Tagged: மாஸ்கோ

கொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் 17.09.2015 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தை சார்ந்த தோழர் பாலமுருகன் -உமா இணையரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட கழகத் தலைவர் கொளத்தூர்மணியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ‘திப்பு சுல்தான்’ என்று பெயர் சூட்டினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “மனு சாஸ்திரம் சொல்லுகிறது பார்ப் பனர்களுக்கு மங்கலமான பெயர்களை யும், சத்ரியர்களுக்கு வீரமான பெயர் களையும், வைசியர்களுக்கு பணத்தை, தனத்தை குறிக்கிற பெயர்களையும் சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களை யும் வைக்கச் சொல்லி சொல்லுகிறது. காலம் காலமாக குப்பனாய், பிச்சை யாய், மண்ணாங்கட்டியாய் வாழ்ந்த வருக்கு மனுசாஸ்திரம் தடைகளுக்கு மாறாக பின்னாளில் பெரியார் புரட்சிகரப் பெயர்களை வைத்தார். புராணத்தின் பெயரால் ராமனை தூக்கி பிடிக்கிற இந்த சமுதாயத்தில் இயக்க தோழர்களுக்கு இராவணன் என்று பெயர் வைத்தார். பார்ப்பனியத் திற்கு எதிராக நின்ற புத்தரின் பெயரை சித்தார்த்தன் என்று பெயர்...