Tagged: பொங்கல் விழா 2017

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி கொளப்பலூர் கிளை கழகத்தின் சார்பாக கடந்த 30.01.2017 அன்று தமிழர் திருவிழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு கொளப்பலூர் கிளை கழக தலைவர் தோழர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் அவரின் தலைமை உரையின் போது சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதனை உடைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார் தொடர்ந்து திருச்சி விரட்டு கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைக்கழு சார்பாக மயிலாட்டம்,ஒயிலாட்டம்,பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்னுமில்லை எனும் பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. மக்கள் இன்றைய காலகட்டத்தில் ஒன்னுமில்லா விசயங்களுக்காக எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாடகத்தின் மூலம் விளக்கினார்கள் கலை நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவர் உரையாற்றும் போது உயிரின தோற்றம் குறித்தும் அறிவியல் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக உரையாற்றினார் தொடர்ந்து இரவு 10.30 மணி வரை...

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாக்கள் கலை விழாவாக நடத்தப்பட்டன. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் அனைத்துக் கட்சியினரையும் இணைத்து தமிழர் திருநாள் விழாவை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 17ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் கலை விழா இசை நிகழ்ச்சிகளோடு நடை பெற்றது. புதுச்சேரி ‘அதிர்வு’ கலைக் குழுவினரின் பறை, கிராமிய நடனம், பாடல் நிகழ்ச்சிகள், பகுதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தொடர்ந்து ‘அருண் ரிதம்ஸ்’ குழுவினரின் கானா, நாட்டுப்புற, வெள்ளித் திரைப்பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாழ மிக்க பழைய திரைப்படப் பாடல்களையும் கானா பாடல்களையும்...