கோபியில் காவல்துறை தடைகளைத் தகர்த்து, பார்ப்பன மத சூழ்ச்சிகளை தோலுரித்த கழக மாநாடு
பார்ப்பன கும்பல் தங்களது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள கல்வியை காவி மயமாக்கி சமஸ்கிருதத்தைத் திணித்து,இந்துத்துவ போர்வையில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குஎதிராக சதிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஜாதி அமைப்பே இந்துமதத்தின் அடிப்படை தத்துவமாகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்துக்கள் தான் என கூறும் பார்ப்பனர்கள் அவர்களை பல்வேறு ஜாதிகளாக கூறுபோட்டு அவர்களின் உரிமைகளை பறிக்கின்றனர். இந்த நாட்டில் ஜாதியம் தான் பார்ப்பனியம் என சரியாக பிளந்து காட்டியவர் பெரியார். இந்த சமூகத்தில் ஜாதியமைப்பை நியாயப்படுத்தும் பாசிச தத்துவமான பார்ப்பனியத்தின் கோரமுகத்தை வெகு மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் ஈரோடு,சேலம், சென்னை, சங்கராபுரம், மதுரை, கோபி செட்டிபாளையம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன. ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில், ‘மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு’ பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோபி...