேசவிரோதி, மத விரோதி என்று பார்ப்பன ஏடுகள் எழுதின; பேசின. அங்கே மண்டேலா ‘பயங்கரவாதி’ பட்டியலில் சேர்க்கப் பட்டார். தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரசில் இளைஞர் அணியை உருவாக்கி, ‘தேசத்தின் ஈட்டி’ என்று பெயர் சூட்டி, ஆயுதப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார் மண்டேலோ. பிறகு அமைதி வழிக்குத் திரும்பினார். அமெரிக்க உளவுத் துறை, மண்டேலாவை பயங்கரவாதிகள் பட்டி யலிலே வைத்திருந்தது. விடுதலைப் பெற்று, அதிபரான மண்டேலாவுக்கு 2002ஆம் ஆண்டில் அமெரிக்கா, அதன் மிக உயரிய விருதான அமெரிக்க அதிபருக்கான சுதந்திர விருதை வழங்கியபோதும், அதற்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் 2 முறை பேசிய போதும், மண்டேலாவின் பெயர், அமெரிக்காவில் பயங்கர வாதிகள் பட்டியலில்தான் இருந்தது. அதற்குப் பிறகு 2008இல் தான் 6 ஆண்டுகள் கழித்துதான் அவர் பெயர் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது. வரலாற்றில் இப்படித்தான் பயங்கர வாதிகளாக சித்திரிக்கப்பட்டவர்கள் விடுதலை வீரர்களாக ஏற்கப்பட்டுள்ளனர்.

இன ஒதுக்கல் என்ற அடிப்படையிலும் ‘பாகு படுத்தலுக்கும்’ (னுளைஉசiஅயைவiடிn) எதிராக அய்.நா.வில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜாதியமைப் பின் கீழ் தீண்டாமையும் ஒரு ‘பாகுபாடுதான்’ என்பதை அய்.நா. ஏற்க வேண்டும் என்று இந்தியாவில் ஜாதி எதிர்ப்பு அமைப்புகள் 2001இல் டர்பனில் நடந்த இனவெறிக்கு எதிரான மாநாட் டில் வலியுறுத்தின. அதை இந்தியா எதிர்த்தது. இப்போது பிரிட்டன், தீண்டாமையும் இன ஒதுக்கல்தான் என்று சட்டம் இயற்றியுள்ளதோடு, அய்ரோப்பிய ஒன்றியமும் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி இதே அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், ஜாதி முறையை உருவாக்கிய இந்தியப் பார்ப்பனியம், இந்தியாவில் இதை ஏற்க மறுக்கிறது என்று விளக்கிப் பேசினார், விடுதலை இராசேந்திரன்.

பெரியார் முழக்கம் 02012014 இதழ்

You may also like...