Tagged: RSS

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், வினியோகிக்கப் பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. உடனே அய்.டி.ஆர்.எப்., இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது. தங்களுக்கும் எந்த ‘இசத்துக்கும்’, தத்துவத்துக்கும், கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அந்த மறுப்பு அறிக்கை கூறியது. ஆனால், ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலித்துப் பார்க்கும்போது, அய்.டி.டி.ஆர்.எப்.க்கும், சங்பரிவார்களுக்கும்...

அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுறுவியது   மோடியின் 2 ஆண்டு ஆட்சி

அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுறுவியது மோடியின் 2 ஆண்டு ஆட்சி

  மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் மோடி ஆட்சியின்  “சாதனைகள்” தான் என்ன? இரண்டாம் ஆண்டு வெற்றி விழாவை மே 28 மாலை புதுடில்லியில் ‘இந்தியா கேட்’ மைதானத்தில் திரையுலக நட்சத்திரங்களை  அழைத்து ஆடம்பரமாக கொண்டாடினார்கள். நட்சத்திரங்களைப் பார்க்க கூட்டம் கூடியது. இதே போன்ற வெற்றி விழா உ.பி. தேர்தலை கவனத்தில் கொண்டு அலகாபாத்தில் ‘சர்தார் பட்டேல் கிசான் மகா சம்மேளனம்’ என்று விவசாயிகள் விழாவாக கொண்டாடினார்கள். அமித்ஷா சிறப்பு விருந்தினர். குறைந்த எண்ணிக்கையில் தான் கூட்டம் சேர்ந்தது. அமீத்ஷா விரக்தியானார். ஊடகங்களும் பெரிதாக செய்தி போடவில்லை. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் 20 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் 80 சதவீதம் ‘வாய் வீச்சு’களாகவே இருக்கிறது என்றும் ஆட்சியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாக ‘பிரண்ட் லைன்’ ஏடு எழுதியிருக்கிறது. ‘தாராளமயம்’ என்ற கொள்கையில் காங்கிரஸ்...

அரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது!

அரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது!

ஆர்.எஸ்.எஸ். சீருடையை மாற்றிக் கொண்டு விட்டதாம். அரைக்கால் காக்கி சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை (பேண்ட்) போட ஆரம்பித்து விட்டார்கள். 90 ஆண்டுகால பாரம்பர்யத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்கள். ‘காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்கிறார்’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத். சரிதான்; 90 ஆண்டுகாலமாக பெண்களை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக்க முடியாது என்று தடை போட்டு வைத்திருக்கிறீர்களே, அதையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே! அரைக்கால் சட்டை போடுவதற்குத்தான் பெண்களுக்கு சங்கடம்; இப்போதுதான் முழுக்கால் ‘பேண்ட்’ வந்துவிட்டதே! இனிமேலாவது பெண்களை சேர்க்கலாமே! ‘நாம் எப்போதும் இந்துக்கள்; இந்துக்களுக்குள் பேதம் கூடாது’ என்கிறார் பகவத். நல்லது; இதற்குப் பிறகாவது, “நான் பிராமணன்; உயர்குலத்தவன்; ஏனைய இந்துக்கள் ‘சூத்திரர்கள்’; என்னுடைய ‘பிராமண’ அடையாளத்துக்காகவே பூணூல் போடுகிறேன்” என்று பார்ப்பனர்கள் பூணூல் போட்டு திரிகிறார்களே! ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகிவிட்டால் எந்த ‘இந்து’வும் பூணூல் போடக் கூடாது என்று உடம்புக்கும் ஒரு பொதுவான அடையாளத்தைக் கொண்டு வரலாமே! ‘இந்து’ என்றால் ஒருவர் விபூதியும், ஒருவர் நாமமும்,...

தமிழின எதிரி R.S.S. அலுவலகம் முற்றுகை சென்னை 20092016

கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய தமிழின எதிரி “ஆர்.எஸ்.எஸ்”சை கண்டித்து கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாள்கள், தோழர்கள் 500 பேர் கைது! இன்று 20.09.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் ன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தலைமை அலுவலகம் முற்றுகை. கைது செய்யப்பட்ட அரங்கில் காஞ்சி மக்கள் மன்ற தோழர்களின் எழுச்சியான புரட்சிகர கலை பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன    

