Tagged: பெரியார் முழக்கம் 24042014 இதழ்
“நாடு நமக்கென்று வாங்குவீர்!” மத – ஓடத்திலேறிய மாந்தரே – பலி பீடத்திலே சாய்ந்தீரே! பாடு பட்டீர்கள் பருக்கையில்லா தொரு பட்டியில் மாடென வாழ்கின்றீர் – மதக் கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் – ஒண்ட வீடு மில்லாமலே தாழ்கின்றீர்! (மத) பாதிக்குதே பசி என்றுரைத்தால், செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார் – மத வாதத்தை உம்மிடம் நீட்டுவார் – பதில் ஓதி நின்றால் படை கூட்டுவார். (மத) வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ சோதனை என்றவர் சொல்லுவார் – பணச் சாதனையால் உம்மை வெல்லுவார் – கெட்ட போதனையால் தினம் கொல்லுவார். (மத) பேதிக்கும் நோய்க்கும் பெரும் பசிக்கும் பல பீதிக்கும் வாய் திறப்பீர்களோ! – இழி சாதியென்றால் எதிர்ப்பீர்களோ? – செல்வர் வீதியைத் தான் மதிப்பீர்களோ? (மத) கூடித் தவிர்க்கும் குழந்தை மனைவியர் கூழை நினைத்திடும் போதிலே – கோயில் வேடிக்கை யாம் தெரு மீதிலே – செல்வர்...
மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர், தான் போட்டியிடும் கர்நாடக-கோலார் தொகுதியில் வாக்குப் பதிவு எந்திரத்தை வாஸ்து சாஸ்திரப்படி திருப்பி வைத்து வாக்களித்தார். – செய்தி தண்டவாளத்தில் ஓடும் ரயில் என்ஜினையும் வாஸ்துப்படி திருப்பி விடாதீங்கய்யா…. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அமைச்சரவையில் தி.மு.க.வை சேர்க்க மாட்டோம். – ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் தேர்தலை சந்திக்காமலேயே அமைச்சரவை அமைக்க புதுசா ஏதோ வழி கண்டுபிடிச்சிருக்கார் போலிருக்கு. சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்களியுங்கள். – ப. சிதம்பரம் ‘கார்ப்பரேட்’ கம்பெனி தேவைகளை நான் பூர்த்தி செய்துவிட்டேன்; இனி எனது மகன், சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வந்திருக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை திருடிவிட்டது பா.ஜ.க. – மத்திய அமைச்சர் ஆனந்த் வர்மா புரியுது; எங்களுக்கு ஒரே கொள்கைதான்னு சொல்ல வர்றீங்க. அதை ஏன் இவ்வளவு ஆத்திரத்தோடு சொல்றீங்க? இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்களை அடுத்த தேர்தலில்...
16-04-2014 புதன்கிழமை அன்று மாலை 6-30 மணியளவில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில், “மதவாத பா.ஜ.க” விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காளிதாசு தலைமை தாங் கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, முனைவர் ஜீவானந்தம், தோழர் ஜேம்ஸ், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பாரி, முதலானோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளத்தூர் நாவலரசன் கலைக்குழு வினரின் மதவாதத்திற்கு எதிரான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 17-04-2014 வியாழக்கிழமை அன்று மாலை 6-00 மணியளவில், கோவை ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, “மதவாத பா.ஜ.க” விளக்கப் பொதுக் கூட்டம், கோவை நாடாளுமன்ற தொகுதியில் சி.பி.ஐ(எம்) கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் அவர்களை ஆதரித்து நடைபெற்றது. தோழர் பத்மநாபன் வரவேற்புரை ஆற்றினார். வழக்குரைஞர் ந.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கழகத் தலைவர்...
உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக) வழங்கப்படும், அதுவரைப் பொறுத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். அவரது பதவிக்காலம், அவரது பிறந்த நாள் அடிப்படையில் 26-04-2014 – உடன் நிறைவடைகிறது. அந்த அடிப்படையில் 25-04-2014க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியிருக்காவிட்டாலும், எந்த ஒரு நீதிபதியும் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பை, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வழங்குவது என்பது மரபான ஒன்றுதான். ஆனால் ஏதோ 24-04-2014 அன்று தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கணக்கில் கொண்டே, பேட்டி கொடுக்கப்பட்டதைப் போல, தலைமை நீதிபதியின் இயல்பான பேட்டியை விமரிசனம் செய்து தி.மு.க. தலைவர் கலைஞர்...
ரஜினிகாந்தின் அருணாச்சலம் படத்தில் ஒரு காட்சியில் நடித்த குரங்கு மரணம். ரஜினி ரசிகர்கள் இறுதி மரியாதை. – செய்தி அச்சச்சோ… முக்கிய சாவு ஆச்சே; மோடிக்கு சேதி சொல்லியாச்சா? அரசியல் நோக்கத்தோடு மோடியை நான் சந்திக்கவில்லை. – நடிகர் விஜய் அது எங்களுக்கும் தெரியுமுங்க… ரசிகர் மன்றத்தை இவ்வளவு பலமா, எப்படி உருவாக்கினீங்கன்னு மோடி கிட்ட ஆலோசனை கேட்கத்தான், போயிருப்பீங்க… அப்படித்தானே? தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண்தான் தமிழ்நாட் டுக்கும், நாடு முழுமைக்கும் வரவேண்டிய திட்டங் களை முடக்கினார். – ஈரோட்டில் மோடி யாருங்க, அந்தப் பெண்? பெண்கள் பிரச்சினை என்றாலே, மோடி எப்போதும் புதிர் போடுவதே வழக்கமாயிடுச்சு! மோடியை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும். – பீகார் பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் மோடிக்குத்தான் ‘விசா’ கிடைக்காது; மக்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. சோனியாவும் ராகுலும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் நாட்டை ஆள்கிறார்கள். – மோடி குற்றச்சாட்டு...