Tagged: வாட்ஸ்அப்

கழகப் புகார் எதிரொலி: ஜாதிவெறி ஆசாமி கைது

கழகப் புகார் எதிரொலி: ஜாதிவெறி ஆசாமி கைது

4.1.2017 அன்று மாலை 3 மணிக்கு ஜாதி கலவரங்களை தூண்டும் விதமாகவும், கொலையை ஆதரித்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் உடைமைகளை கொளுத்த வேண்டும் என்று பேசியதோடு, தேவர் சமூக இளைஞர்களை மூளை சலவை செய்து  வன்முறையாளர்களாக மாற்ற முயற்சித்த தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையா என்பவரை கைது செய்யகோரியும், இது போன்ற ஜாதி சங்கங்களை தடை செய்யக் கோரியும், மதுரை  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்.மா.பா. மணிகண்டன் தலைமையில்,  மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடன்  புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் கணேஷ் குமார்  புரட்சிப் புலிகள் அமைப்பு தோழர்கள் பீமாராவ், பகலவன், ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர் காமாட்சி பாண்டி உள்ளிட்டோர் சென்றனர். இதைத் தொடர்ந்து தலித் மக்கள் உடைமைகளை அழிக்க வேண்டும்; கொலை செய்ய வேண்டும் என்று வெறியூட்டும் பேச்சுகளை பேசிய முத்தையா...

ஜாதிவெறியர்களை கைதுசெய் – நாமக்கல் மாவட்டத்தில் கழகம் புகார் மனு

அருந்ததிய இளைஞரை காதலித்தால் கௌரவ (ஆணவ)கொலை செய்வோம் என்றும், அந்த இளைஞரையும் கொலைசெய்வோம் என்றும் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரி மாணவியை “அலைபேசி”யில்(யுவராஜ் பாணியில்)மிரட்டிய கவுண்டர் ஜாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கைதுசெய்…! மாணவிக்கு தகுந்த உயிர்பாதுகாப்பு வழங்கு…! என்று நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையில் இன்று புகார் அளித்துவிட்டு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்து செய்திகளை பதிவு செய்தோம்… உடன் மாவட்ட கழகசெயலாளர் சரவணன், பள்ளிபாளையம் நகரகழக செயலாளர் பிரகாசு, திருச்செங்கோடு நகரகழக செயலாளர் நித்தியானந்தம், நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு, ஒன்றிய அமைப்பாளர் சதீசு,கார்த்தி உள்ளிட்ட கழகத்தோழர்கள் வந்திருந்தனர் செய்தி வைரவேல், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்