Tagged: பெரியார் முழக்கம் 27022014 இதழ்
ராஜிவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை உச்சநீதி மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்தது. காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா என்று போராட்டம் நடத்துகிறார்கள். நாட்டின் பிரதமரைக் கொன்றவர்களையே விடுதலை செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்புக் கிடைக்கும் என்கிறார், ராகுல் காந்தி. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் சுப்ரமணியசாமி. மக்களின் சிந்தனைக்கு நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்: ராஜிவ் காந்தி கொலையில் சி.பி.அய். 41 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்டது. இதில் நேரடி தொடர்புடையவர்களான தாணு, சிவராசன், சுபா உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே தேடுதல் வேட்டையில் இறந்து விட்டார்கள். 26 பேர் குற்றம்சாட்டப்பட்டு, ‘தடா’ நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர். பூந்தமல்லி ‘தடா’ நீதிமன்றம் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை அறிவித்தது. இந்த...
மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 29.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) “ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?” “முப்பத்தேழுலே நடந்த எலக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி, பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப் போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி, மந்தரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தாங்க. நான் எதிர்த்தேன். புரோகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரிபோட்டாங்க. என்னை ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க. நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து, என்னை ஐஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.” “அப்புறம் எப்ப...
ஏழுமலையானுக்கு பக்தர்கள் ‘பட்டு வஸ்திர’ காணிக்கையை இடைத்தரகர் மூலம் வழங்க வேண்டாம். தரமில்லாத பட்டாக இருக்கிறது. இனி பக்தர்கள் பகவானுக்கு நேரடியாகவே வழங்க லாம். – தேவஸ்தானம் அறிவிப்பு அதேபோல் மூலஸ்தானத்திலும் இடைத்தரகர்களை ஒழித்து, பக்தர்களுக்கு பகவானிட மிருந்து நேரடியான – தரமான ‘தரிசனம்’ கிடைக்க ஏற்பாடு செஞ்சிடுங்க! காஞ்சி ‘வரதராஜப் பெருமாளுக்கு’ பெங்களூரைச் சேர்ந்த ஒரு ‘அய்யங்கார்’ பக்தர், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைரக் கிரீடம் காணிக்கை. – செய்தி இது வெறும் காணிக்கை இல்லைங்கோ; நன்றிக் காணிக்கை! ‘பெருமாள்’ கண் முன்னே சங்கர்ராமன் வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகளை மவுன சாட்சியாக நின்று காப்பாற்றியதற்கு நன்றி காணிக்கை! விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்புகளில் இருக்கக் கூடாது. – ராகுல் காந்தி அரசியல் விளையாட்டில் நல்ல அனுபவமுள்ளவர்களை இப்படி, ஓரங்கட்டக் கூடாது, ராகுல்ஜி! நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும். – தேர்தல்...
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களைக் கைது செய்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அடக்கு முறையை எதிர்கொண்டு வரும் திராவிடர் விடுதலைக் கழகம் – அந்த வலியையும் ஏற்றுக் கொண்டு – தமிழக முதல்வரின் 7 தமிழர் விடுதலையை ஆதரிக்கிறது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு; துணிவான அறிவிப்பு என்று உளம் திறந்து பாராட்டி வரவேற்கிறது. பெரியார் முழக்கம் 27022014 இதழ்
ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் – உடல்நலம், மனநலம் பாதிக்கப்படுவதை அறிவியலோடு விளக்கி, கழகத்தின் பரப்புரைப் பயணம் வெற்றி நடை போடுகிறது. சங்க இலக்கியக் காலம் தொடங்கி இன்று வரை ஒரே ஜாதிக்குள் தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக நாம் செய்து வரும் திருமணங்களால், நமது எதிர்காலத் தலைமுறையின் மனநலமும், உடல் நலமும் மிகவும் கேடான நிலைக்குப் போய்விட்டது. அறிவியலுக்கும், பரிணாம வளர்ச்சிக்கும், உயிரியல் இயற்கைக்கும் எதிரான அகமண முறை என்னும் ஒரே ஜாதிக்குள் நடைபெறும் திருமணங்களைப்பற்றிய அதிர்ச்சியான அறிவியல் உண்மைகளை விளக்கும் நோக்கிலும் – மருத்துவ உலகமும், ஆராய்ச்சியாளர் களும் தமக்குள் மட்டுமே அறிந்து வைத்திருந்த இந்தக் கருத்துக்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று ஒரே ஜாதிக்குள் செய்து வரும் திருமணங்களால் விளைந்துள்ள மருத்துவ பாதிப்புகள் பற்றி விளக்கும் நோக்கிலும் – ஜாதி, மத, தேசிய இன, நாட்டு மறுப்புத்திருமணங்களால் விளையும் நன்மைகளைப் பற்றி விளக்கும் நோக்கிலும் –...
ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வெளியிட்ட கருத்து: “இந்த விவகாரத்தில் மீண்டும் யார் வழக்குத் தொடர்ந்தாலும் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்சுக்குத்தான் வழக்கு விசாரணைக்குச் செல்லும். அவர்கள் அளித்த தீர்ப்பை அவர்களே எப்படி தவறு என்று சொல்ல முடியும்? தடை வழங்க முடியும்? எனவே அதற்கான சாத்தியம் இல்லை. குற்ற விசாரணை முறைச் சட்டம் 435இன்படி, தமிழக அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்கலாம் என்றுதான் கூறப்பட் டுள்ளது. அதற்காக, மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று இல்லை. ஒருவேளை மத்திய அரசு தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக கருத்துக் கூறினாலும் அதனை நிராகரிக்க மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆயுள் தண்டனை என்பது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவர்கள் அந்த குறைந்தபட்ச தண்டனையைவிட...