அவமதிக்கிறது, உச்சநீதிமன்றம்
மீண்டும் உச்சநீதிமன்றம் தனது கொடுவாளை வீசி விட்டது. உரிமை கோரும் பிற்படுத்தப்பட்டோரை அவமதித்துவிட்டது. உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோ ருக்கு மாணவர் சேர்க்கை நிகழ இருக்கும் நேரத்தில் உச்சநீதி மன்றம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி இடைக்கால தடை விதித்து விட்டது. அஜீத் பசாயத், லோகீஸ்வர்சிங்பட்னா ஆகிய இரு நீதிபதிகள், இந்தத் தடையை விதித்துள்ளனர். நீதி மன்றம் தடைக்கு தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்கவியலாதவை! 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரியாக நடத்தப் பட்டது. அதற்குப் பிறகு சாதிவாரியாக கணக்கெடுப்பு நடக்கவில்லை. எனவே பிற்படுத்தப்பட்டோரை – 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்து தீர்மானிப்பதை ஏற்க முடியாது என்று கூறுகிறது, உச்சநீதிமன்றம். இந்தியாவில் வாழும் மக்களில் பிற்படுத்தப்பட்டோர் 52 சதவீதம் பேர் என்று மண்டல் குழு பரிந் துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி யான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மண்டல் குழு...