கழகத்தின் இணையத்தள செயல்பாடுகள்

இனி வரும் காலத்தில் கையடக்கமான தந்தி போன்ற சாதனம் அனைவரிடமும் இருக்கும்” என்று கூறிய சமூக விஞ்ஞானி பெரியாரின்எழுத்துக்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் பொருட்டு நமது கழகத்தின் நவீன செய்திதொடர்பு சாதனமாக, கழகத்தின் கொள்கை நிலைப்பாடுகளை, பிரச்சார நோக்கங்களை, போராட்ட முறைகளை, மாவட்ட வாரியான செய்திகளை கழக தோழர்களிடமும், அனைத்து மக்களிடம் சென்று சேர்க்கும் வலுவுள்ள இணையதளமாக (www.dvkperiyar.com) நமது இணையதளம் செயல்பட ஆரம்பித்துள்ளது.
இயக்க தோழர்களுக்கு அதைப் பற்றிய ஓர் அறிமுகம் –
இயக்கம் : முகப்பு பக்கத்தில் இயக்கம் என்ற Menuவின் கீழ் பெரியார் வாழ்க்கை வரலாறு ஆண்டுவாரியாக தொகுத்துள்ளோம். தலைமை அவ்வப்போது அறிவிக்கும் அறிக்கைகளின் பட்டியல் அடுத்து வரும். கழகத்தின் கொள்கை, பிரகடனம், உறுதிமொழி, மாநில மற்றும் பொறுப்பாளர்களின் பட்டியல், துணை இயக்கங்களின் அறிமுகம் மற்றும் அதனதன் பொறுப்பாளர்கள், கழகத்தில் இணைய விரும்பும் தோழர்களுக்கு படிவம் ஆகிய அனைத்தும் இதன் கீழ் வரும்.
மாவட்ட செய்திகள் : தலைமை கழகம் மற்றும் அனைத்து மாவட்டங்களின் எதிர்வரும் நிகழ்வுகள் மற்றும் கடந்து சென்ற கழகப் பணிகளின் தொகுப்பை அந்தந்த மாவட்டத்தின் கீழ் காணலாம்
மின்னூல்கள் : கழகம் வெளியிட்ட மின்னூல்கள் அனைத்தும் யீனக கோப்பு வடிவத்தில் இந்த தலைப்பின் கீழ் காணலாம். சற்றேறக்குறைய 90 புத்தகங்கள் இலவசமாக தரவிறக்கி படிக்கலாம். குடிஅரசு தொகுப்பு ஆண்டு வாரியாக pdf வடிவிலும் யூனிக்கோடு வடிவிலும் தொகுக்கப்பட்டுள்ளது.
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 2004 ஆண்டு முதல் இந்த வார கடைசி இதழ் வரை மாத வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது. இணையத்திலோ அல்லது அனைத்து நூல்களையும் தரவிறக்கியோ படிக்க ஏற்ற வகையில் பதிவேற்றி உள்ளது.
கருவூலம் : திராவிட இயக்க வரலாறு ஆண்டுரீதியாக தொகுக்கப் பட்டுள்ளது. மேலும் கழகத்தின் காணொளிகள், ஒலிப்பதிவுகள் மற்றும் பாடல்கள் இந்த பகுதியில் உள்ளது. பெரியாரிய கருத்துக்களை அனைவருக்கும் பகிரக் கூடிய வகையில் வேறு தளத்தில் உள்ள முக்கியமான செய்திகளை கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழ் உள்ளது.
மேலும் காணொளிகள் பகுதியில் 400க்கும் அதிகமான காணொளிகள் youtube மூலம் பதிவேற்றி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கழகத்தின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், பயிற்சி பயிலரங்குகள், பெயர் சூட்டுவிழா, வாழ்க்கை இணையேற்பு விழா, பொதுக் கூட்டங்கள், மண்டல மாநாடுகள் அனைத்தும் தனித்தனியாக கோப்புகளாக பதியப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் : முகப்பின் வலது ஓரத்தில் பெரியார் முழக்கம் படத்தினை சுட்டுவதன் மூலம் அந்த வார பெரியார் முழக்கம் pdf கோப்பாக தரவிறக்கி படிக்க முடியும். மேலும் அனைவரும் படிக்கும் வண்ணமும் எளிதாக பகிரக்கூடிய அளவிலும் யூனிக்கோடாக தனியாக ஆண்டுவாரியாக மாதவாரியாக உள்ளது.
தலைமை அறிக்கை : கழகத்தின் தலைமை நிலையத்திலிருந்து வெளிவரும் அறிக்கைகள் வரிசைக்கிரமமாக இந்த பகுதியில் காணலாம். கடைசி 5 அறிக்கைகள் பட்டியலில் உண்டு. மற்ற அறிக்கைகளை படிக்க தொடுப்பை சுட்டி படிக்கமுடியும்
தலையங்கம் : பெரியார் முழக்கத்தின் தலையங்கம் எளிதில் படிக்க இந்த பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது
சிறப்பு கட்டுரை: பெரியார் முழக்கத்திலோ அல்லது வேறு இணைய தளங்களிலோ வரும் பெரியாரிய கருத்துகளை சிறப்பு கட்டுரை பகுதியில் வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது
கருவூலக் கட்டுரை : நடப்பு நிகழ்விற்கேற்ப பெரியாரின் எழுத்துக்களோ கட்டுரைகளோ சொற்பொழிவுகளோ இந்த பகுதியில் படிக்கலாம்
வினா விடை மற்றும் பொன்மொழிகள் : முகப்பு பக்கத்தில் இதற்காக தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது
தேடல் பகுதி : தளத்தின் வலது ஓரத்தில் உள்ள தேடல் பகுதியில் ஏதேனும் சொற்களோ அல்லது தேதியோ குறிப்பிட்டு அது தொடர்பான செய்திகள் கட்டுரைகள் எளிதில் தேட முடியும்
முக்கிய குறிப்பு : இன்றைய இணைய தொழில்நுட்பத்திற்கேற்ப படிக்கும் அனைத்து கட்டுரைகளின் கீழும் முகநூலிலோ துவிட்டரிலோ கூகுள் பிளஸ்ஸிலோ பகிர அதற்குண்டான வழிவகை செய்யப்பட்டுள்ளது
மேலும் dvk12 மற்றும் dvk137 என்ற முகநூல் பக்கங்களிலும் நமது இணைய செய்திகளை படிக்கலாம்
தளத்தின் வலது ஓரத்தில் கழகத்தின் முகநூல் மற்றும் துவிட்டர் கணக்கின் இணைப்பை சொடிக்கி அங்கும் சென்று படிக்கலாம். இணைய தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள் அனைத்தும் தானாகவே இந்த பக்கங்களில் சென்றுவிடும்
கழகத்தின் மாவட்ட செய்திகள் மற்றும் நடைபெற உள்ள நிகழ்வுகளை மற்றவர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த dvkperiyar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் புகைப்படங்களில் ஏதேனும் ஒன்று Landscape இருப்பது சிறப்பு. மேலும் காணொளிகள் ஏதேனும் இருந்தால் youtube ஏற்றி உரலி (link) அனுப்பவும். எந்த மாவட்டத்தின் கீழ் செய்தி வரவேண்டும் என்பதையும் தெரியப்படுத்தினால் உள்ளீடு செய்ய உதவியாக இருக்கும்.
இணையதளம் செய்திகளுக்கு ஏற்ப தினந்தோறும் புதுப்பிக்கப்படுவதால் புதிய செய்திகளுக்கு கழகத்தின் இணைய தளத்தை படிக்கவும்
காணொளிகள் அனைத்தும் dvkperiyar என்ற பெயரில் youtube இல் தேடிப் பார்க்கலாம்.

பெரியார் முழக்கம் 10122015 இதழ்

You may also like...