மோடி: சிறப்பு வினா-விடை
ரஜினிகாந்தின் அருணாச்சலம் படத்தில் ஒரு காட்சியில் நடித்த குரங்கு மரணம். ரஜினி ரசிகர்கள் இறுதி மரியாதை. – செய்தி
அச்சச்சோ… முக்கிய சாவு ஆச்சே; மோடிக்கு சேதி சொல்லியாச்சா?
அரசியல் நோக்கத்தோடு மோடியை நான் சந்திக்கவில்லை. – நடிகர் விஜய்
அது எங்களுக்கும் தெரியுமுங்க… ரசிகர் மன்றத்தை இவ்வளவு பலமா, எப்படி உருவாக்கினீங்கன்னு மோடி கிட்ட ஆலோசனை கேட்கத்தான், போயிருப்பீங்க… அப்படித்தானே?
தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண்தான் தமிழ்நாட் டுக்கும், நாடு முழுமைக்கும் வரவேண்டிய திட்டங் களை முடக்கினார். – ஈரோட்டில் மோடி
யாருங்க, அந்தப் பெண்? பெண்கள் பிரச்சினை என்றாலே, மோடி எப்போதும் புதிர் போடுவதே வழக்கமாயிடுச்சு!
மோடியை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும். – பீகார் பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங்
மோடிக்குத்தான் ‘விசா’ கிடைக்காது; மக்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.
சோனியாவும் ராகுலும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் நாட்டை ஆள்கிறார்கள். – மோடி குற்றச்சாட்டு
சோனியாவுக்கு ‘ரிமோட் கன்ட்ரோல்’, மோடிக்கு ‘ரிலிஜியஸ் கன்ட்ரோல்’ அவ்வளவுதான் வித்தியாசம்.
மோடியின் ‘டீக்கடை’ பிரச்சாரத் திட்டத்துக்கு ஆதரவில்லை. – ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி
‘கசாப்புக் கடை’ பிரச்சாரத்தைத் தொடங்கினால் நல்ல ஆதரவு கிடைக்கும்; யோசிங்க!
குஜராத்தில் சட்டமன்றத்தை ஆண்டுக்கு 23 நாட்களுக்கு மேல் மோடி கூட்டியதே இல்லை. 2 நாட்களிலேயே எதிர்க்கட்சிகள் ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டுவிடுவார்கள். – மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா
சட்டசபைக்கு எதுக்கு வீண் செலவு? இதுதான் மோடியின் நிர்வாகத் திறமை, புரிஞ்சுக்குங்க!
பெரியார் முழக்கம் 24042014 இதழ்