Tagged: விநாயகர் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி – கழகத் தோழர்களின் கவனத்திற்கு – தலைமை அறிக்கை

விநாயகர் சதுர்த்தி – கழகத் தோழர்களின் கவனத்திற்கு – தலைமை அறிக்கை

கழகத் தோழர்களின் கவனத்திற்கு, (விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை ஒட்டி கழகத் தோழர்கள் அரசு துறைகளுக்கு வழங்க வேண்டிய விண்ணப்ப படிவ மாதிரிகள், நீதிமன்ற ஆணை ஆகியவை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.) விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு (25082017 வெள்ளி) இந்துத்துவ அமைப்புகள் நீதி மன்ற ஆணைகளை கொஞ்சமும் மதிக்காமல், தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளையும் காலில் போட்டு மிதித்தும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை விளைவித்தும், சிறு வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்வதும் என தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள்,தமிழக அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்யத் தவறுவது நீதி மன்ற அவமதிப்பாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே,...

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலத்தை, குறித்த நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்பட காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்; இரசாயனம் பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்தின்போது மின் கம்பம் மற்றும் பாலத்தின்மீது மோதி சிலைகளை பாதிப்பு ஏற்படும் என்பதால், உயரமான சிலைகள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் திடீர் கோவில்கள் அமைத்தல் கூடாது. சிலை அமைப்பாளர்களின் பெயர், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்களை காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். அலைபேசியை அணைத்து வைக்காமல் இருக்க வேண்டும். காவல் துறை அனுமதித்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். சிலை வைக்க, கீற்று அல்லது துணியால் வேயப்பட்ட கொட்டகையாக இருக்கக் கூடாது. கல்நார் அல்லது இரும்பு தகடு பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கடலில் கரைக்க வேண்டும். ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும்....

திருப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அரசு துறைகளுக்கு மனு !

வருகிற விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட ரசாயண பூச்சு பூசப்பட்ட,பிளாஸ்ட் ஆப் பாரிசால் செய்யப்பட்ட ,சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறித்து பறிமுதல் செய்யவேண்டும்,சட்டவிரோதமாக ஒலிபெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,இந்து அறநிலையத்துறை ஆனையர்,மாநகராட்சி ஆனையர் ஆகியோரிடம் கழக பொருளாளர் துரைசாமி அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

விநாயகர் சிலை கரைப்பின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் – உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல் ! விநாயகர் சிலை கரைப்பின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து 2004 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல். கழக தோழர்கள்,விநாயகர் சதுர்த்தி நிகழ்சியில் சிலைகளை கரைப்பது குறித்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்ட காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு அளிக்கப்பட உள்ள கடிதங்களுடன் இத்தீர்ப்பின் நகலையும் இணைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கோரிக்கை மனு மாதிரிகள்

சென்னை மாநகர காவல்துறை ஆளுனரிடம் மனு

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பிளாஸ்டோ ஆப் பாரிஸ் வேதி பொருளில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை தடை செய்ய வேண்டும் என்றும் சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றிக்கொண்டு போக்குவரத்து விதிக்கு எதிராகவும் இடைஞ்சலாகவும் ஊர்வலம் வருவதை தடைசெய்யவும், ஒலிபெருக்கி விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற கோரியும் மனுவாக சென்னை மாநகர காவல்துறை ஆளுனரிடம் தரப்பட்டது. தோழர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்