திருப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அரசு துறைகளுக்கு மனு !
வருகிற விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட ரசாயண பூச்சு பூசப்பட்ட,பிளாஸ்ட் ஆப் பாரிசால் செய்யப்பட்ட ,சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறித்து பறிமுதல் செய்யவேண்டும்,சட்டவிரோதமாக ஒலிபெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,இந்து அறநிலையத்துறை ஆனையர்,மாநகராட்சி ஆனையர் ஆகியோரிடம் கழக பொருளாளர் துரைசாமி அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.