சென்னையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் நீட்டுக்கு எதிராக சமூக நீதி கோரி வழக்கு தொடுத்தவரும் மத்திய காவி பா.ஜ.க. மோடி அரசால் மருத்துவ படிப்பு கனவு சிதைக்கப்பட்டு தோழர் அனிதாவின் . படுகொலைக்கு காரணமான மோடி அரசை கண்டித்தும்,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் 02.09.2017 அன்று மாலை 3 மணியளவில் பா.ஜ.க தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராகவும், தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக செயலை கண்டித்து போர் முழக்கமிட்டனர்… தமிழக கல்வி உரிமைகளை மாநில பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்பட்டியலுக்கு...
மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் செயின்ட் மேரீஸ் பாலத்திலுள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அந்த பகுதி பொது மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தியது. தோழர்களுடன் பொது மக்களையும் காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. தொடர்ந்து ஐந்தாண்டுகளில் நான்காவது முறையாக பெரும் முற்றுகை போராட்டத்தை மயிலை பகுதி தோழர்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியுள்ளது. அரசு செவிசாய்த்து கடையை நீக்கும் வரை போராட்டங்கள் ஓயாது. மாவட்ட செயலாளர் தோழர் இரா.உமாபதி பத்திரிகையாளர்களை சந்தித்து கோரிக்கையை செய்தியாக வைத்தார். பகுதி பொதுமக்களும் தன் மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களிடம் கொட்டித் தீர்த்தனர். பெண்களும் கைதாகியது தோழர்க ளை மேலும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வழிசெய்தது… தற்போது கைதாகி மண்டபத்தில் … திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்
இன்று (26.04.2016) முற்றுகைப்போராட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழக அரசே ! உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை அகற்று எனும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் ! நாள் : 26.04.2016 செவ்வாய்க்கிழமை,மாலை 4 மணி. இடம் : சென்னை மாநகராட்சி அலுவலகம்.ரிப்பன் மாளிகை. தலைமை : தோழர் விடுதலை ராஜேந்திரன்,பொதுச்செயலாளர் ,திராவிடர் விடுதலைக் கழகம். தொடர்புக்கு : 7299230363 சட்ட விரோதமான உள்ள நடைபாதைக் கோயில்களை அகற்று ! உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் காலதாமதப்படுத்தாதே !