திராவிடர் விடுதலைக் கழகம் எரித்த மனுஸ்மிருதி “ஜெ.என்.யூ.”விலும் எரிகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் எரித்த மனுஸ்மிருதி “ஜெ.என்.யூ.”விலும் எரிகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் 2013, ஏப்ரல் 14 அன்று தமிழ்நாடு முழுதும் பொதுவிடங்களில் மனுசாஸ்திரத்தை தீயிட்டுக் கொளுத்தியது. அன்று கழகத் தோழர்கள் நடத்திய மனுசாஸ்திர எதிர்ப்பை தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. அதே மனுசாஸ்திர எரிப்பு இப்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் நடந்திருக்கிறது. மார்ச் 8 – சர்வதேச மகளிர் நாளில் மனுசாஸ்திரத்தை தீயிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் என்பதுதான், குறிப்பிடப்பட வேண்டியதாகும். ‘ஜெ.என்.யூ.’ பல்கலைக்கழகத்தின் அகில் பாரத் வித்யத்தி பரிஷத் துணைத் தலைவர் ஜட்டின் கோரயா, அதே அமைப்பின் பிரதீப் நர்சஸ் உள்ளிட்ட மாணவர்கள் கன்யாகுமார் மீது தேசத் துரோக சட்டத்தை பா.ஜ.க. அரசு ஏவியதற்குப் பிறகு, பரிஷத்திலிருந்து விலகி விட்டார்கள். அரியானாவிலிருந்து ‘ஜெ.என்.யூ.’வுக்கு படிக்க வந்த இந்த ‘தலித்’ மாணவர்களை கன்யாகுமார் கைதும், அய்தராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா மரணமும் மிகவும் பாதித்துவிட்டன. பரிஷத்தின் ‘இந்துத்துவா’ கொள்கை, ‘தலித்’ விரோதமானது என்ற முடிவுக்கு வந்தவர்கள், அதிலிருந்து...

‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’ – கன்யா குமார்

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கன்யா குமார் மாணவர்களிடையே ஆற்றிய உரையின் தமிழாக்கம்: எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸ். ஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களின் தேசபக்தியாகும். எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள் ளோம். இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங்பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ. அந்த விரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப் படும் சாசனத்தின் மீது எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை யில்லை. எங்களுக்கு மனுஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையுமில்லை. இந்த நாட்டிலுள்ள சாதியவாதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்...

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான நாக்பூரில், இந்திய வரைபடம் மாட்டப்பட வில்லை. அங்கே மாட்டப்பட்டிருப்பது, ‘அகண்ட பாரதத்தின்’ வரைபடம். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளை ஒரே தேசமாக சித்தரிக்கிறது, அந்த வரைபடம். இந்தியாவின் பிரதமர் மோடி மேற்கொண்ட திடீர் பாகிஸ்தான் பயணத்தின்போது உலகப் புகழ் பெற்ற அல் அஜிரா தொலைக்காட்சி, பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவரான இராம் மாதவ் என்ற பார்ப்பனரின் பேட்டியை ஒளி பரப்பியது. ‘பாகிஸ்தான் நாட்டுக்கு இறையாண்மை கிடையாது. அது இந்தியாவின் பகுதி’ என்று கூறி, அகண்ட பாரதத்தை நியாயப் படுத்தினார் இராம் மாதவ். ‘அகண்ட பாரத்’ என்ற ‘பாரத் வர்ஷா’ – கற்பனை உணர்வு அல்ல. இந்தியாவின் எல்லைகள் ‘பாரத் வர்ஷாவாக’ விரிவடைய வேண்டும் என்பதே தங்களின் இலட்சியம் என்று அந்த பேட்டியில் அவர் கூறினார். (இந்தியாவில் ‘தேசிய’ ஏடுகள் எதுவும் இந்த  பேட்டிச் செய்தியை வெளியிடவில்லை) இந்து ‘பாரத் வர்ஷா’ கொள்கையை 1934இல்...

உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன-பனியாக்கள்

உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன-பனியாக்கள்

வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் மோடி. அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து போகிறார். மோடி பறக்கும் நாடுகளில் எல்லாம் அங்கே வாழும் ‘இந்தியர்’கள் நடத்தும் விழாக்கள் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மெய்டன் மைதான சதுக்கம், இலண்டன் வெம்பில்டன் அரங்கம் என்று நடக்கும் இந்த மாபெரும் வரவேற்பு விழாக்கள் திட்டமிடப் பட்டு நடத்தப்படுகின்றன. பெருமளவில் கூட்டம் திரட்டப்படுகிறது. இந்த வேலைகளை செய்வது எல்லாம் அந்நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவ’ பார்ப்பன சக்திகள்தான். இலண்டனில் வெம்பில்டன் மைதானத்தில் 60,000 பேர் திரண்டதாக செய்திகள கூறுகின்றன. இதை முன்னின்று நடத்தியது ‘தேசிய இந்து மாணவர் கழகம்’ என்ற அமைப்பு. 29 வயதுடைய மயூரி பார்மர் என்ற செல்வாக்கு மிக்க பார்ப்பன குடும்பத்தின் இளைஞர், இதற்கான பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த ஏற்பாடுகள் எல்லாம் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக உள்ள ராம் மாதவ் என்பவரால் திட்டமிடப்படுகின்றன. உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் பார்ப்பன-பனியா தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு ஆதரவாக...

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மதவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை 28112014 விடுதலை இராசேந்திரன் உரை

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மதவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை 28112014 விடுதலை இராசேந்திரன் உரை