Tagged: பெரியார் முழக்கம் 18022016 இதழ்

கொலை மிரட்டல்: பா.ஜ.க. கல்யாணராமன் மீது கழகம் காவல்துறையில் புகார்

கொலை மிரட்டல்: பா.ஜ.க. கல்யாணராமன் மீது கழகம் காவல்துறையில் புகார்

பா.ஜ.க.வில் பொறுப்பாளராக இருக்கும் கல்யாணராமன் என்பவர் தனது முகநூலில் தொடர்ந்து வன்முறையை தூண்டி விட்டும், கொலை மிரட்டல் விடுத்தும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் மற்றும் கழகத்தினர், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த 10.2.2016 பகல் 11 மணியளவில் எழுத்துபூர்வ புகார் ஒன்றை அளித்தனர். தேசியக் கொடியை எரித்து முகநூலில் படம் வெளி யிட்டதாகக் கூறி மகேந்திரன் திலீபன் என்ற இளைஞரின் கையை காவல்துறை உடைத்தது போல், கொளத்தூர் மணி கும்பலுக்கும் சீமானுக்கும் நடக்கும் என்று மிரட்டலுடன் அந்த நபர் பதிவிட்டிருந்ததையும் நகல் எடுத்து புகார் மனுவில் தோழர்கள் இணைத்திருந்தனர். பெரியார் முழக்கம் 18022016 இதழ்

பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம் படத்திறப்பு

பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம் படத்திறப்பு

‘சமத்துவ சமூகம் அமைப்பதற்கு பெரியாரியல் ஒன்றே தீர்வு’ என வாழ்ந்து காட்டியவர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் என்று படத்திறப்பில் தூத்துக்குடி பால்பிரபாகரன் குறிப்பிட்டார். பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் அய்யா அவர்களின் படதிறப்பு நிகழ்ச்சி பேராவூரணி ‘மெய்ச்சுடர்’ இதழ் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை வகித்து உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், ‘மெய்ச்சுடர்’ இதழ் ஆசிரியர் வெங்கடேசன், இசிஐ ஆயர் ஜேம்°, தமிழக மக்கள் புரட்சிக்கழக பொதுச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் பெருந்தொண்டர் சதாசிவம், படத்தினை திராவிடர் விடுதலைக்கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் திறந்து வைத்து நினைவஞ்சலி உரையாற்றினார். அவர் தனது உரையில், “பட்டுக்கோட்டை வளவன் அய்யா அவர்கள் திருக்குறள் மீது ஆழ்ந்த பற்றுதல் கொண்டவராகத்தான் இருந்தார். அந்த திருக்குறள் போதித்த சமத்துவ சமூகம் அமைவதற்கு பெரியாரியல் ஒன்றே...

பல்கலை பாகுபாடுகளை ஒழிக்க தோரட் குழு தந்த பரிந்துரைகள் : மதுரை கருத்தரங்கில் விளக்கம்

பல்கலை பாகுபாடுகளை ஒழிக்க தோரட் குழு தந்த பரிந்துரைகள் : மதுரை கருத்தரங்கில் விளக்கம்

3-2-2016 அன்று மாலை 5-00 மணிக்கு, மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் துரைராஜ் பீட்டர் அரங்கத்தில், எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில், ‘கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். முத்து அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கி எவிடன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் கதிர் தொடக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கவின் மலர், சமூக ஆர்வலர் ஜோசுவா ஐசக், பேராசிரியர் செம்மலர் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார். கருத்தரங்கில் ரோகித் வெமுலா வின் மரணம் குறித்தும், மத்திய பா.ஜ.க ஆட்சியின் தலித், சிறுபான்மையோர் விரோத போக்கு குறித்தும், ஏற்கனவே உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த மரணங்களைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளைச்...

‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’ – கன்யா குமார்

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கன்யா குமார் மாணவர்களிடையே ஆற்றிய உரையின் தமிழாக்கம்: எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸ். ஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களின் தேசபக்தியாகும். எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள் ளோம். இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங்பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ. அந்த விரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப் படும் சாசனத்தின் மீது எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை யில்லை. எங்களுக்கு மனுஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையுமில்லை. இந்த நாட்டிலுள்ள சாதியவாதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்...

27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு 23 ஆண்டுகள் கடந்த பின்பும் 12% மட்டுமே நிரப்பப்பட் டுள்ளது. இதை முழுமை யாகவும் முறையாகவும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பக்கோரி (13.2.2016) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட (OBC) ஊழியர்கள் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பேரமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பேராசிரியர் டாக்டர் முரளிதரன் விரிவாக இட ஒதுக்கீட்டிலும், அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறு வனங்களிலும் நடைபெறும் மோசடிகளை தனது உரையில் தோலுரித்து காட்டினார். அடுத்து சங்கர், ஐ.ஏ.எஸ்., அகாடமியின் தலைவர் சங்கர், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் எப்படி முறைகேடுகளை இவ் வரசுகள் மேற்கொள்கின்றன இதனால் உயர்சாதியினர் எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கி னார். நிறைவாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமது கண்டன...

நவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பால்பிரபாகரன் பேச்சு

நவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பால்பிரபாகரன் பேச்சு

அய்தராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி விசாரணைகேட்டும், நாகை மாவட்டம் வழுவூர் திருநாள் கொண்டச்சேரி தலித் முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டும், நீதிமன்றத்தை அவமதித்த நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும். விழுப்புரம் தனியார் கல்லூரியில் மரணமடைந்த மூன்று மாணவிகளுக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில் பிப்ரவரி 2ம் தேதி மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பாரி, திராவிடர் விடுதலைக் கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன், தமிழக மக்கள் புரட்சிக்கழக மாவட்ட செயலாளர் வி.சி.முருகையன், மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக்...

அறிவியலின் மகத்தான புரட்சி

அறிவியலின் மகத்தான புரட்சி

உலகம் ‘படைக்கப்பட்டது’; அப்படிப் படைத்தவன், எல்லாவற்றுக் கும் மேலான ‘இறைவன்’ இதுதான், அனைத்து மதங்களும் மக்களிடம் திணிக்கும் நம்பிக்கை! அறிவியல் வளர்ச்சியடையாத – அச்சத்தால் உருவாக்கப்பட்ட கடவுள், மதங்களின் கருத்துகள் ஒவ்வொன்றாக மடிந்து வீழ்ந்து வருகின்றன. அறிவியல் அனைத்துக்கும் விடைகளைத் தந்து வருகிறது. அதற்கான தேடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் – எப்படி உருவானது என்பதை ‘பெரு வெடிப்பு’ அறிவியல் கொள்கை யும், உயிர் எப்படி பரிணாமம் பெற்றது என்பதை டார்வின் கோட்பாடும் மனித குலத்துக்கு வழங்கிச் சென்றன. வானவெளியில் சூரியன், நட்சத்திரங்கள், கிரகங்கள், கோள்கள் பற்றிய ஆய்வுகள் தொடங்கின. இது வரை இந்த கண்டுபிடிப்புகள் வெளிச் சங்களாக பார்வையில் மட்டுமே தெரிகின்றனவாகவே இருந்தன. இப்போது அண்ட வெளியில் அதிர்வு களின் ஓசையைக் கேட்கும் மகத்தான கண்டு பிடிப்பு நிகழ்ந்துள்ளது. ‘சார்பியல் கோட்பாடு’ என்ற அறிவியல் கண்டுபிடிப்பை வழங்கிய அய்ன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு கோட்பாட்டை முன் வைத்தார். அது...

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

இந்து கோயில்களில் நுழைவதற்கே ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ அனைவருக்கும் பார்ப்பனர்கள் தடை போட்ட காலம் ஒன்று இருந்தது. அதுவே ‘ஆகம விதி’ – அதுவே தெய்வீக நடைமுறை என்று இறுமாப்பு பேசினர். இந்த ‘ஆகமம்’, ‘அய்தீக’ பூச்சாண்டிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தான் பெண்கள் உள்பட அனைத்துப் பிரிவினரும் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடவும் கோயில் ‘திருக்குளங்களில்’ நீராடவும் உரிமை வழங்கப்பட்டது. அதுதான் 1947ஆம் ஆண்டின் 5ஆவது சட்டமாகிய ‘ஆலய பிரவேச உரிமை’ சட்டம். ‘ஆகமம்’, ‘அய்தீகத்துக்கு’ எதிராக அப்படி ஒரு சட்டம் வராதிருக்குமானால், இப்போது கும்பகோணம் ‘மகாமகத்தில்’ முழுக்குப் போடும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். சைவ மடாதிபதிகளுக்கே கூட அந்த உரிமை கிடைத்திருக்காது. கோயில் நுழைவு உரிமை கிடைத்தாலும்கூட கோயில் ‘கருவறை’க்குள் கடவுளை நேரடியாக வணங்குவதற்கோ அல்லது உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கோ ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ மற்றும் பெண்களுக்கு உரிமை கிடையாது என்று கூறி, பார்ப்பனர்கள் தங்கள் சமூக மேலாதிக்கத்தை விட்டுத் தர மறுக்கிறார்கள்....